மீடியம் டெர்ம் முதலீடா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்! மிஸ் பண்ணாதீங்க! – Allmaa

befunky-collage98-1767074809

  பர்சனல் பைனான்ஸ்

மீடியம் டெர்ம் முதலீடா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்! மிஸ் பண்ணாதீங்க!

Personal Finance oi-Pugazharasi S By Published: Tuesday, December 30, 2025, 11:37 [IST] Share This Article

ஒரு கார் வாங்க வேண்டும் அல்லது அடுத்த மூன்று ஆண்டுகளில் குழந்தைகளின் உயர் கல்விக்கு ஒரு தொகையை திரட்ட வேண்டும்.. இது போன்ற நடுத்தர கால இலக்குகள் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்கான பணத்தை வெறும் சேமிப்புக் கணக்கிலோ அல்லது எஃப்.டி-யிலோ போட்டு வைத்தால் மட்டும் போதாது. பணவீக்கத்தை தாண்டி உங்கள் பணம் வளர வேண்டும் என்றால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தான் ஒரு சிறந்த வழி.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், முதலீட்டை சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்வது சிறந்தது. அதோடு எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளும் மீடியம் டெர்முக்கு ஏற்றதாகவும் இருக்காது. அதிக ரிஸ்க்கும் இருக்கக் கூடாது, அதே சமயம் லாபமும் குறையக்கூடாது. இதற்கேற்ப நிபுணர்கள் சில குறிப்பிட்ட அம்சங்களை பரிந்துரைக்கிறார்கள். அப்படி உங்கள் எதிர்கால நிதி இலக்குகளை சரியாக எட்டிப்பிடிக்க உதவும் அம்சங்கள் என்ன, வாருங்கள் பார்க்கலாம்.

மீடியம் டெர்ம் முதலீடா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்! மிஸ் பண்ணாதீங்க!

இலக்கு என்ன?

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, இலக்கை அடைய இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே முதலீட்டைத் திட்டமிட வேண்டும். உங்கள் இலக்கு மிக அருகில், அதாவது ஓராண்டிற்குள் இருந்தால், பாதுகாப்பான கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதுவே 5 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தால் மிட் கேப் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

ஈக்விட்டிகள் மீதான நாட்டம்

உங்கள் இலக்கு, நீண்ட கால இலக்கு எனில், நீங்கள் ஈக்விட்டி போன்ற ரிஸ்க்கான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இதற்கு லார்ஜ் கேப் மற்றும் பிளெக்ஸி கேப் ஃபண்டுகள் சிறந்தவை. சந்தை வீழ்ச்சி காணும் போது லார்ஜ் கேப் பங்குகள் ஓரளவுக்கு சரியாமல் பாதுகாப்பாக இருக்கலாம். பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இருக்காது.

ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளை பொறுத்த வரையில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீட்டை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டது. ஆக இதில் ரிஸ்க் குறைவு. வருமானமும் மிதமாக இருக்கும்.

பிரித்து முதலீடு செய்வது அவசியம்?

முதலீட்டை ஒரே ஃபண்டில் போடாமல், பிரித்து பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்வது அவசியம். உதாரணத்திற்கு 5- 8 ஆண்டு கால நிதி இலக்கு எனில், 50% ஈக்விட்டிகள் மற்றும் 50% கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் லாபகரமானவை தான் என்றாலும், 5 – 7 ஆண்டு அல்லது மீடியம் டெர்மில் சில சமயங்களில் நஷ்டத்தை தரலாம். ஆக ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது.

கடன் ஃபண்டுகள் மற்றும் தங்கம்

ஒரு சிறந்த போர்ட்ஃபோலியோவில் பங்குகள் தவிர, கடன் ஃபண்டுகள் மற்றும் தங்கம் போன்ற அம்சங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். நிபுணர் ஸ்ரீ தரன் சுந்தரம் கருத்துப்படி, உங்கள் மொத்த முதலீட்டில் 20% கடன் ஃபண்டுகளிலும், 10% தங்கத்திலும் முதலீடு செய்வது நல்லது. தங்கல் நீண்ட காலத்திற்கு ஒரே சீராக வளராவிட்டாலும், போர்ட் போலியோவுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.

ரிஸ்க் எடுக்கும் திறன்

முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனை பொறுத்து முதலீடு செய்வது மிக அவசியம். ரிஸ்க் சற்று அதிகம் எடுக்கலாம் என நினைப்பவர்கள் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளில் அதிக முதலீடு செய்யலாம். தங்கம் மற்றும் கடன் ஃபண்டுகளில் குறைவாக செய்யலாம். இதே ரிஸ்க் அதிகம் எடுக்க விரும்பவில்லை என நினைப்பவர்கள், லார்ஜ் கேப் மற்றும் பிளெக்ஸி கேப் ஃபண்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். இவர்கள் 20 – 30% கடன் ஃபண்டுகளிலும், 5 -10% தங்கத்திலும் முதலீடு செய்யலாம்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மீடியம் டெர்மாக இருந்தாலும் சரி, நீண்டகால முதலீடாகவே இருந்தாலும், முதலீட்டை ஒரே இடத்தில் செய்யக்கூடாது. அவற்றை பிரித்து ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகள், டெப்ட் ஃபண்டுகள், தங்கம் என பிரித்து முதலீடு செய்வது அவசியம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Don’t put your money in the wrong place: Top Mutual Fund categories for Your long-term goals

If your goal is long-term, you can prioritize riskier investments like equity. Large-cap and flexi-cap funds are ideal choices for this. Story first published: Tuesday, December 30, 2025, 11:37 [IST] Other articles published on Dec 30, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *