இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம், வெள்ளி விலை!! இனி வரும் நாட்களிலாவது விலை குறையுமா?

goldf67-1768626704

  செய்திகள்

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம், வெள்ளி விலை!! இனி வரும் நாட்களிலாவது விலை குறையுமா?

News oi-Devika Manivannan By Published: Saturday, January 17, 2026, 10:43 [IST] Share This Article

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினம் ஏற்றம் கண்டிருக்கிறது. சர்வதேச காரணிகள் இந்தியாவில் தங்கத்தின் விலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

சென்னையை பொருத்தவரை தொடர்ந்து ஆறு வர்த்தக நாட்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் ஜனவரி 16ஆம் தேதி ஆன நேற்று சற்றே குறைந்தது. இது இப்படியே நீடிக்கும் எனது பார்க்கப்பட்ட நிலையில். இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து இருக்கிறது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கு விற்பனையானது , அதுவே இன்று 50 ரூபாய் விலை உயர்ந்து 13,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம், வெள்ளி விலை!! இனி வரும் நாட்களிலாவது விலை குறையுமா?

ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 400 ரூபாய் விலை உயர்ந்து 1,06,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 10 கிராம் 1,32,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் இன்றைய தினம் கிராமுக்கு 54 ரூபாய் விலை உயர்ந்து 14,487 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1, 15, 896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராம் 11,090 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 88,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒன்றாம் தேதி அன்று 12,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இன்றைய தினம் 13,280 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இன்று வரை தங்கத்தின் விலை ஒரு கிராம் 840 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரனுக்கு 6,720 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.

Also Read2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

தங்கத்தை விட வெள்ளியின் விலை நம்மை தலை சுற்ற வைக்கிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 4 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 306 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் இன்று 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 4 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து 3, 10,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 256 ரூபாய்க்கு விற்பனையானது. அதுவே இன்றைய தினம் 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 54 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 54,000 ரூபாயும் என வெள்ளியின் விலை உயர்வு கண்டிருக்கிறது.

Recommended For You14 நாட்களில் 20% வளர்ச்சி!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!! 2026இலும் வெள்ளி தான் சூப்பர் ஸ்டாரா?14 நாட்களில் 20% வளர்ச்சி!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!! 2026இலும் வெள்ளி தான் சூப்பர் ஸ்டாரா?

தங்கம், வெள்ளியின் விலை இப்படியே நீடிக்குமா என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது. ஈரான் பதற்றம் சற்றே தணிந்திருப்பதால் எதிர்வரும் நாட்களில் அமெரிக்கா எடுக்கக்கூடிய நடவடிக்கையை பொறுத்து தங்கம், வெள்ளியின் விலையில் மாற்றத்தை காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share This Article English summary

After declining for a day, Gold and Silver rate in Chennai increases today

After declining for a day, Gold and Silver rate in Chennai increases today. Due global factors gold rate is increasing. Here is what to expect in the coming days. Story first published: Saturday, January 17, 2026, 10:43 [IST] Other articles published on Jan 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *