வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!!

renty-1767781427

  செய்திகள்

வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, January 7, 2026, 15:55 [IST] Share This Article

இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில் வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒயிட் பீல்டு, கோரமங்களா போன்ற பகுதிகளில் எல்லாம் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வேண்டுமென்றால் சராசரியாக 50000 ரூபாய் வரை வாடகை கேட்கிறார்கள்.

வாடகை ஒருபுறம் இருந்தாலும் அட்வான்ஸ் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் போடக் கூடிய நிபந்தனைகள் வாடகைக்கு வீடு தேடுவோரை எரிச்சலூட்டுகின்றன. சமூக வலைத்தளங்களில் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்து தொடர்ச்சியாக வாடகைதாரர்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு நபர் ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!!

ரெடிட் தளத்தில் அந்த நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் பெங்களூருவில் நான் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டினை வாடகைக்காக தேடி வருகிறேன். அப்போது ஒரு வீட்டு உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு whatsappஇல் பேசிய விவரங்களை ஸ்கிரீன்ஷாட் உடன் பதிவு செய்திருக்கிறார். மேலும் ஒரு பெங்களூரு வீட்டு உரிமையாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த பதிவு வீட்டு உரிமையாளர்களின் டிமாண்டுகளை சுட்டிக்காட்டுகிறது.

அந்த பதிவில் அவர் இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டினை தேடுகிறேன். உங்களுடைய அப்பார்ட்மெண்ட்டை வந்து நான் நேரில் பார்க்கலாமா என கேட்கிறார். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர் வாடகை மாத வாடகை 60 ஆயிரம் ரூபாய் 5000 ரூபாய் பராமரிப்பு தொகை என கூறுகிறார். அதுமட்டுமின்றி செக்யூரிட்டி டெபாசிட்டாக 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்திருக்கிறார்.

Also Readஆல் ஏரியாவிலும் கில்லி!! அட்வான்ஸ் புக்கிங்கில் முதலிடத்தில் ஜனநாயகன்!! பராசக்திக்கு இவ்வளவு தானா?ஆல் ஏரியாவிலும் கில்லி!! அட்வான்ஸ் புக்கிங்கில் முதலிடத்தில் ஜனநாயகன்!! பராசக்திக்கு இவ்வளவு தானா?

குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது அந்த வீட்டில் அவர்கள் வசிக்க வேண்டும் என அந்த வீட்டு உரிமையாளர் கூறுகிறார். அதற்கு இந்த நபர் வாடகை ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் டெபாசிட் தொகையை குறைக்க வேண்டும் அல்லவா கர்நாடக மாநில சட்டத்தின் படி இரண்டு மாத வாடகை தானே வாடகையாக டெபாசிட் ஆக கேட்க வேண்டும் என கூறி அந்த பதிவினை முடித்து விட்டார்.

Recommended For Youபொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!!பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!!

இதனை பதிவு செய்திருக்கும் அந்த இளைஞர், பெங்களூருவில் நான் இரண்டு அல்லது மூன்று படுக்கையை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தேடி வருகிறேன் . உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் வீட்டு உரிமையாளர்கள் போடும் நிபந்தனைகளை எல்லாம் பலரும் பதிலாக வெளியிட்டுள்ளனர்.பெங்களூருவில் வீட்டு உரிமையாளர்கள் செக்யூரிட்டி டெபாசிட் என்ற பெயரில் 1 வருட மற்றும் 2 வருட வாடகையை கேட்கிறார்கள், மற்ற ஊர்களிலும் இப்படி தானா என பலரும் வினவியுள்ளனர்.

Share This Article English summary

“Yet Another Bengaluru Landlord Demands Rs 10 Lakh Deposit for 2BHK – Chat Goes Viral”

A Bengaluru man’s WhatsApp chat with a landlord demanding exorbitant rental terms for a 2BHK apartment has gone viral on Reddit. Story first published: Wednesday, January 7, 2026, 15:55 [IST] Other articles published on Jan 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *