உங்க தங்க நகையை விற்க போறீங்களா? ஒரு நாள் முன்னாடி வித்தாலும் பல ஆயிரம் நஷ்டம்! எப்படி தெரியுமா?
Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 16:00 [IST] Share This Article
வீட்டுத் தேவைக்காகவோ அல்லது அவசர பண பிரச்சினைக்காகவோ நாம் காலம் காலமாக சேர்த்து வைத்த தங்கத்தையும் வெள்ளியையும் விற்கத் துணியும் போது, ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறோம். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த லாபத்தில் ஒரு பெரும் பகுதியை வருமான வரித்துறைக்கு வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது நம்ப முடியாத உண்மை.
தங்கம் விலை உச்சத்தைத் தொட்டு வரும் வேளையில், சரியான நேரத்தில் விற்காவிட்டால், நீங்கள் ஈட்டிய லாபத்தில் 18.2% வரை கூடுதல் வரி கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நீங்கள் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியை எத்தனை மாதங்கள் கழித்து விற்கிறீர்கள் என்பதுதான் உங்கள் கையில் எவ்வளவு பணம் மிஞ்சும் என்பதைத் தீர்மானிக்கிறது. உங்கள் உழைப்பின் பலன் வரி வடிவில் மாயமாகாமல் இருக்க, விற்பனை செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த வரி விதிகள் இதோ..

ஒரு நாள் முன்னதாக விற்பது கூட கூடுதல் வரிக்கு வழிவகுக்கும்?
நீங்கள் வாங்கிய தங்கம் அல்லது வெள்ளியை விற்பனை செய்யும்போது, கிடைக்கும் லாபத்துக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியானது நீங்கள் எவ்வளவு காலம் அந்த முதலீட்டை வைத்திருந்தீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். உங்களுடைய முதலீட்டு காலம் 24 மாதங்களுக்குள் அல்லது 2 வருடங்களுக்குள் இருந்தால், குறுகிய கால வரியாக உங்களுடைய வருமான வரி வரம்பின் படி, வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுவே 24 மாதங்களுக்கு மேல் அல்லது 2 வருடத்திற்கு மேல் வைத்திருந்தால், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 12.5% செலுத்த வேண்டியிருக்கும்(இன்டெக்சேஷன் பலன் இன்றி).
உதாரணத்திற்கு நீங்கள் விற்பனை செய்த பிசிகல் அல்லது இடிஎஃப் தங்கம் அல்லது வெள்ளியின் மூலம் 2 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டுகிறீர்கள். நீங்கள் 30% வரி ஸ்லாப்பில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் 23-வது மாதத்தில் விற்பனை செய்தால் (STGC) 2,00,000*31.2% (வரி +செஸ்)= ரூ.62,400 வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுவே 25-வது மாதம் நீங்கள் விற்பனை செய்திருந்தால் (LTGC) 2,00,000*13% (வரி+செஸ்)= ரூ.26,000 வரி செலுத்த வேண்டியிருக்கும். மேற்கண்ட கணக்கீட்டில் சுமார் 1 அல்லது 2 மாதங்கள் மட்டுமே வித்தியாசம். ஆனால் வரி விகிதத்தை பார்த்தால் 62,400 – 26,000 = 36,400 ரூபாயாகும். ஆக ஓரிரு மாதங்கள் காத்திருந்து விற்பனை செய்தாலே மிகப்பெரிய அளவிலான வரியை மிச்சப்படுத்த முடியும். இருப்பினும் அனைத்து வகையான தங்க முதலீடுகளுக்கும் இந்த வரியானது பொருந்தாது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Planning to sell your gold jewellery? Did you know selling even a day early could cost you thousands in losses? Here’s how
Selling gold before 24 months attracts 31.2% STCG tax (for 30% slab). Waiting just one more day triggers 13% LTCG tax, saving you 18.2% in taxes! Story first published: Wednesday, January 21, 2026, 16:00 [IST] Other articles published on Jan 21, 2026
