சாப்பாடுக்கு ரூ.2 லட்சம், டிராவலுக்கு ரூ.29 லட்சம்!! வைரலாகும் பெங்களூரு தம்பதியின் இன்ஸ்டா பதிவு!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 11:25 [IST] Share This Article
தற்போது சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எல்லாம் கண்டன்ட் கிரியேட்டர்களாக ஏராளமானவர்கள் தங்களுக்கு என ஒரு சேனலை உருவாக்கி தங்களின் வாழ்க்கை முறைகளையும், தங்களின் தனி திறன்களையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் தம்பதி சகிதமாக சேனல்களை உருவாக்கி கன்டென்ட் வெளியிடக்கூடியவர்கள் உண்டு.
பெங்களுருவை சேர்ந்த இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஒரு இளம் தம்பதி 2025 ஆம் ஆண்டில் தாங்கள் எதற்கெல்லாம் எவ்வளவு பணத்தை செலவிட்டோம் என்பது குறித்து வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்விருவரும் பெங்களூரில் வசிக்கின்றனர்.தாங்கள் எதற்கெல்லாம் எவ்வளவு பணத்தை செலவு செய்தோம் என்பதை குறிப்பிட்டு ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அதாவது வாடகை, மளிகை பொருட்கள், உணவு , டிராவலிங், ஃபிட்னஸ் என ஒவ்வொன்றையும் அவர்கள் தனித்தனியாக பதிவு செய்திருக்கிறார்கள். இதன்படி ஒரு ஆண்டுக்கு அவர் பெங்களூருவில் வீட்டு வாடகையாக மட்டுமே 5 லட்சம் ரூபாயை செலுத்துகிறார்கள்.
Also Read
தங்கத்தை கொடுத்து கடன் வாங்கலாம் ஆனா வட்டி கட்ட தேவையில்லை!! இப்படி ஒரு ஆப்ஷன் இருக்கா?
ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்தும் இந்த தம்பதியினர் பர்சனல் டிரெயினர் ஒருவரை நியமனம் செய்து தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள். இதற்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள் . மளிகை பொருட்கள், ஆன்லைனில் சேலட் ஆர்டர் செய்வது, சப்ஸ்கிரிப்சன்களுக்கு என 2.5 லட்சம் ரூபாட் செலவு செய்திருக்கிறார்கள். அடுத்ததாக வீட்டு வேலைக்கு ஆட்களை நியமனம் செய்தது , தாங்கள் குடியிருக்கும் பகுதியில் பராமரிப்புக்காக பணம் கொடுத்தது உள்ளிட்டவருக்காக ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயில் செலவு செய்கிறார்கள் மற்ற செலவினங்கள் 1.3 லட்சம் என குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களுடைய செலவின பட்டியலிலேயே அதிகபட்ச செலவாக அவர்கள் குறிப்பிட்டிருப்பது டிராவல்தான். இவருவரும் பல்வேறு ஊர்களுக்கும் சுற்றுலா சென்று அங்கு இருக்கக்கூடிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள். 2025 ஆம் ஆண்டில் மட்டும் இவர்கள் 6 கண்டங்களில் உள்ள 13 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள். 63 முறை விமானங்களில் பயணத்திருக்கிறார்கள் . இதன்படி அவர்கள் 29 லட்சம் ரூபாயை சுற்றுலாவுக்காக மட்டுமே செலவிட்டு இருக்கிறார்கள் .
மொத்தமாக 2025 ஆம் ஆண்டில் 47 லட்சம் ரூபாய் தாங்கள் செலவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் இதுபோல எதற்கெல்லாம் பணத்தை செலவு செய்திருக்கிறோம் என்பதை பார்த்து சரி செய்து வருகிறோம் என குறிப்பிட்டு இருக்கிறார்கள் அவர்களுடைய இந்த வீடியோ பலரது கவனத்தை பெற்றிருக்கிறது.
Recommended For You
EPFO அப்டேட்: தனியார் நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! இனி 5 மடங்கு அதிக பணம் கிடைக்கும்!!
பலரும் இவ்வளவு பணம் செலவு செய்கிறீர்களே நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பியிருக்கின்றனர். உங்களைப் போல பல நாடுகளுக்கு டிராவல் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக்கு தெரிந்து கொள்ளலாமா என ஒரு நபர் கேட்டிருக்கிறார். ஒரு நபர் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். ஒரு நபர் நீங்க என்ன அம்பானிக்கா வேலை பார்க்கிறீங்க டிராவலுக்கே இவளோ செலவு பண்ணி இருக்கீங்களே என வினவியுள்ளார்.
Share This Article English summary
Bengaluru Couple’s Viral 2025 Expenses: ₹2.5 Lakh on Food, ₹29 Lakh on Travel Spark “Ambanis?” Jokes from Netizens
A Bengaluru couple has gone viral on social media after sharing their staggering 2025 expense breakdown, revealing ₹2.5 lakh spent on food and a whopping ₹29 lakh on travel alone. Story first published: Tuesday, January 6, 2026, 11:25 [IST] Other articles published on Jan 6, 2026
