இந்திய சந்தையை கைவிட்டார்களா FPIs? 2025ல் வரலாறு காணாத வெளியேற்றம்; 2026-ல் மீட்சி ஏற்படுமா?
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Monday, December 29, 2025, 21:17 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தையை பொறுத்த வரையில், 2025ம் ஆண்டு பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ஆண்டாக அமைந்துவிட்டது. உலகமே இந்திய பொருளாதார வளர்ச்சியை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்(FPI) சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இது சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான வருடாந்திர வெளியேற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது அமெரிக்க பத்திரங்களின் வட்டி விகித உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் சில துறைகளில் நிலவிய அதிகப்படியான மதிப்பீடுகள், சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல் என பல காரணிகள் மத்தியில், இந்திய சந்தையில் இருந்து பெரிய அளவில் முதலீடுகள் வெளியேறியுள்ளன. இருப்பினும் இந்த வெளியேற்றமானது தற்காலிகமான ஒன்று தான். மீண்டும் 2026ம் ஆண்டில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். வரும் ஆண்டில் மீண்டும் இந்திய சந்தைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்புவார்களா அல்லது 2025ல் இருந்து முதலீட்டாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
முதலீடுகள் திரும்புமா?
அடுத்த ஆண்டில் (2026-ல்) இந்தியாவின் வருவாய் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் படிப்படியாக இந்தியாவுக்கு திரும்பலாம். குறிப்பாக இந்தியா – அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தமானது வெற்றிகரமாக முடிவுக்கு வரும் பட்சத்தில், வரி விகித வேறுபாடுகள் குறையலாம். அதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி விகிதங்களைப் குறைப்பது டாலரின் மதிப்பை சற்று பலவீனப்படுத்தலாம். இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் சந்தைக்கு சாதகமாக மாறலாம்.
இதுகுறித்து ஓம்னிசயின்ஸ் கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விகாஸ் குப்தா கூறுகையில், உலகளாவிய சாதகமான சூழல்கள் மட்டுமன்றி, உள்நாட்டு காரணிகளும் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வருவாய் வளர்ச்சி சிறப்பாக இருப்பது கொள்கை ரீதியான தொடர்ச்சி மற்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள சீர்திருத்தங்கள் ஆகியவை முதலீட்டாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் முக்கியத் தூண்டுகோல்களாக அமையும்.
டாலர் மதிப்பு பலவீனமாகும் போது வெளிநாட்டுப் பணம் இந்திய பங்குச் சந்தைக்கு வரும். அதோடு கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியானது இந்திய நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க உதவிகரமாக இருக்கும், மேற்கொண்டு பட்ஜெட் மற்றும் கொள்கை முடிவுகள், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான உணர்வைத் தரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
FPIs pulled out nearly Rs 1.6 lakh crore in 2025: can we expect a sustainable reversal in 2026?
In 2025, Indian equities faced their worst sell-off by foreign investors, with a record withdrawal of Rs 1.6 lakh crore. Story first published: Monday, December 29, 2025, 21:16 [IST]
