95% பேர் கிரீன் சிக்னல்! 2026ல் ரிலையன்ஸ் பங்குகள் ஹிட் அடிக்குமா? CLSA கொடுத்த மெகா அப்டேட்!
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, January 21, 2026, 10:26 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தையின் ஜாம்பவான் என அழைக்கப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL), 2026-ன் தொடக்கத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கத் தயாராகிவிட்டது. உலகளாவிய முன்னணி முதலீட்டு நிறுவனமான CLSA, ரிலையன்ஸ் பங்கின் இலக்கு விலையை 1,800 ரூபாயாக உயர்த்தி முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
சமீபத்திய காலாண்டு முடிவுகளில் சில்லறை வர்த்தகம் சற்று மந்தமாக இருந்தாலும், ஜியோவின் அபார வளர்ச்சி மற்றும் புதிய எரிசக்தி பிரிவில் அம்பானி காட்டி வரும் வேகம் ஆகியவை இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, ஜியோ ஐபிஓ (Jio IPO) குறித்த எதிர்பார்ப்புகள் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது. ஜியோ ஐபிஓ குறித்த அறிவிப்பும் ரிலையன்ஸ் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் ஊக்குவிக்கலாம் என்ற எண்ணமும் இருந்து வருகிறது. இந்த சூழலில் சர்வதேச தரகு நிறுவனமானது ஏன் இப்பங்கை பரிந்துரை செய்துள்ளது. இந்த 2026-ம் ஆண்டு உங்கள் போர்ட்ஃபோலியோவிற்கு ஒரு பொற்காலமாக அமையுமா வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

சர்வதேச தரகு நிறுவனம் கணிப்பு?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு குறித்து 37 நிபுணர்கள் ஆய்வு செய்துள்ள நிலையில், சி எல் எஸ் ஏ உள்பட 7 பேர், அதன் இலக்கு விலையை 1800 ரூபாய் அல்லது அதற்கு மேலாக நிர்ணயம் செய்துள்ளனர். இதனிடையே கடந்த வர்த்தக தினத்தின் முடிவு விலையில் இருந்து சுமார் 29% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பரந்து விரிந்த இந்த நிறுவனத்தின் வணிக சூழலானது, அதற்கு மேலும் வலிமையை கூட்டி வருகிறது. இதனிடையே நடப்பு ஆண்டின் மத்தியில் ஜியோவில் ஐபிஓ பற்றிய அறிவிப்பு வரலாம். இது ரிலையன்ஸின் முக்கிய அறிவிப்பாக இருக்கும். இது அதன் பங்கு விலையிலும் சாதகமான போக்கை ஏற்படுத்தலாம்.
சர்வதேச தரகு நிறுவனமானது 2027ம் ஆண்டில் ஜியோவின் மதிப்பை 161 பில்லியன் டாலராகவும், 2028ல் 190 பில்லியன் டாலர்களாகவும் உயர்த்தி கணித்துள்ளது. இது உலகளாவிய நிறுவனங்களை விட 15% கூடுதல் பிரீமிய மதிப்பாகும். இது ப்ரீ கேஸ் ப்ளோ அடிப்படையில் ஜியோ ஒரு லாபகரமான நிறுவனமாக மாறுவதை இது உறுதி செய்கிறது.
95%-பேர் கிரீன் சிக்னல்!
ஏற்கனவே பரந்து விரிந்துள்ள வர்த்தகர்களுக்கு மத்தியில், ரிலையன்ஸின் குயிக் காமர்ஸ், எஃப்,எம்,சி,ஜி., மற்றும் மீடியா வர்த்தகம் ஆகியவற்றில் ரிலையன்ஸின் ஆர்வம், மேலும் இப்பங்கிற்கு சாதகமான ஒன்றாக மாற்றக் கூடும். இந்த சூழலில் தான் இப்பங்கு குறித்து 37 பேர் பரிந்துரை செய்துள்ளனர். அதில் 35 பேர் வாங்கலாம் என்றும், இருவர் விற்பனை செய்யலாம் என்று ரேட்டிங் கொடுத்துள்ளனர். இது சுமார் 95% பேர் இப்பங்கிற்கு சாதகமாக ஆதரவு கொடுத்துள்ளதையே காட்டுகிறது.
இருப்பினும் புதிய எரிசக்தி (New Energy) மற்றும் ரீடெய்ல் பிரிவின் மதிப்பீடுகளை சிஎல்எஸ்ஏ சற்றே குறைத்துள்ளது. இதனால் ஆரம்பத்தில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் ஜியோவின் ஐபிஓ மற்றும் பணப்புழக்கம் இந்தப் பங்கை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என கணித்துள்ளது. ஆக சரியான நிபுணர்களின் ஆலோசனையுடன் இப்பங்கை வாங்குவது குறித்து யோசிக்கலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Is Reliance Industries a Must-Buy Now? Why 35 Out of 37 Analysts Are Betting?
CLSA projects a 29% upside for Reliance industries, targeting Rs1,800 by 2026. This surge is fueled by Jio’s massive valuation, retail recovery, and upcoming New Energy catalysts. Story first published: Wednesday, January 21, 2026, 10:26 [IST] Other articles published on Jan 21, 2026
