நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது?

chat3-1767864244

  செய்திகள்

நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது?

News oi-Devika Manivannan By Published: Thursday, January 8, 2026, 14:56 [IST] Share This Article

உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஜெனரேட்டிவ் ஏஐ செயலியாக சாட் ஜிபிடி தொடர்ந்து தன்னை தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இந்த சாட் ஜிபிடியில் மக்கள் அதிகமாக கேட்கும் கேள்வி எதை பற்றி தெரியுமா? உடல் ஆரோக்கியம்.

வாரந்தோறும் சாட் ஜிபிடியில் 230 மில்லியன் பேர் உடல் ஆரோக்கியம் குறித்த கேள்விகளை தான் கேட்கின்றனர். இது உலகம் முழுவதுமே தங்களின் லாங்குவேஜ் மாடலை பகுப்பாய்வு செய்து பார்த்ததில் இந்த விஷயம் தெரிய வந்ததாக கூறும் சாட் ஜிபிடி இதற்காகவே ChatGPT Health என்ற பிரத்தியேக வசதியை கொண்டு வந்திருக்கிறது.

நம் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கப் போகும் AI.. வந்தாச்சு ChatGPT Health..எப்படி பயன்படுத்துவது?

சாட் ஜிபிடிக்குள் செல்லும் போது ChatGPT Health தனி டேப்பில் காட்டும். பயனர்கள் ChatGPT Health-ஐ தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உதவியாளராக பயன்படுத்தி கொள்ளலாம் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதுமே உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கேள்விகளும் தேடல்களும் அதிகமாக இருப்பதால் தான் இப்படி ஒரு தனி வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாம்.

சாட் ஜிபிடியில் வழக்கமான நமது கலந்துரையாடல்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ChatGPT Healthஇல் தங்களின் மருத்துவ பதிவுகளை பதிவேற்றலாம், போனில் இருக்கும் ஃபிட்னஸ் மற்றும் வெல்னஸ் செயலிகளை இணைத்து கொள்ளலாம். எனவே நீங்கள் மருத்துவம் ஆரோக்கியம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் போது ChatGPT Health உங்களின் மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்து தனிப்பயனாக்கப்பட்ட பதில்களை வழங்கும். அதாவது பொதுவான பதில்களாக இல்லாமல் உங்களுக்கான பதில்களாக இருக்கும்.

நம் மருத்துவ ஆவணங்களை பதிவேற்றம் செய்வதன் மூலம் மருத்துவ ஆலோசனைக்காக தேதி, எப்போது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவற்றையும் டிராக் செய்து நமக்கு அலர்ட்டுகளை கொடுக்குமாம்.

Also Readதிருப்பதி: காலையில் டிக்கெட் புக் செய்தால் மாலையிலேயே தரிசனம்!! கோயிலில் இனி டிக்கெட் கிடைக்காது!!திருப்பதி: காலையில் டிக்கெட் புக் செய்தால் மாலையிலேயே தரிசனம்!! கோயிலில் இனி டிக்கெட் கிடைக்காது!!

மக்கள் தங்களுடைய சுய சுகாதார தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் ஒரு தெளிவான பாதையை வகுப்பது தான் தங்களின் நோக்கம் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது . உங்கள் ஆரோக்கியத்திற்கான ஒரு தனிப்பட்ட முறையிலான அசிஸ்டெண்டாக ChatGPT Health செயல்படும் என தெரிவித்து இருக்கிறது.

Recommended For Youவிசா ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவீர்கள்!! இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் திடீர் வார்னிங்!!விசா ரத்து செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவீர்கள்!! இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் திடீர் வார்னிங்!!

தற்போதைக்கு குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது விரைவில் அனைவருக்கும் விரிவாக்கம், செய்யப்படவில்லை. அதே வேளையில் பொதுமக்கள் ChatGPT Health-ஐ மருத்துவர்களுக்கு மாற்றாக பார்க்க கூடாது என்ற விளக்கத்தையும் ஓபன் ஏஐ தந்துள்ளது. அதாவது உங்களுடைய நோயை கண்டறிந்து அதற்கு சிகிச்சை தரும் சேவையை இது கொடுக்காது. அதற்கு நீங்கள் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும். ஆனால் மருத்துவ பராமரிப்புக்கான ஒரு உதவியாளராக உங்களுக்கு இது இருக்கும் என தெரிவிக்கிறது. வழக்கம் போல நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும் அவற்றை நீங்கள் சரியாக ஃபாலோ செய்கிறீர்களா இல்லையா என்பதை கவனித்து உடல் ஆரோக்கியத்தை பேண உதவும் ஒரு அசிஸ்டெண்ட் போல இது செயல்படும் என கூறியுள்ளது.

Share This Article English summary

What is ChatGPT Health: OpenAI’s New Tool for Personalized Wellness Queries?

OpenAI launched ChatGPT Health, a dedicated tab for secure health queries that connects medical records and wellness apps without replacing doctors. Story first published: Thursday, January 8, 2026, 14:56 [IST] Other articles published on Jan 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *