Breaking: வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க!

befunky-collage-2026-01-20t101202-050-1768884136

  Market update

வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க!

Market Update oi-Pugazharasi S By Published: Tuesday, January 20, 2026, 10:13 [IST] Share This Article

இந்திய பங்குச்சந்தை ஆனது சர்வதேச சந்தையின் எதிரொலியாக தற்போது ஒரு நிலையற்ற சூழலில் இருந்தாலும், டெக்னிக்கல் ரீதியாக வலுவாக இருக்கும் சில பங்குகள், முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் கணிசமான லாபத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி நிறுவனங்களான ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் ஜிங்க், டிவிஎஸ் மோட்டார், ஐஐஎஃப்எல் பைனான்ஸ், சுந்தரம் பைனான்ஸ், டிசிபி பேங்க் ஆகிய பங்குகள் அவற்றின் முக்கிய சப்போர்ட் நிலைகளில் இருந்து மீண்டு, புதிய உயர்வை எட்ட வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அடுத்த 1 முதல் 2 வார காலத்திற்குள் லாபம் தரும் நோக்கில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த 6 பங்குகள் எவை, அவற்றின் இலக்கு விலை மற்றும் ஸ்டாப் லாஸ் குறித்த விவரங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வெறும் 15 நாட்களில் கல்லா கட்டணுமா? நிபுணர்களின் இந்த 6 பங்குகள் மேல ஒரு கண் வைங்க!

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்கை (1,716 ரூபாய்) வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள மாஸ்டர் கேபிடல் சர்வீஸ் தரகு நிறுவனம், டார்கெட் விலையை 1,855 ரூபாயாக கொடுத்துள்ளது. ஸ்டாப் லாஸ் விலையை 1,615 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
ஒரு மாத காலமாக இருந்து வந்த ஒருங்கிணைந்த லெவலில் இருந்து, தற்போது ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ள ஐடி பங்கானது, தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முக்கிய மூவிங் ஆவரேஜ், எம் ஏ சி டி உள்ளிட்ட டெக்னிக்கல் குறிகாட்டிகளும் தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்பதை காட்டுகின்றன. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக பையிங் இன்ட்ரஸ்ட் விகிதமும் அதிகரித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்
டிவிஎஸ் மோட்டார் கம்பெனியை 3,702 ரூபாயில் வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், டார்கெட் விலையை 3,950 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 3,522 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
டிவிஎஸ் பங்கானது அதன் முக்கிய சப்போர்ட் விலையில் இருந்து ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், அதில் பையிங் இன்ட்ரஸ்ட் விகிதமும் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து இப்பங்கானது அசெண்டிங் டிரெண்ட் லைனுக்கு மேலாகவே வர்த்தகமாகி வருகிறது. மேலும் ஹையர் ஹை அண்ட் ஹையர் லோ பேட்டர்ன் தொடர்ந்து இருப்பதால், இதுவும் தொடர்ந்து இப்பங்கானது ஏற்றத்தில் இருப்பதையே காட்டுகிறது. ஆக சரியான வாய்ப்பு கிடைக்கும்போது இப்பங்கை வாங்கலாம்.
ஐஐஎஃப்எல் பைனான்ஸ்
ஐஐஎஃப்எல் பைனான்ஸ் பங்கை 651 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்யும் தரகு நிறுவனம், டார்கெட் விலையை 722 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 607 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. தொடர்ந்து வலுவான ஏற்றம் காணலாம் எனும் விதமாக காணப்படும் பங்கில், ஹையர் ஹை அண்ட் ஹையர் லோ பேட்டர்ன் ஆனது தொடர்ந்து கொண்டுள்ளது. மேலும் தொடர்ந்து முக்கிய ஆவரேஜ்-களுக்கு மேலாகவும் காணப்படுகிறது. சந்தையில் பலவீனமாக போக்கு நிலவி வந்தாலும், இப்பங்கானது சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தரம் பைனான்ஸ்
சுந்தரம் பைனான்ஸ் பங்கை 5,152 ரூபாய்க்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், டார்கெட் விலையை 5,450 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 5,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
டெக்னிக்கலாக தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் பங்கானது, தொடர்ந்து முக்கிய மூவிங் ஆவரேஜ்கள் மற்றும் முக்கிய சப்போர்ட் விலைகளுக்கு மேலாகவும் காணப்படுகிறது. மேலும் புல்லிஷ் புல்பேக் பேட்டர்னும் பார்ம் ஆகியுள்ளது இப்பங்கானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என்பதையே காட்டுகிறது. அதோடு ஆர் எஸ் ஐ-யும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் சூழலில், தொடர்ந்து ஏற்ற பாதைக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிபி பேங்க்
டிசிபி பேங்க் பங்கை 191 ரூபாயில் வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், டார்கெட் விலையை 206 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 183 ரூபாயாகவும் கொடுத்துள்ளது.
தொடர்ந்து டெக்னிக்கலாக அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படும் பங்கில், ஹையர் ஹை அண்ட் ஹையர் லோ பேட்டர்ன் ஆனது பார்ம் தொடர்ந்து கொண்டுள்ளது. இது தொடர்ந்து இப்பங்கானது ஏற்றம் காணலாம் என்பதையே காட்டுகிறது. மேலும் 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்-களுக்கு மேல் காணப்படும் பங்கானது முந்தைய பிரேக் அவுட் விலைக்கு மேலாக சப்போர்ட் எடுத்தும் திரும்பியுள்ளது. ஆர் எஸ் ஐயும் 72.28 என்ற நிலையில் வலுவான ஏற்றம் காணலாம் என்பதையே காட்டுகிறது. இந்த சூழலில் தான் தரகு நிறுவனமானது இப்பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஜிங்க்
தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படும் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்கானது, தினசரி சார்ட் பேட்டர்னில், ஹையர் ஹை அண்ட் ஹையர் லோ பேட்டர்ன் தொடர்ந்து கொண்டுள்ளது. ரவுண்டிங் பேட்டர்னும் பார்ம் ஆகியுள்ளது தொடர்ந்து இப்பங்கானது ஏற்றத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளது. இப்பங்கின் முக்கிய பிரேக் அவுட் விலையான 656 ரூபாய்க்கு மேலாக காணப்படும் பங்கில், வால்யூம்கள் தொடர்ந்து அதிகமாக காணப்படுகிறது. பையிங் இன்ட்ரஸ்ட் விகிதமும் அதிகமாக காணப்படுகிறது. அதோடு முக்கிய மூவிங் ஆவரேஜ்-களுக்கு மேலாகவே பங்கானது காணப்படும் சூழலில் தான் இப்பங்கை 660 ரூபாயில் வாங்கலாம் என தரகு நிறுவனமானது பரிந்துரை செய்துள்ளது. டார்கெட் விலையாக 715 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ஆக 634 ரூபாயையும் வைக்க பரிந்துரை செய்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Which are the 6 technical stock picks recommended by experts for the next 1-2 weeks, including HCL Tech and Hindustan Zinc?

Experts recommend HCL Tech, Hindustan Zinc, TVS Motor, IIFL Finance, Sundaram Finance, and DCB Bank for 1-2 weeks, citing bullish technical breakouts and strong momentum indicators. Story first published: Tuesday, January 20, 2026, 10:13 [IST] Other articles published on Jan 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *