அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

tax-1768386156

  செய்திகள்

அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

News oi-Devika Manivannan By Published: Wednesday, January 14, 2026, 15:55 [IST] Share This Article

இந்தியாவில் தற்போது இரண்டு முறைகளில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்கிறோம். பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகள் உள்ளன. இதில் பழைய வரி கணக்கு முறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் புதிய வரி நடைமுறையின் கீழ் இந்த பெரும்பாலான வரி சலுகைகள் கிடைப்பதில்லை ஆனால் இதில் வருமான வரி உச்ச வரம்பு என்பது அதிகமாக இருக்கிறது.

புதிய வருமான வரி கணக்கு முறையில் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு கணக்கே காட்ட தேவையில்லை, அது தவிர ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு வரி சலுகைகள் வரி கழிவுகள் கிடைப்பதால் அவர்களுக்கும் வருமான வரி என்பது பூஜ்ஜியமாக தான் இருக்கிறது.

அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

இந்தியாவை சேர்ந்த ஏராளமான நபர்கள் ஒரு சின்ன டிரிக்கை பயன்படுத்தி வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து வருகிறார்கள் . அதாவது ஒரு வீட்டு கணவர் வேலை செய்கிறார் மனைவி வீட்டை பராமரிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த கணவர் தன்னுடைய வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை தன்னுடைய மனைவியின் பெயரில் வந்த வருமானமாக காட்டி வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுகிறார்.

இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வருமானத்தை மனைவி பெயரில் திருப்பிவிட்டு இரண்டு வருமான வரி கணக்காக தாக்கல் செய்கிறார்கள். இது வரி சேமிக்க அவர்களுக்கு உதவி செய்கிறது. ஒரு வேளை வருமான வரி துறை இதனை கண்டறிந்து விசாரணை நடத்தினால் வீட்டை பராமரிக்கும் மனைவிக்கு எப்படி இவ்வளவு வருமானம் என ஆய்வு செய்து அபராதம் விதிக்கலாம். ஆனால் வருமான வரி துறைக்கு அதனைவிட பெரிய முதலைகளை பிடிக்க வேண்டிய வேலை இருக்கிறதே.

Also Read8ஆவது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்கள் சம்பளம் பல மடங்கு உயர்வது கியாரண்டி..!! இது தான் காரணமா?8ஆவது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்கள் சம்பளம் பல மடங்கு உயர்வது கியாரண்டி..!! இது தான் காரணமா?

இந்நிலையில் தான் இந்திய பட்டய கணக்காளர்களுக்கான அமைப்பான ஐசிஏஐ திருமணமான தம்பதிகள் கூட்டு முறையில் வருமான வரி கணக்கு செய்யும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது. அதாவது ஒரு தனிநபருக்கு ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை. இதுவே அவர்கள் தம்பதியாக தாக்கல் செய்யும்போது ஆண்டுக்கு 8 லட்சம் வரை வருமான வரி கிடையாது என அறிவிக்கலாம் என பரிந்துரை செய்திருக்கிறது.

இரண்டு முறை அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இரண்டு முறை இந்த கணக்குகளை எல்லாம் ஆய்வு செய்வதற்கு மாற்றமாக தம்பதிகளுக்கு கூட்டாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் முறையை கொண்டு வரும்போது வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதும் அதனை செயலாக்கம் செய்வதும் எளிமையாகும் என்றும் வரி ஏய்ப்புகளை தடுக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஒரு குடும்பம் ஆனால் பல வருமான வரி கணக்கு தாக்கல் என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது.

Recommended For Youஅமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா!! பிரதமர் மோடியுடன் பராசக்தி படக் குழுவினரும் பங்கேற்பு!!அமைச்சர் எல்.முருகன் வீட்டில் பொங்கல் விழா!! பிரதமர் மோடியுடன் பராசக்தி படக் குழுவினரும் பங்கேற்பு!!

அமெரிக்காவில் இந்த கூட்டு வருமான வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் இருப்பதாகவும் இதனை இந்தியாவிலும் கொண்டு வரும் போது பொதுமக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டுகிறது. அதாவது மக்கள் கைகளில் கூடுதலாக 80,000 கோடி ரூபாய் வரை சேர்ந்து அவர்கள் அதனை செலவு செய்து மறைமுகமாக பொருளாதாரத்தை ஊக்குவிப்பார்கள் என்கிறது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் தான் இது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடுமா இல்லையா என்பது தெரிய வரும்.

Share This Article English summary

ICAI Proposes Joint Tax Filing for Married Couples to Curb Evasion

ICAI suggests to allow married couples in India to file joint income tax returns under the new regime, doubling exemptions like ₹4 lakh to ₹8 lakh per couple and adjusting slabs accordingly. Story first published: Wednesday, January 14, 2026, 15:55 [IST] Other articles published on Jan 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *