ரூ.10,000 மூலதனத்தில் Manyavar என்ற பல கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய ரவி மோடி!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, December 30, 2025, 16:20 [IST] Share This Article
இந்தியாவில் தற்போது திருமண நிகழ்வுகள் குறிப்பாக திருமணத்திற்கான ரிசப்ஷன் போன்ற நிகழ்வுகள் என்றாலே பெரும்பாலான ஆண்கள் நாடிச் செல்வது Manyavar பிராண்ட் ஆடைகளை தான் . அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பிராண்டாக மன்யவார் மாறி இருக்கிறது.
தன்னுடைய தாயிடம் இருந்து பெற்ற வெறும் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டை உருவாக்கி வெற்றியடைந்திருக்கிறார் ரவி மோடி. தன்னுடைய 13 வயதிலேயே தொழில் உலகில் கால் பதித்தவர் தான் ரவி மோடி . இவரது தந்தை ஒரு சிறிய துணிக்கடை நடத்தி வந்தார். எனவே 13 வயதில் இருந்தே தன்னுடைய தந்தையுடன் கடைகளுக்கு சென்று தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார்.

குறிப்பாக ஒரு துணியை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் , இந்திய மக்களுக்கு எந்த வகையிலான நூல்களில் தயாரிக்கப்படக்கூடிய ஆடைகளுக்கு வரவேற்பு இருக்கிறது, சந்தையில் போக்கு எப்படி இருக்கிறது, எந்த காலத்தில் எந்த வகையிலான துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன அவற்றை எங்கிருந்து கொள்முதல் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் சிறுவயதிலிருந்தே படிப்படியாக கற்றுக் கொண்டார். இதுதான் பின்னாலில் அவரை இந்த துறையில் மிகப்பெரிய ஒரு தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது.
இந்த தொழில் அனுபவத்தை தன்னுடைய தாயாரிடம் கூறிய அவர் இந்தியாவின் மிகப்பெரிய ஒரு ஃபேஷன் பிராண்டை நான் உருவாக்கப் போகிறேன் நீங்கள் எனக்கு ஒரு தொகையை கடனாக கொடுங்கள் எனக் கேட்டு பத்தாயிரம் ரூபாய் பணத்தை பெற்றிருக்கிறார். அப்படி அவர் பெற்ற பத்தாயிரம் ரூபாய் தான் தற்போது பல கோடி ரூபாயாக மாறி இருக்கிறது.
Also Read
அதெல்லாம் ஒரு காலம்!! இன்னைக்கு ஒரு காபி வாங்குற காசுக்கு ஒரு வேளை சாப்பாடே கிடைச்சிருக்கே!!
2002 ஆம் ஆண்டு ரவி மோடி கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு வேதாந்த் பேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆண்களுக்கான திருமண மற்றும் பண்டிகை கால ஆடைகளுக்கு பெரிய சந்தை இருக்கிறது ஆனால் பெரிய அளவிலான பிராண்ட் இல்லை என்பதை கண்டுபிடித்தார். இதனை அடுத்து Manyavar என்ற பிராண்டின் மூலம் ஆண்களுக்கான ethnic ஆடைகளை விற்பனை செய்ய தொடங்கினார் .பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 253 நகரங்களில் 660 கடைகளை நிறுவியிருக்கிறது.
Recommended For You
அரசு ஊழியர்களுக்கான Gratuity குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி!! யாருக்கு இரண்டு Gratuity கிடைக்கும்?
இது தவிர 17 சர்வதேச கடைகளையும் செயல்படுத்தி வருகிறது. 2011 ஆம் ஆண்டு முதன் முறையாக துபாயில் இந்த நிறுவனம் தன்னுடைய முதல் நேரடி விற்பனை கடையை தொடங்கியது. ரவி மோடியை பொருத்தவரை பெரிய அளவில் பொது இடங்களில் தோன்றாத நபர். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 2.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவராக இடம்பெற்றிருக்கிறார்.
Manyavar நிறுவனம் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 576 ரூபாயாக இருந்து வருகிறது. 1.37% டிவிடெண்ட் தரக்கூடிய ஒரு பங்காகவும் இது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 14,136 கோடி ரூபாய் ஆகும்.
Share This Article English summary
Ravi Modi: From Mother’s Rs 10,000 Loan to Building Manyavar’s Empire
Ravi Modi transformed a modest Rs 10,000 loan from his mother into Manyavar, a billion-dollar ethnic wear empire. His journey highlights perseverance in India’s wedding fashion market Story first published: Tuesday, December 30, 2025, 16:19 [IST]
