1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!

magalir2-1767754596

  செய்திகள்

1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, January 7, 2026, 8:29 [IST] Share This Article

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

1000 ரூபாய் தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி மகளீரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கிறது என ஏராளமான பெண்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!

தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஒன்று 1,30,69,831 பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர். கடந்த டிசம்பரில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முக்கிய இடம் வகிக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்ற வாக்குறுதி தான் கேம் சேஞ்சராக இருந்தது. பெருமளவிலான மகளிர் வாக்குகளை திமுகவுக்கு பெற்றுத்தந்தது.

Also Readபொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!!

எனவே இந்த தேர்தலிலும் இந்த மகளிர் உரிமைத் தொகை தொடர்பான வாக்குறுதி இரண்டு கட்சிகளுக்கும் பெரிய அளவில் மகளிர் வாக்குகளை பெற்று தரும் ஒரு காரணியாக இருக்கப்போகிறது. திமுகவை பொறுத்தவரை தங்களுடைய தேர்தல் வாக்குறுதியிலேயே மகளிர் உரிமை தொகையை உயர்த்தி அறிவிப்பு வழங்கலாம் என சொல்லப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்டு ஒருவேளை தேர்தலில் திமுக அரசு வெற்றி பெறும் பட்சத்தில் இந்த ஆண்டிலேயே இந்த ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தற்போது கிடைக்கக்கூடிய 1000 ரூபாய் 1500 ரூபாயாகவும் அல்லது 2000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இல்லை என்றால் திமுக அரசு தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்கலாம் என சொல்லப்படுகிறது. அதாவது ஒரு மாதம் மட்டும் வழங்கிவிட்டு அதன் பின்னர் தேர்தலை எதிர்கொள்வதற்கு திட்டமிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!! பொங்கல் பரிசு தொகையில் டிவிஸ்ட் வைத்த அரசு: உங்களிடம் இந்த ரேஷன் கார்டு இருந்தா பணம் கிடைக்காது!!

அதிமுகவும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் நிச்சயமாக சேர்க்கும். கண்டிப்பாக 2000 ரூபாய் என்ற அறிவிப்பாகவே அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இரண்டு கட்சியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிர் உரிமை தொகை உயரப் போவது நிச்சயம். அந்த வகையில் இந்த ஆண்டு மகளிர் உரிமைத் தொகை பெறக்கூடிய பெண்களுக்கு சிறப்பான ஒரு ஆண்டாக அமையப்போகிறது.

Share This Article English summary

Magalir Urimai Thokai will be increased Pre-election or post-election?

Tamilnadu CM Stalin has announced that Magalir Urimai Thokai will be increased now the speculations are going round that the amount may be increased even before the election announcement. Story first published: Wednesday, January 7, 2026, 8:29 [IST] Other articles published on Jan 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *