பற்றி எரியும் கிரீன்லாந்து விவகாரம்!! டிரம்பின் அறிவிப்பால் தாறுமாறாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 19, 2026, 8:40 [IST] Share This Article
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான கிரீன்லாந்து விவகாரம் பற்றி எரிய தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறது. எனவே இன்றைய தினம் இந்தியாவிலும் தங்கம் வெள்ளியின் விலை பெரும் அளவில் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வாரந்தோறும் புது பிரச்சினையை கிளப்பி விடுகிறார். இந்த ஆண்டு தொடங்கிய முதல் வாரத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தினார். அடுத்த வாரத்தில் ஈரான் விவகாரத்தில் தலையிட்டு புவிசார் பதற்றத்தை உருவாக்கினார். இந்த வாரம் கிரீன்லாந்து விவகாரத்தை பற்ற வைத்துள்ளார். டிரம்ப் கிரீன்லாந்தை வாங்கி விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

டிரம்பின் கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை அன்று டிரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 10% வரி விதிப்பு என்ற அறிவிப்பை வெளியிட்டு மிரட்டினார். பதிலுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அமெரிக்கா மீது வரி விதிக்க தயாராகி வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இந்த விவகாரம் தங்கம் , வெள்ளி விலையை வரலாற்று உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உலக சந்தையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கி திரும்பி இருக்கிறார்கள். எனவே உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.
Also Read
2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!
உலக சந்தையில் ஸ்பாட் கோல்ட் விலை 1.6 சதவீதம் உயர்ந்து வரலாற்று உச்சமான 4689.39 டாலர்களை எட்டியது. அமெரிக்கா சந்தையில் பிப்ரவரி மாதத்திற்கான கோல்ட் ஃப்யூச்சர்ஸ் 1.8% உயர்ந்து 4677 டாலர்களாக வர்த்தகமானது. அதேவேளையில் வெள்ளியின் விலை தடாலடியாக 4.4 சதவீதம் உயர்ந்தது. உலக சந்தையில் ஸ்பாட் சில்வர் ஒரு அவுன்ஸ் 93.85 டாலர்களாக வர்த்தகமாகிறது. இது தன்னுடைய வரலாற்று உச்சமான 94 டாலர்களை எட்டியது.
அமெரிக்க பங்குச்சந்தையில் ஸ்டாக் பியூச்சர்ஸ் மற்றும் டாலர் மதிப்புகள் சரிவடைய தொடங்கின. தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால் மற்ற பங்குகள் மற்றும் டாலர் உள்ளிட்டவற்றின் மதிப்பு குறைய தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே அமெரிக்க மத்திய வங்கியின் துணைத் தலைவரான மிச்சல் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மோசமான நிலையில் இருக்கிறது எனவே மேலும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
Recommended For You
தங்கம் விலையை குறைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்பு!!
ஏற்கனவே சர்வதேச சூழல்கள் தங்கத்தின் விலையை உயர்த்தி இருக்கின்றன. தற்போது அமெரிக்க மத்திய வங்கியும் வட்டியை குறைப்பதாக தெரிவித்திருப்பதால் மேற்கொண்டு தங்கத்தின் விலையை தான் இது உயர்த்தப் போகிறது. சர்வதேச சூழல்கள் அனைத்துமே தங்கம் வெள்ளி விலையை உயர்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன. கடந்த 2 வாரங்களாக ஈரான், வெனிசுலா விவகாரங்களால் தங்கம் விலை உயர்ந்தது. தற்போது அந்த பதற்றம் தணிந்துள்ளதால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கிரீன்லாந்து விவகாரம் தங்கம், வெள்ளி விலையை பெருமளவில் உயர்த்திவிட்டது.
Share This Article Story first published: Monday, January 19, 2026, 8:40 [IST] Other articles published on Jan 19, 2026
