யூடர்ன் அடித்த தங்கம், வெள்ளி விலை!! ஒரே நாளில் நடந்த டிவிஸ்ட்!! மேலும் விலை குறையுமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 30, 2025, 10:00 [IST] Share This Article
நகை பிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக தங்கம், வெள்ளி சடாரென குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்து பொதுமக்களுக்கு நிம்மதியை தந்திருக்கிறது .
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகமாகவே இருந்து வந்தது . கடந்த 22ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை அடுத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து டிசம்பர் 27ஆம் தேதி அன்று 1,04,800 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டது.

தங்கத்தின் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்ததோடு மட்டுமல்லாமல் நாள்தோறும் விலை உயர்ந்த வண்ணமே இருக்கிறது என சாமானிய மக்கள் கண்ணீர் வடித்தனர் . இந்த நிலையில் தான் பொதுமக்களுக்கு நிவாரணம் தரக்கூடிய வகையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 80 ரூபாய் குறைந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 13 ,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் 420 ரூபாய் விலை குறைந்து 12,600 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் சவரனுக்கு 420 ரூபாய் விலை குறைந்திருப்பது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது . ஒரு சவரன் என பார்க்கும்போது நேற்று 1,04,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்றைய தினம் 3,360 ரூபாய் விலை குறைந்து 1,00,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்திருப்பது மேற்கொண்டு தங்கத்தின் விலை குறையும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 458 ரூபாய் விலை குறைந்து 13,746 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,09,968 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 360 ரூபாய் குறைந்து 10,505 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 2880 ரூபாய் விலை குறைந்த 84 ,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Also Read
2025 ஆம் ஆண்டை போலவே 2026இலும் தங்கம் விலை உயர்ந்தால் ஒரு கிராம் விலை எவ்வளவாக இருக்கும்?
ஆண்டு இறுதி என்பதால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டில் லாபத்தை பதிவு செய்தது தங்கத்தின் விலை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. தங்கம் அதன் வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டதால் அடுத்த கட்டமாக பெரிய அளவு உயராது என்ற ஒரு கணிப்பும் , ரஷ்யா உக்ரைன் அமைதி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது என வெளியான அறிவிப்பும் முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
அதுமட்டுமில்லாமல் ஆண்டு இறுதி என்றாலே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விடுமுறை காலத்தை கழிப்பதற்காக தங்களுடைய முதலீடுகளை விற்று பணம் ஆக்கிக் கொள்வார்கள் அதுவும் தங்கத்தின் விலை சரிவுக்கு காரணம்.
Recommended For You
வெள்ளியில் முதலீடு செஞ்சு மாட்டிக்காதீங்க!! இவரே இப்படி சொல்லிட்டாரே!! இப்போ என்ன செய்யுறது?
தங்கத்தை போலவே வெள்ளியின் விலை இன்றைய தினம் சரிவடைந்து இருக்கிறது . ஒரு கிராம் வெள்ளி 23 ரூபாய் விலை குறைந்து 258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு 23 ஆயிரம் ரூபாய் என விலை சரிந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு கிலோ 2,58,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் நேற்று 281 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
You May Also Like
Pan – Aadhaar Link: ஒரே SMS மூலம் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
ஆண்டு இறுதியில் நற்செய்தியாக தங்கம், வெள்ளி விலை குறைவு நடந்திருக்கிறது. இந்த விலை குறைவு அப்படியே நீடிக்குமா என்ற குழப்பம் இருக்கிறது. உக்ரைன் ரஷ்ய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் மேற்கொண்டு விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இது ஒரு குறுகிய கால சரிவு தான் என்றும் முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்குகின்றனர்.
Share This Article English summary
Gold and silver rates declined suddenly as the investors are booking profits
Gold and silver rates declined suddenly as the investors are booking profits. In Chennai ornamental gold price decreased more than rs 3000 per soverign and silver rate reduced 23rs per gram. Story first published: Tuesday, December 30, 2025, 10:00 [IST] Other articles published on Dec 30, 2025
