பொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 11, 2026, 14:40 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை திட்டம். நாட்டிற்கே முன்னோடி திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து பல மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியிருப்பது தற்போது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கொண்டு கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு இனிப்பான செய்தியை விரைவில் அறிவிப்பார் என தெரிவித்திருக்கிறார். பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கடந்த டிசம்பரில் தான் விரிவாக்கம் செய்தது. தற்போது தமிழ்நாட்டில் 1.30 கோடிக்கும் அதிகமான பெண்கள் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் அந்த நிகழ்ச்சியிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
Also Read
பொங்கல் பரிசு தொகை: வெளியூரில் தங்கி இருக்கும் அரிசி அட்டைதாரர்கள் என்ன செய்ய வேண்டும்?
அரசு மகளிர் உரிமைத் தொகையை எப்போதிலிருந்து உயர்த்தி வழங்கப் போகிறது எவ்வளவு உயர்த்தி வழங்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமி பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு நற்செய்தி வரும் எனக் கூறியிருப்பது மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கிறது.
2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு மகளிர் வாக்குகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது மகளிர் உரிமை தொகை திட்டம். 2023ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டுவிடுகிறது.
Recommended For You
பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த திட்டத்தில் தங்களுக்கு கிடைக்கக்கூடிய பணம் குழந்தைகளின் கல்வி, மருத்துவ செலவு , சிறு சேமிப்பு என பல்வேறு விஷயங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என ஏராளமான பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூடிய விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன.
Share This Article English summary
Minister Periyasamy says CM Stalin to make an important announcement for women soon
Minister I Periyasamy says that CM Stalin to make an important announcement for women in this Pongal festival, people expect this could be Magalir urimai thokai hike. Story first published: Sunday, January 11, 2026, 14:40 [IST] Other articles published on Jan 11, 2026
