வார இறுதிநாளில் குட்நியூஸ்!! சர்ரென குறைந்த தங்கம் விலை!! யூடர்ன் அடித்த வெள்ளி விலை!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, January 3, 2026, 10:02 [IST] Share This Article
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று குறைந்திருக்கிறது. 2025ஆம் ஆண்டில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை கடந்தது. தங்கத்தின் விலை இனி ஏறுமுகம் தான் என மக்கள் நினைத்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதி விலை குறைந்து மக்களுக்கு ஆறுதலை தந்தது.
ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சென்றது. இதனால் தொடர்ந்து விலை குறைவு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டாம் தேதியே தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. பின்னர் மூன்றாம் தேதியான இன்று லேசாக குறைந்துள்ளது.

சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,440 ரூபாய்க்கும் ஒரு சவரன் 99, 520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் தேதி அன்று ஒரு கிராம் 12,580 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,00,640 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. மூன்றாம் தேதியான இன்று தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு 60 ரூபாயும் ஒரு சவரனுக்கு 480 ரூபாயும் விலை குறைந்து 1,00,160 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
Also Read
பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த ஆண்டு ரொக்க பணம் உண்டா? இல்லையா? #Pongal2026
சனிக்கிழமை இன்று விலை குறைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமையும் இதே விலைக்கு தான் விற்பனை செய்யப்படும் என்பதால் இந்த இரண்டு நாட்களுக்கு குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்கிறது . 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் 13,658 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,09,264 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1, 36,580 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .
Recommended For You
மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? என்ன சொல்கிறது மத்திய அரசு?
இன்றைய தினம் வெள்ளியின் விலை சரிவடைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு நான்கு ரூபாய் விலை குறைந்து 256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு கிராம் 285 ரூபாய் என வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டது. கடந்த ஆண்டில் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் லாபம் தந்த ஒரு முதலீடாக வெள்ளி மாறியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெள்ளி விலை ஏறுவது இறங்குவதுமாக இருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று 256 ரூபாயாக இருந்த ஒரு கிராம் வெள்ளியின் விலை இரண்டாம் தேதி 260 ரூபாயாகவும் இன்று மீண்டும் 256 ரூபாயாகவும் இருக்கிறது.
அடுத்த கட்டமாக உலக அரசியல் போக்கு, புவி சார் பதட்டங்கள், மோதல்கள் ஆகியவை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றை பொறுத்து தங்கத்தின் விலை போக்கு மாறும். இந்த ஆண்டும் தங்கம், வெள்ளி விலை ஏறுமுகமாக இருக்கும் என்பதே பலரது கணிப்பு ஆகும்.
Share This Article English summary
Gold and Silver prices see sudden decline in Chennai today
Gold and Silver prices see sudden decline in chennai. But banks and financial institutions predict another bullish year for gold and Silver. Story first published: Saturday, January 3, 2026, 10:02 [IST] Other articles published on Jan 3, 2026
