2 நாளில் 14% சரிவு! ‘டிவிடெண்ட் கிங் ஐடிசி-க்கு என்னாச்சு? இது முதலீடு செய்ய சரியான நேரமா?

befunky-collage-2026-01-02t185809-922-1767360611

  Market update

2 நாளில் 14% சரிவு! ‘டிவிடெண்ட் கிங் ஐடிசி-க்கு என்னாச்சு? இது முதலீடு செய்ய சரியான நேரமா?

Market Update oi-Pugazharasi S By Published: Friday, January 2, 2026, 19:00 [IST] Share This Article

பங்குச் சந்தையானது என்னதான் ஆட்டம் கண்டாலும், பெரிதாக அதை அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் ஒரு பங்கு ஐடிசி என முதலீட்டாளர்கள் பலரும் நம்பி கொண்டிருந்த நிலையில், ஒரே ஒரு வரி உயர்வானது அந்த நம்பிக்கையை உடைத்து எரிந்துள்ளது.

வெறும் இரண்டே நாளில் 14% சரிந்துள்ள ஐடிசி பங்கானது, பலரது கனவுகளில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. ஆனால் ஒரு சிறந்த நிறுவனமானது சரிவை சந்திக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் ஒரு கேள்வியை எழுப்புவார்கள். அது பயந்து ஒதுங்க வேண்டிய நேரமா அல்லது அடிமட்ட விலையில் கிடைக்கும் என்பதால் வாரி வாங்கிக் கொள்ள வாய்ப்பா என்று?

அரசின் வரி உயர்வால் சரிந்த ஐடிசி பங்கை வாங்கிப் போடலாமா, ஐடிசி-யின் எதிர்காலம் எப்படியிருக்கும்.. இப்போதும் இது இந்தியாவின் டிவிடெண்ட் ராஜாவாக நீடிக்குமா, முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

2 நாளில் 14% சரிவு! 'டிவிடெண்ட் கிங் ஐடிசி-க்கு என்னாச்சு? இது முதலீடு செய்ய சரியான நேரமா?

ஏன் சரிவு?

இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஐடிசி பங்கானது பாதுகாப்பான பங்குகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதன் டிவிடெண்ட் சலுகைகள் மற்றும் சந்தை பங்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசானது புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரியை திடீரென உயர்த்தியுள்ள நிலையில், இந்த சரிவானது வந்துள்ளது.

தரகு நிறுவனங்களின் கணிப்பு என்ன?

மத்திய அரசின் வரி அதிகரிப்பு மத்தியில் ஐடிசி பங்கு குறித்து, நுவாமா தரகு நிறுவனம் வாங்கலாம் என்பதில் இருந்து ஹோல்டு செய்யலாம் எனவும், அதன் 12 மாத இலக்கு விலையை 534 ரூபாயில் இருந்து 415 ரூபாயாக குறைத்துள்ளது. இதுமட்டுமல்ல மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனமும் நியூட்ரல் என டவுன் கிரேட் செய்துள்ளதோடு, இலக்கு விலையையும் 400 ரூபாயாக கொடுத்துள்ளது. அதோடு கோல்ட்மேன் சாச்ஸ்ம் ஜேபி மார்கன், மார்கன் ஸ்டான்லி உள்ளிட்ட 11 தரகு நிறுவனங்கள் ஐடிசி பங்கை டவுன் கிரேட் செய்துள்ளன.

கவனிக்க வேண்டியது என்ன?

பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த வரி மாற்றம், ஐடிசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய சவாலாகும். வரிச்சுமை அதிகரிப்பானது, கள்ளச்சந்தையில் சிகரெட்டுகளின் புழக்கத்திற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கும் நுவாமா தரகு நிறுவனம், நிறுவனம் லாப வரம்பை தக்க வைத்துக் கொள்ள 20% வரையில் விலை அதிகரிப்பு செய்ய வேண்டியிருக்கும். கிளாசிக் மற்றும் கோல்ட் பிளேக் போன்ற பிரீமியம் பிராண்டுகளுக்கு இது சிகரெட் ஒன்றுக்கு 2 – 5 ரூபாய் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். சிகரெட் பிரிவில் வரிச் சவால் இருந்தாலும், அதை முழுமையாக ஐடிசி கைவிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் உணவுப் பொருட்கள் பிரிவில் வரிச் சீரமைப்பு நிறுவனத்திற்குச் சாதகமாக உள்ளது. மேலும் செஞ்சுரி கையகப்படுத்தல் மற்றும் புகையிலை இலைகளின் குறைவான கொள்முதல் விலை ஆகியவை வரும் ஆண்டுகளில் லாபத்திற்கு ஓரளவு கைகொடுக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஐடிசி நிறுவனத்தின் டிவிடெண்ட் சலுகை மற்றும் லாப பகிர்வு ஆகியவை ஐடிசி பங்கு விலையை ஒரு கட்டத்திற்கு மேல் சரிய விடாமல் பாதுகாக்கும் என தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது. தற்போதைய சூழலில் இப்பங்கானது 350 ரூபாய் என்ற நிலையில் காணப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

14% Crash in 2 Days: Is India’s Dividend King ITC Still a Smart Buy or a Value Trap?

ITC’s 14% drop follows a steep tobacco tax hike. While high dividends provide a safety net, 20% price hikes may hurt sales. Monitor for stability before buying the dip. Story first published: Friday, January 2, 2026, 19:00 [IST] Other articles published on Jan 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *