Breaking: வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!!

vadapala-1768986461

  செய்திகள்

வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, January 21, 2026, 14:39 [IST] Share This Article

வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய சென்னை நகரத்தில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்கவும் மெட்ரோ ரயில் திட்டங்கள் இன்றியமையாதவையாக மாறி இருக்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சௌகரியமாகவும் குறுகிய நேரத்திலும் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயில்கள் உதவியாக இருக்கின்றன.

ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் விமான நிலையம் முதல் செண்ட்ரல் ரயில் நிலையம், விம்கோ நகர் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. பள்ளி, கல்லூரி செல்பவர்கள் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம் எப்போது? முக்கிய அப்டேட் வெளியீடு!!

அந்த வகையில் நகரின் பெரும்பாலான பகுதிகளை இணைக்கும் வகையில் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. இதில் மிக முக்கியமானதாக இருக்கக்கூடிய பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கு மத்திய ரயில்வே வாரியம் மிக முக்கியமான இறுதி ஒப்புதலை தந்திருக்கிறது. சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த இரண்டாம் கட்ட திட்டத்தில் முழுக்க முழுக்க ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்குவது என சென்னை மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்து இருக்கிறது. இதற்கான ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.

Also Readதங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!

இதனை அடுத்து இரண்டு ரயில்களை கொண்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. ஓட்டுநரில்லா தானியங்கி ரயில்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு , ஒரு அவசர காலம் எனும் போது பயணிகள் எப்படி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வது, திடீரென ஒரு புகை ஏற்படுகிறது என்றால் ரயிலில் இருக்கக்கூடிய அவசரகால கருவிகள் எப்படி இயங்குகின்றன , வேறு என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் ரயில்களிலும் ரயில் தண்டவாளங்களிலும் செய்யப்பட்டுள்ள என்பனவற்றை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள்.

அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வடபழனியில் இருந்து பூந்தமல்லி வரை ரயிலும் இயக்கப்பட்டு இருக்கிறது. அப்போது ரயில்களில் அதிக வேகம் இருக்கிறதா , பிரேக் போட்டவுடன் எவ்வளவு தூரத்தில் சென்று ரயில் நிற்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். இது தொடர்பான அறிக்கைகளை பெற்றதை அடுத்து ரயில்வே வாரியம் இந்த பாதையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கு இறுதி ஒப்புதல் தந்திருக்கிறது.

Recommended For Youதங்கம், வெள்ளி விலை உயர்வில் லாபம் பார்க்கணுமா? முதலீடு செய்ய உகந்த Gold, Silver ETF திட்டங்கள்!! தங்கம், வெள்ளி விலை உயர்வில் லாபம் பார்க்கணுமா? முதலீடு செய்ய உகந்த Gold, Silver ETF திட்டங்கள்!!

பிப்ரவரி மாதத்தில் போரூரில் இருந்து பூந்தமல்லி வரையிலும் பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலுமான ரயில் பாதையில் இறுதி கட்ட ஆய்வு நடைபெறும். இதனை அடுத்து இந்த பாதையில் அதிகாரப்பூர்வமாக மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் 6 மாதங்களுக்கு ஓட்டுநர் மேற்பார்வையில் ரயில் இயங்கும் என்றும் பின்னர் முழுவதும் தானியங்கி ரயிலாக அதாவது ஓட்டுநரில்லாத ரயிலாக செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share This Article English summary

Chennai Metro Phase II: Poonamallee-Vadapalani Services Set to Launch Soon

Chennai Metro Rail Ltd. has received the final approval from the Railway Board to operate the Poonamallee-Vadapalani Services on the Phase II stretch from February. Story first published: Wednesday, January 21, 2026, 14:39 [IST] Other articles published on Jan 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *