வருமான வரி உச்ச வரம்பை உயர்த்துவாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்? எகிறும் எதிர்பார்ப்பு!!
News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Monday, January 19, 2026, 14:56 [IST] Share This Article
பணவீக்கத்தால் உண்மையான வருவாய் குறைவதால், ரூ. 24 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான 30 சதவீத வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என வரித்துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு, செலவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும் என கூறுகின்றனர். சம்பளம் அதிகரித்தாலும்,பணவீக்கம் காரணமாக பல நடுத்தரக் குடும்பங்களுக்கு வாங்கும் சக்தி குறைந்துள்ளது. வீடுகள், சுகாதாரம், கல்வி, அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் செலவை ஆகியவை அதிகரித்துள்ளன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வாழ்க்கைச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வரி வரம்புகள் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர வேண்டமா என்ற கேள்வி சம்பளம் பெறுவோர் மத்தியில் எழுந்துள்ளது. பணவீக்கத்திற்கேற்ப சரிசெய்யப்பட்ட வரி வரம்புகளின் தேவை மிக முக்கியமானதாக உள்ளது.டி.எம். ஹரிஷ் & கோ நிறுவனத்தின் அனில் ஹரிஷ், “குறைந்த வருமான வரி வரம்புகள், இளம் பொறியியல் பட்டதாரிகள் போன்றோரை முன்கூட்டியே அதிக வரி வரம்புக்குள் தள்ளுகின்றன. இது வரியைப் பங்களிப்பாகக் கருதாமல், ஒரு சுமையாகப் பார்க்கும் போக்கிற்கு வழிவகுக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

எனினும், வரி நிபுணர்கள், சில்லறை பணவீக்கக் குறியீட்டுடன் (CPI) இணைத்து ஆண்டுதோறும் வரிகளைச் சரிசெய்யவும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விரிவான மறுஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கின்றனர். கிராண்ட் டார்ன்டன் பாரத் நிறுவனத்தின் பங்குதாரரான அகில் சந்தனா, வரி வரம்பை ரூ. 35 லட்சமாக உயர்த்த முன்மொழிந்துள்ளார். வாழ்க்கைச் செலவுகளுடன் ஒப்பிடும்போது சம்பள உயர்வு குறைவாக உள்ளதால், வரி செலுத்துவோர் உண்மையான செல்வத்தைப் பெறாமலேயே அதிக வரி விகிதங்களை எதிர்கொள்ளும் ‘ப்ராக்கெட் க்ரீப்’ (bracket creep) நிலை உருவாகிறது என்று அவர் வாதிடுகிறார்.
விலையேற்றத்தின் போது வரி வரம்புகள் மாறாமல் இருந்தால், வாங்கும் சக்தி குறைகிறது. இதனால் மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை வரியாகச் செலுத்துவர். இந்தியாவின் வரி அமைப்பின் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால், அது பணவீக்கத்தைக் கணக்கில் கொள்வதில்லை. இது வாங்கும் சக்தியை அரித்து அநீதியை உருவாக்குகிறது. வரி வரம்பை உயர்த்துவது குறுகியகால வருவாய் இழப்புகளையும் நீண்டகால பொருளாதார ஆதாயங்களையும் சமநிலைப்படுத்தும் என்கிறார்.
சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ் நிறுவனத்தின் வரித்துறைத் தலைவர் எஸ்.ஆர். பட்நாயக், “அரசு நேரடி வரி வருமானத்தை இழந்தாலும், நடுத்தர வர்க்கத்தினரின் செலவினப் பணம் நுகர்வை மேம்படுத்தி, கூடுதல் ஜி.எஸ்.டி. வருவாயை உருவாக்கும். இது பணவீக்க அழுத்தங்களையும் குறைக்கும்,” என்று தெரிவித்தார்.
Also Read
தங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!
வரி வரம்பு உயர்வு சேமிப்பு, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாகும். இது வரி ஏய்ப்பைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதன் மூலம் வரி இணக்கத்தையும் ஊக்குவிக்கும். நுகர்வோர் கைகளில் அதிக பணம், கார்கள், மின்னணுப் பொருட்கள் போன்ற தேவையைத் தூண்டி வணிக வளர்ச்சிக்கு உதவும்.
அனில் ஹரிஷ், “வரி வரம்புகளைச் சரிசெய்வது, அதிக வருமானம் ஈட்டுபவர்கள் தண்டிக்கப்பட்டதாக உணர்வதற்குப் பதிலாக, மதிக்கப்படுவதாக உணரும் வகையில் கருத்தாக்கங்களை மாற்றும்,” என்றார். நகர்ப்புறங்களில் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் அதிக பணம் சேர்வதன் மூலம் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி உயர்வு, சம்பளம் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என குறிப்பிட்ட பிரிவினரின் நிதிச் சிரமங்களுக்கு நிவாரணம் அளிக்கும். எஸ்.ஆர். பட்நாயக் கூறியது போல, TDS குறைவதால், சம்பளம் பெறுவோருக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கும் முதலீடுகளுக்கும் கூடுதல் மாதாந்திர சம்பளம் கிடைக்கும்.
இது போனஸ் மீதான அதிக வரி விதிப்பைத் தவிர்த்து, நகர்ப்புற மருத்துவ, கல்விச் செலவுகளை ஈடுகட்ட உதவும். சுயதொழில் செய்பவர்களுக்கு வரி வரம்பு உயர்வு, வணிகத்தில் மறுமுதலீடு செய்ய ஒரு மூலதனப் பாதுகாப்பை உருவாக்கி, லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை வரியாக இழப்பதைத் தடுக்கும்.ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இது பயனளிக்கும்; அவர்களின் நிரந்தர வருமானம், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டு, சேமிப்பு நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும். இது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடம் அதிக பணத்தை விட்டுச்செல்லும்.
Recommended For You
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறுமா? பரபரக்கும் நிதி அமைச்சகம்!!
இந்த வர்க்கத்தினர் தான் வீடுகள், கார்கள், மின்னணுப் பொருட்களுக்கான செலவுகளை முன்னெடுத்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றனர். வரித்துறை நிபுணர்கள், வருங்கால வைப்பு நிதி, சுகாதாரக் காப்பீடு, கல்விக் கட்டணம், வீட்டுக் கடன்கள் போன்றவற்றுக்கான பிடித்தங்களை விரிவுபடுத்தப் பரிந்துரைக்கின்றனர். வீட்டுக் கடன்களுக்கான வட்டிக்கு தற்போதுள்ள ரூ. 2 லட்சம் உச்சவரம்பை, தற்போதைய சொத்து விலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ரித்திகா நாயர், கடந்த கால மூலதன ஆதாயக் கணக்கீடுகளைப் போலவே, வரி வரம்புகளுக்கும் பணவீக்கக் குறியீட்டை மீண்டும் கொண்டு வரப் பரிந்துரைக்கிறார். இது விலைப்போக்குகளின் அடிப்படையில் தானியங்கி ஆண்டு புதுப்பித்தல்களை அனுமதிக்கும்.
அகில் சந்தனா, ஒவ்வொரு 3-5 வருடங்களுக்கும் தானியங்கி பணவீக்கத்துடன் இணைந்த வரி வரம்பு மறுஆய்வுக்கு அரசு உறுதியளிக்கலாம் என்றார். சம்பளம் பெறுபவர்களுக்கான நிலையான விலக்கு (standard deduction) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வரி செலுத்துவோருக்கான பிரிவு 87A தள்ளுபடியை அதிகரிப்பது பரந்த நிவாரணத்தை வழங்கும் என்கிறார்.
Share This Article English summary
India Inflation Linked Income Tax Brackets To Support Middle Class
Public finance experts in India advocate inflation adjusted income tax brackets to shield middle income households from bracket creep, while boosting savings, consumption and economic growth. Story first published: Monday, January 19, 2026, 14:56 [IST]
