பொங்கல் தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்.. எங்கு, எப்படி பெறுவது? டோக்கன் சிஸ்டம் எப்படி செயல்படும்..?!

pongal-1767517317

  செய்திகள்

பொங்கல் தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்.. எங்கு, எப்படி பெறுவது? டோக்கன் சிஸ்டம் எப்படி செயல்படும்..?!

News oi-Prasanna Venkatesh By Updated: Sunday, January 4, 2026, 14:33 [IST] Share This Article

பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருத்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது, பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்க தொகையை அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சரி இந்த 3000 ரூபாய் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி வாங்குவது..?

அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்.. எங்கு, எப்படி பெறுவது? டோக்கன் சிஸ்டம் எப்படி செயல்படும்..?!

பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு ஆகியவை அடங்கும். இதனுடன் வேட்டி, சேலை வழங்கப்படும். இந்த தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் 2.22 குடும்பங்கள் பயன்பெறும். பண்டிகைக்கு முன்பு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ரொக்க பரிசு அறிவிப்பு
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.3,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இந்த ரொக்கம் பண்டிகை தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். இது குடும்பங்களுக்கு நிதி உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு மற்றும் செலவு
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பரிசுக்கு மொத்தம் ரூ.693.61 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு. இது குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

விநியோக ஏற்பாடுகள்
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்க பரிசு, பொங்கல் தொகுப்பு, வேட்டி சேலைகள் அனைத்தும் நியாயவிலை கடைகள் வழியாக வழங்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை முதல் தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கனை வழங்குவார்கள். இதன் மூலம் தகுதி உடைய நபர் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கம் பரிசு ஆகியவை பெறுவார்கள்.

டோக்கனில் ரேஷன் கடை பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், அட்டை எண், தெரு, டோக்கன் எண் விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தை நோட் செய்து கொண்டு, உங்களது பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளலாம். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்கம் பரிசு ஆகியவை 8 அல்லது 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.

Share This Article English summary

Tamil Nadu Pongal Gift: Rs.3,000 Cash + Rice Kit for 2.23 Crore Ration Card Holders – How to Claim via Token System

Tamil Nadu Pongal Gift: Rs.3,000 Cash + Rice Kit for 2.23 Crore Ration Card Holders – How to Claim via Token System Story first published: Sunday, January 4, 2026, 14:32 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *