Breaking: முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!5 ஆண்டுகளில் 31 மடங்கு வளர்ச்சி:போனஸ் மழை பொழியும் மல்டிபேக்கர் பங்கு?

befunky-collage97-1767064147

  Market update

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!5 ஆண்டுகளில் 31 மடங்கு வளர்ச்சி:போனஸ் மழை பொழியும் மல்டிபேக்கர் பங்கு?

Market Update oi-Pugazharasi S By Published: Tuesday, December 30, 2025, 8:39 [IST] Share This Article

சரியான நேரத்தில் விதைக்கபடும் ஒரு விதை, ஒரு காலக்கட்டத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அபாரமாய் வளர்ச்சி காணும் என்பதற்கு கீழ் காணவிருக்கும் பங்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். பங்குச் சந்தை என்றாலே பயந்து ஒதுங்கி ஒதுக்குபவர்கள் மத்தியில், துணிச்சலாக முதலீடு செய்து காத்திருப்பவர்களுக்கு தான் இத்தகைய ஜாக்பாட் வாய்ப்புகள் எல்லாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு, இன்று சுமார் 31 மடங்கு வருமானத்தை ஒரு பங்கானது வாரி வழங்கி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் இது உண்மைதான்.

வெறும் லாபம் மட்டுமல்ல, லாபத்துடன் 3:1 போனஸ் மற்றும் 1:10 பங்கு பிரித்தல் என ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் என்பது போல், முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. முதலீட்டாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. நடுத்தர வர்க்கத்து முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது. அப்படிப்பட்ட மல்டிபேக்கர் எது? அதன் அபார வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் காரணிகள் என்ன? இதுபோன்ற எதிர்கால வாய்ப்புகளை அடையாளம் காண்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்!5 ஆண்டுகளில் 31 மடங்கு வளர்ச்சி:போனஸ் மழை பொழியும் மல்டிபேக்கர் பங்கு?

ஏன் அதிரடி ஏற்றம்?

இப்பதிவில் நாம் பார்க்க இருக்கும் பங்கு ஏ-1 லிமிடெட் (A-1 Ltd) ஆகும். இப்பங்கானது வாரத் தொடக்க வர்த்தக நாளிலேயே அப்பர் சர்க்யூட் ஆகி, 1840.90 ரூபாய் என்ற நிலையில் காணப்பட்டது. இந்த அதிரடியான ஏற்றமானது அதன் 3:1 என்ற போனஸ்-க்கான ரெக்கார்டு தேதி மற்றும் 10:1 என்ற விகிதத்தில் பங்கு பிரித்தலுக்கான அறிவிப்புகளானது வெளியான நிலையில் கண்டுள்ளது.

இதில் போனஸ் வழங்கலுக்கான ரெக்கார்டு தேதியாக டிசம்பர் 31ம், ஜனவரி 8,.2026 ல் பங்கு பிரித்தலுக்கான ரெக்கார்டு தேதியாகவும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது பங்குதாரர்கள் மத்தியில் பணப்புழக்கத்தை உறுதி செய்யலாம். அதோடு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்கலாம். இந்த சூழலில் தான் பங்கு விலையானது உச்சத்தை எட்டியுள்ளது.

விரிவாக்க நடவடிக்கை?

கடந்த டிசம்பர் 22 அன்று இந்த நிறுவன நிர்வாக குழுவானது 3:1 என்ற போனஸ் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அதோடு 10:1 என்ற பங்கு பிரித்தல் நடவடிக்கைக்கும் ஒப்புதல் கொடுத்தது. முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், ஏ-1 நிறுவனமானது, எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, மின்சார வாகன துறையிலும் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஏ-1 லிமிடெட் நிறுவனம், ஏற்கனவே ஏ-1 சுரேஜா (A-1 Sureja Industries) என்ற மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வைத்திருந்த 45% பங்குகளை இப்போது 51% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசம் கொண்டு வந்துள்ளது.

பங்கு விலை நிலவரம்?

பலவீனமான சந்தை சூழலிலும் கூட, இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த ஒரு மாதத்தில் 31% மேலாக சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும் 6 மாதங்களில் 178% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஒரு வருடத்தில் 358% அளவுக்கும், கடந்த 5 வருடத்தில் 3,100% அளவுக்கும் ஏற்றம் கண்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லைசரியான நேரத்தில் விதைக்கபடும் ஒரு விதை, ஒரு காலக்கட்டத்தில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அபாரமாய் வளர்ச்சி காணும் என்பதற்கு கீழ் காணவிருக்கும் பங்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். பங்குச் சந்தை என்றாலே பயந்து ஒதுங்கி ஒதுக்குபவர்கள் மத்தியில், துணிச்சலாக முதலீடு செய்து காத்திருப்பவர்களுக்கு தான் இத்தகைய ஜாக்பாட் வாய்ப்புகள் எல்லாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு, இன்று சுமார் 31 மடங்கு வருமானத்தை ஒரு பங்கானது வாரி வழங்கி இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் இது உண்மைதான்.

வெறும் லாபம் மட்டுமல்ல, லாபத்துடன் 3:1 போனஸ் மற்றும் 1:10 பங்கு பிரித்தல் என ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள் என்பது போல், முதலீட்டாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. முதலீட்டாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. நடுத்தர வர்க்கத்து முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது. அப்படிப்பட்ட மல்டிபேக்கர் எது? அதன் அபார வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் காரணிகள் என்ன? இதுபோன்ற எதிர்கால வாய்ப்புகளை அடையாளம் காண்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

ஏன் அதிரடி ஏற்றம்?

இப்பதிவில் நாம் பார்க்க இருக்கும் பங்கு ஏ-1 லிமிடெட் (A-1 Ltd) ஆகும். இப்பங்கானது வாரத் தொடக்க வர்த்தக நாளிலேயே அப்பர் சர்க்யூட் ஆகி, 1840.90 ரூபாய் என்ற நிலையில் காணப்பட்டது. இந்த அதிரடியான ஏற்றமானது அதன் 3:1 என்ற போனஸ்-க்கான ரெக்கார்டு தேதி மற்றும் 10:1 என்ற விகிதத்தில் பங்கு பிரித்தலுக்கான அறிவிப்புகளானது வெளியான நிலையில் கண்டுள்ளது.

இதில் போனஸ் வழங்கலுக்கான ரெக்கார்டு தேதியாக டிசம்பர் 31ம், ஜனவரி 8,.2026 ல் பங்கு பிரித்தலுக்கான ரெக்கார்டு தேதியாகவும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது பங்குதாரர்கள் மத்தியில் பணப்புழக்கத்தை உறுதி செய்யலாம். அதோடு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்கலாம். இந்த சூழலில் தான் பங்கு விலையானது உச்சத்தை எட்டியுள்ளது.

விரிவாக்க நடவடிக்கை?

கடந்த டிசம்பர் 22 அன்று இந்த நிறுவன நிர்வாக குழுவானது 3:1 என்ற போனஸ் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்தது. அதோடு 10:1 என்ற பங்கு பிரித்தல் நடவடிக்கைக்கும் ஒப்புதல் கொடுத்தது. முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், ஏ-1 நிறுவனமானது, எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யும் விதமாக, மின்சார வாகன துறையிலும் மிகப்பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஏ-1 லிமிடெட் நிறுவனம், ஏற்கனவே ஏ-1 சுரேஜா (A-1 Sureja Industries) என்ற மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வைத்திருந்த 45% பங்குகளை இப்போது 51% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசம் கொண்டு வந்துள்ளது.

பங்கு விலை நிலவரம்?

பலவீனமான சந்தை சூழலிலும் கூட, இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த ஒரு மாதத்தில் 31% மேலாக சரிவைக் கண்டுள்ளது. இருப்பினும் 6 மாதங்களில் 178% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஒரு வருடத்தில் 358% அளவுக்கும், கடந்த 5 வருடத்தில் 3,100% அளவுக்கும் ஏற்றம் கண்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Prasanna v. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Prasanna v

Share This Article English summary

With a 3100% rally and an upcoming 3:1 bonus and 1:10 split, is this the ultimate multibagger to watch right now?

Even in a weak market environment, the multibagger stock A-1 Ltd has dropped by over 31% in the last month. However, it has gained 178% in the past six months and a massive 358% over the last year. Story first published: Tuesday, December 30, 2025, 8:39 [IST] Other articles published on Dec 30, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *