பரந்தூர் விமான நிலையம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்டுமான பணி தொடங்குமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 11:14 [IST] Share This Article
சென்னை வேலை வாய்ப்பு ரீதியாகவும் , தொழில் உற்பத்தி ரீதியாகவும் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஐபோன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி, ஐடி துறை என பல துறைகளிலும் அடுத்தடுத்த இலக்குகளை எட்டி வருகிறது.
சென்னை வளர்ச்சிக்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் தேவை என முடிவு செய்து தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு முடிவு செய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை பொருத்தவரை அருகிலேயே ஸ்ரீபெரும்புதூர் , பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பிளஸ் பாயிண்ட்கள் இருக்கின்றன. எனவே தான் இங்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது சிறப்பு சரியான முடிவாக இருக்கும் என தமிழ்நாடு அரசு கருதுகிறது.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் இந்த விமான நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டது. ஆனால் தமிழ்நாடு அரசுக்கு தற்போது பெரிய சிக்கலாக இருப்பது விமான நிலையத்திற்கான நிலத்தை கையகப்படுத்துவது தான். பரந்தூர் விமான நிலையத்திற்கு மொத்தமாக 5,746 ஏக்கர் நிலங்கள் தேவை. இதில் தற்போது வரை 3,400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது . அதாவது 59 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது மீதமுள்ள 41 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 3400 ஏக்கர் நிலத்தில் 1900 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது 1500 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது . மீதமுள்ள நிலத்தை கையகப்படுத்திவிட்டால் அடுத்ததாக கட்டுமான பணிகளை தொடங்கும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே நிலத்தை கையகப்படுத்தி முடித்து விட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது.
Also Read
பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரொக்க பணம் உண்டா? இல்லையா? #Pongal2026
தொடக்கம் முதலே பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதில் தான் அரசுக்கு பல்வேறு சவால்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் குறிப்பிட்ட சில கிராமங்களை சேர்ந்த மக்கள் விமான நிலையம் அமைத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் தங்களுடைய வேளாண்மை பாதிக்கப்படும் என்பதற்காக தொடர்ச்சியாக நிலம் வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர் . இவர்களுக்கு அரசு தரப்பில் அதிகபட்ச தொகை இழப்பீடாக கொடுக்கப்படுவதாக அறிவித்த போதிலும் இன்னும் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
Recommended For You
மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? என்ன சொல்கிறது மத்திய அரசு?
இதுதான் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாவதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தால் தான் ஒப்பந்த புள்ளி பெறப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்திடம் விமான நிலைய கட்டுமான பணியை ஒப்படைக்க முடியும். இருந்தாலும் அரசு தற்போதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை ஒருபுறமும், ஒப்பந்தப்புள்ளி கோரும் பணியை மறுபுறமும் நடத்த முடிவு செய்திருக்கிறதாம்.
இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு 2026 ஜனவரியிலேயே முதல் கட்ட கட்டுமான பணிகளை தொடங்கி 2028 டிசம்பர் டிசம்பருக்குள் பணிகளை முடிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணிகளே தாமதமாவதால் பரந்தூர் விமான நிலையப் பணிகள் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணமே இருக்கின்றன.
Share This Article English summary
Parandur Airport: Tamilnadu government has acquired 59% of the required land
Parandur Airport: As of December 31st, 2025 tamilnadu government has acquired 3,400 Acres land which is 59% of the total land required. Story first published: Saturday, January 3, 2026, 11:14 [IST] Other articles published on Jan 3, 2026
