META-வின் மாஸ்டர் பிளான்! சிங்கப்பூர் Manus AI-ஐ வாங்கியது ஏன்? ஜூக்கர்பெர்க்கின் கனவு பலிக்குமா?
World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 16:58 [IST] Share This Article
சாட்ஜிபிடி (ChatGPT) எல்லாம் வெறும் ஆரம்பம் தான், இனி வரப்போவது தான் உண்மையான ஆட்டம் எனலாம். கடந்த சில ஆண்டுகளாக ஏஐ (AI) துறையில் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்குப் பின்னால் இருந்த மெட்டா, தற்போது ஒரு மாஸ்டர் திட்டத்தின் மூலம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த, ஏஐ தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றி வரும் Manus AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தை சுமார் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கியுள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க்.
இது சாதாரண கையகப்படுத்தல் அல்ல. மனிதர்களைப் போலவே சுயமாக சிந்தித்து வேலைகளைச் செய்யும் ஏஐ ஏஜென்ட்கள்’ (AI Agents) யுகத்திற்கு மெட்டா அதிகாரப்பூர்வமாக தாவியுள்ளது. ஒரு மெசேஜ் அனுப்பினால் பயணத் திட்டத்தை போடுவது முதல், உங்களுக்காக ஒரு வெப்சைட்டையே உருவாக்குவது வரை அனைத்தையும் இந்த ‘Manus’ ஒற்றை ஆளாக செய்து முடிக்கும் என கூறப்படுகிறது. ஜுக்கர்பெர்க்கின் கனவான “Personal Superintelligence” என்ற அம்சமானது, இனி உங்கள் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்குள் வரப்போகிறது. மெட்டாவின் இந்த மாஸ்டர் பிளான் ஏஐ ரேஸில் மற்ற நிறுவனங்களுக்கு செக் வைக்குமா? Manus AI-ல் அப்படி என்ன ஸ்பெஷல்? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

என்ன சிறப்பம்சம்?
ஏஐ துறையில் கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், மெட்டா நிறுவனம் சிங்கப்பூரைச் சேர்ந்த மானுஸ் (Manus) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்த தொகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இதன் இந்திய மதிப்பு சுமார் 16,600 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த மானுஸ் ஆனது ஒரு ஜெனரல் பர்பஸ் ஏஐ ஏஜெண்டாகும். அதாவது சாதாரண சாட்போட்கள் போல வெறும் தகவல்களை மட்டும் வழங்காமல், பயனரின் சார்பாக இணையத்தில் தேடி, ஒரு வேலையை முழுமையாக முடித்துக் கொடுக்கும் திறனை கொண்டது. அதற்காக ஒரு சிறிய குறிப்பை கொடுத்தால் போதுமானது என கூறப்படுகிறது. சந்தை ஆராய்ச்சி, கோடிங் மற்றும் டேட்டா அனாலிசிஸ் போன்ற கடினமான வேலைகளை கூட தானாகவே செய்து முடிக்கும் எனலாம். சீனாவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் சிங்கப்பூருக்கு தலைமையகத்தை மாற்றியது. ஏஐ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய டீப்சீக் (DeepSeek) பாணியிலான ஒரு நவீன தொழில் நுட்பத்தை கொண்டுள்ளது.
மெட்டா ஏன் வாங்கியது?
பர்சனல் சூப்பர் இண்டலிஜென்ஸ் என்ற, ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனிப்பட்ட சூப்பர் உதவியாளர் ஆக இது இருக்கும். இந்த அம்சமானது மெட்டாவின் வணிகம் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்திலும் இது இணைக்கப்படலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அவரவர் அன்றாட வேலைகளை கூட எளிதாக செய்து கொள்ள முடியும்.
மேலும் மெட்டா நிறுவனத்தின் இந்த ஒப்பந்தத்தால், 100-க்கும் மேற்பட்ட ஏஐ நிபுணர்கள், மெட்டா குழுமத்துடன் இணைவார்கள். இது மேற்கொண்டு மெட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமான ஒன்றாக இருக்கலாம். மொத்தத்தில் மெட்டா நிறுவனமும் இனி ஏஐ உலகில் தனது கொடியை வலுவாக நிலைநாட்டும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவது இதன் மூலம் தெளிவாகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Can the Manus acquisition turn Meta AI into your personal super-assistant? What is Zuckerberg’s master plan?
Meta has acquired Manus, a singapore-based AI startup, for an estimated $2 billion to dominate the AI Agent market. Story first published: Tuesday, December 30, 2025, 16:58 [IST] Other articles published on Dec 30, 2025
