Breaking: நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!

tidel1-1767174858

  செய்திகள்

நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, December 31, 2025, 15:25 [IST] Share This Article

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் டைடல் பார்க்குகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.

தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் மாவட்டங்களுக்கு என பிரத்தியேக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. பல்வேறு உற்பத்தி ஆலைகளும் மாவட்டம் தோறும் நிறுவப்படுகின்றன. இது தவிர அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை கிடைக்கும் வகையிலும் மினி டைடல் பார்க்குகளை கட்டி வருகிறது.

நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!

அந்த வகையில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் புதிதாக டைடல் பார்க்குகள் கட்டப்பட உள்ளன . இந்த டைடல் பார்க்குகளை மினி ஐடி பார்க்குகள் என்றும் அழைக்கலாம். இவை கட்டப்பட்டால் அந்த பகுதியில் ஐடி சார்ந்த வேலை வாய்ப்புகள் அதிகமாகும். எனவே இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே ஐடி வேலைகள் சாத்தியமாகி அந்தந்த மாவட்ட வளர்ச்சிக்கும் உதவும்.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டைடல் நியோ ஐடி பூங்காக்களை கட்டமைப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இவற்றை மேலாண்மை செய்யும் டைடல் நிறுவனம் திருநெல்வேலி ,கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் டைடல் ஐடி பூங்காக்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது.

Also Readபொங்கல் பரிசு தொகுப்பு: ஒரு நாளைக்கு 400 பேருக்கு விநியோகம்!! ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!!பொங்கல் பரிசு தொகுப்பு: ஒரு நாளைக்கு 400 பேருக்கு விநியோகம்!! ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு!!

இந்த மூன்று மாவட்டங்களிலுமே தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த ஐடி பூங்காக்கள் கட்டமைக்கப்பட உள்ளன . இந்த ஐடி பூங்காக்கள் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்போது ஐடி சார்ந்த வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு அவர்களின் மாவட்டங்களிலேயே கிடைக்கும். எனவே வேலை வாய்ப்புக்காக அவர்கள் சொந்த ஊர்களையும் உறவினர்களையும் குடும்பத்தினரையும் விடுத்து சென்னை போன்ற நகரங்களுக்கு வர வேண்டிய தேவை இருக்காது.

Recommended For Youதங்க நகைகளை தலை முழுகும் இந்தியர்கள் !! டிரெண்டையே மாற்றிய இளசுகள்!! எல்லாம் நன்மைக்கே!!தங்க நகைகளை தலை முழுகும் இந்தியர்கள் !! டிரெண்டையே மாற்றிய இளசுகள்!! எல்லாம் நன்மைக்கே!!

தமிழ்நாட்டில் ஏற்கனவே விழுப்புரம் , சேலம் , தஞ்சை ஆகிய பகுதிகளில் டைடல் நியோ எனப்படும் மினி ஐடி பார்க்குகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அண்மையில் தான் வேலூரில் டைடல் பூங்கா கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் டைடல் பார்க் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகரில் டைடல் பூங்கா கட்டுவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகி அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article English summary

Tirunelveli, Kanyakumari and Virudhunagar to get Tidel IT Parks

Tidel has floated tenders for construction of Tidel Neo IT Parks at Tirunelveli, Kanyakumari and Virudhunagar . Story first published: Wednesday, December 31, 2025, 15:25 [IST] Other articles published on Dec 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *