2030க்குள் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தே மாறப் போகுது – நல்ல செய்தி சொன்ன எஸ்பிஐ!!

india8-1768817609

  செய்திகள்

2030க்குள் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தே மாறப் போகுது – நல்ல செய்தி சொன்ன எஸ்பிஐ!!

News oi-Devika Manivannan By Published: Monday, January 19, 2026, 15:44 [IST] Share This Article

உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நாடாக இந்தியா உருப்பெற்று இருக்கிறது. உற்பத்தி ரீதியாகவும் சரி, சேவை ரீதியாகவும் சரி பல்வேறு துறைகளிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பொருளாதரமாக இருக்கிறது. இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா Upper Middle Income நாடாக மாறும் என்ற அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

உலக வங்கி ஒரு நாட்டின் நிகர வருமானம் மற்றும் மக்கள் தொகைக்கு அதனை பகிர்வது ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வகைகளாக உலக நாடுகளை பிரித்து வைத்துள்ளது. Low income, lower-middle income, upper-middle income மற்றும் high-income என பிரித்துள்ளது. இதில் இந்தியா தற்போது lower-middle income நாடுகளின் பட்டியலில் உள்ளது. இன்னும் 4 ஆண்டுகளில் இந்தியா இந்த பட்டியலில் அடுத்த கட்டத்திற்கு ,முன்னேறி upper-middle income நாடாக மாறிவிடும் என எஸ்பிஐ கணித்துள்ளது.

2030க்குள் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தே மாறப் போகுது – நல்ல செய்தி சொன்ன எஸ்பிஐ!!

தற்போது சீனா ,இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் இணைய போவதாக எஸ்பிஐ வெளியிட்டு இருக்கும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2030 ஆம் ஆண்டு அதாவது இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் தனி நபர் வருமானம் 4000 டாலர்களாக உயரும், அதாவது 3,63,564 ரூபாயாக உயரும் என தெரிவிக்கிறது.

Also Readஓசூர் விமான நிலையத் திட்டத்தை மறுப்பது அநீதி; தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் பாகுபாடு?: திமுக எம்பிஓசூர் விமான நிலையத் திட்டத்தை மறுப்பது அநீதி; தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் பாகுபாடு?: திமுக எம்பி

தற்போது இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது 2700 டாலர்களாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 2.45 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட நாடாக தான் இருந்தது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டில் தான் இந்தியா lower-middle income அதாவது குறைந்த மத்திய வருவாய் கொண்ட பொருளாதார நாடாக மாறியது.

Recommended For Youபத்திரப்பதிவில் வரும் அதிரடி மாற்றம்!! இனி சார்பதிவாளர் அலுவலகமே போகத் தேவையில்லை..!!பத்திரப்பதிவில் வரும் அதிரடி மாற்றம்!! இனி சார்பதிவாளர் அலுவலகமே போகத் தேவையில்லை..!!

சுதந்திரம் அடைந்த காலத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது வெறும் 90 டாலராக இருந்து 2007 ஆம் ஆண்டு 910 டாலராக உயர்ந்தது. இதன் பிறகு தான் இந்தியாவின் பொருளாதாரம் வேகம் எடுக்க தொடங்கியது. 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதாரத்தை எட்ட இந்தியாவிற்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் அதன் பிறகு 7 ஆண்டுகளில் இந்தியா 2 ட்ரில்லியன் பொருளாதார நாடாக மாறியது. தற்போது 4 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கிறது.

இந்த வேகத்திலேயே இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் பட்சத்தில் 2027 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக மாறிவிடும் என எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Share This Article English summary

India Set to Join China as Upper-Middle-Income Economy by 2030: SBI Report

India is projected to reach $4,000 per capita GNI by 2030, transitioning to upper-middle-income status alongside China and Indonesia, according to a State Bank of India report. Story first published: Monday, January 19, 2026, 15:44 [IST] Other articles published on Jan 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *