பொங்கல் பரிசு தொகுப்பு: வந்தது குட்நியூஸ்!! ரேஷன் கடைகளுக்கு சென்ற பொருட்கள்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 12:57 [IST] Share This Article
பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்போடு எவ்வளவு ரொக்கம் வழங்கும் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ஒரு குட் நியூஸ் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்க இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன . ரேஷன் கடைகளுக்கு பச்சரிசி, சர்க்கரை ,வேட்டி மற்றும் சேலை உள்ளிட்ட பொருட்களை அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறதாம். கிட்டத்தட்ட 85 சதவீத பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே கூடிய விரைவில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.
தற்போது வரை தமிழக ரேஷன் கடைகளுக்கு 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம் இது தவிர 1.77 கோடி வேஷ்டி மற்றும் சேலைகளும் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் வேட்டி சேலை உள்ளிட்டவை இடம்பெறும் என்பது உறுதியாகி இருக்கிறது.
Also Read
மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!!
இத்துடன் கரும்பு வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருவதாகவும் ரொக்க பணம் வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று புத்தாண்டு தினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
Recommended For You
சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?
அப்போது பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெறும் அதே போல பொங்கல் பரிசு ரொக்கமாக எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதையும் முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகிறது. 2கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பும், ரொக்கமும் கிடைக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எப்படி இருந்தாலும் இந்த வார இறுதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும். அடுத்தவாரம் டோக்கன் விநியோகம் தொடங்கி பொருட்களும் விநியோகமும் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
Share This Article English summary
Pongal Prize: Tamilnadu CM Stalin to make announcement soon
Tamilnadu Chief Minister M K Stalin to make announcement about Ponga;l price package soon, as the Pongal price items have already sent to the fair price shops. Story first published: Tuesday, December 30, 2025, 12:57 [IST] Other articles published on Dec 30, 2025
