ஐடி துறையில் ஒரு ஜாக்பாட்! கோஃபோர்ஜ் பங்குகள் இனி ராக்கெட் வேகத்தில் உயருமா? நிபுணர்கள் கணிப்பு?
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 30, 2025, 11:43 [IST] Share This Article
பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்றாலும், சில பங்குகள் மட்டுமே சந்தைக்கே சவால் விடும் வகையில் அபரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்யும். அந்த வரிசையில், தற்போது முதலீட்டாளர்களின் ஹாட் சாய்ஸாக மாறியிருக்கிறது ஐடி துறை சார்ந்த கோஃபோர்ஜ் (Coforge) நிறுவனம்.
ஐடி நிறுவனங்களின் வசந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது, இனி ஐடி நிறுவனங்களின் நிலை என்னவாகுமோ என்ற சந்தேகத்தை கிளப்பியவர்களுக்கு, முன்னணி தரகு நிறுவனங்கள் அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என மறைமுகமாக கூறியுள்ளன. ஏனெனில் வரும் மாதங்களில் கோஃபோர்ஜ் பங்கானது 49% வரை உயரும் என ஜெஃப்ரீஸ் மற்றும் மோதிலால் ஆஸ்வால் போன்ற முன்னணி தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
தரகு நிறுவனங்களின் இந்த கணிப்புகள் வெறும் யூகமா அல்லது நிஜமாகவே கோஃபோர்ஜ் பங்குகள் ராக்கெட் வேகத்தில் எகிறப்போகிறதா? முதலீட்டாளர்கள் ஏன் இந்தப் பங்கை கவனத்தில் கொள்ள வேண்டும், நிபுணர்கள் முன் வைக்கும் அந்த 5 வலுவான காரணங்கள் என்னென்ன, வாருங்கள் பார்க்கலாம்.

மெகா டீல்!
மல்டிபேக்கர் மிட் கேப் பங்கான கோஃபோர்ஜ், அமெரிக்காவைச் சேர்ந்த என்கோரா எனும் டிஜிட்டல் இன்ஜினியரிங் நிறுவனத்தை சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்திய நிறுவனம் செய்துள்ள மிகப்பெரிய ஒப்பந்தமாகும். இந்த மெகா டீல் மத்தியில் தான், தரகு நிறுவனங்கள் இப்பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளன.
மோதிலால் தரகு நிறுவனமானது வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 2,500 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 2,500 ரூபாயாகவும் சுட்டிக் காட்டியுள்ளது. ஜெஃப்ரீஸ் நிறுவனமும் வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 2,180 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. இது சந்தை விலையில் இருந்து 30% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கிறது. இது தொடர்ந்து ஐடி நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கும் சூழலில், பரிந்துரை செய்துள்ளன.
என்கோரா நிறுவனமானது ஏஐ மற்றும் கிளவுட் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாகும். இது கோஃபோர்ஜ் நிறுவனத்தை ஏஐ-யில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாக மாற்ற உதவும். இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கோஃபோர்ஜ் தனது தடத்தை வலுப்படுத்துகிறது.
கோஃபோர்ஜ் நிறுவனம் பற்றி?
ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனமானது சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், கோஃபோர்ஜ் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கலாம். என்கோரா நிறுவனத்தின் வருவாய் 600 மில்லியன் டாலராக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் 2027ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது சுமார் 28% வளர்ச்சி காணலாம் என தரகு நிறுவனமானது எதிர்பார்க்கிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, என்கோரா நிறுவனத்தின் மதிப்பு, அதன் விற்பனையைப் போல 3.9 மடங்கு மற்றும் அதன் செயல்பாட்டு லாபத்தைப் போல 20.6 மடங்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கோஃபோர்ஜ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பை விட அதிகம். மேற்கொண்டு ஐடி நிறுவனமானது என்கோரா நிறுவனத்தின் கடன்களை செலுத்துவதற்காக 550 மில்லியன் டாலர் நிதியை QIP மூலமும் திரட்ட கோஃபோர்ஜ் திட்டமிட்டுள்ளது. இந்த முழு செயல்முறையும் அடுத்த 6 மாதங்களில் நிறைவடையும் என தரகு நிறுவனமானது எதிர்பார்க்கிறது.
மோதிலால் தரகு நிறுவனமானது கோஃபோர்ஜ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 77% ஏஐ சார்ந்த இன்ஜினியரிங் சேவைகள் மூலமே கிடைக்கிறது. இதன் மூலம் சுமார் 3,100 ஏஐ நிபுணர்கள் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் இணைவார்கள். மேற்கொண்டு என்கோரா நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வலுவான கிளைகளை கொண்டுள்ளது. இது அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் இருந்து சேவைகளை வழங்க உதவும். குறிப்பாக அமெரிக்காவின் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் கோபோர்ஜ் இதுவரை பெரிய அளவில் தடம் பதிக்கவில்லை. ஆக என்கோரா நிறுவனத்தின் கையகப்படுத்தல் உதவிகரமாகவும் இருக்கும். மொத்தத்தில் ஐடி நிறுவன பங்கானது நீண்ட கால அளவில் ஏற்றம் காணலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why Global Analysts see a Strong Buy in Coforge Despite the Recent Dip?
Coforge shares eye a 49% rally. Experts from Jefferies & Motilal Oswal predict a massive upside following the $2.35B Encora acquisition. Story first published: Tuesday, December 30, 2025, 11:43 [IST] Other articles published on Dec 30, 2025
