உங்க தாத்தா, அப்பா இதை செய்திருந்தா.. உங்கள கையில் 26 மடங்கு அதிக பணம் இருந்திருக்கும்.. எப்படி..?!

befunky-collage89-1767011128

  செய்திகள்

உங்க தாத்தா, அப்பா இதை செய்திருந்தா.. உங்கள கையில் 26 மடங்கு அதிக பணம் இருந்திருக்கும்.. எப்படி..?!

News oi-Pugazharasi S By Published: Monday, December 29, 2025, 17:55 [IST] Share This Article

காலம் பொன் போன்றது என்பார்கள், ஆனால் முதலீட்டு உலகில் காலம் என்பது பணத்தை விடப் பெரியது. நாம் இன்று கையில் வைத்திருக்கும் பணத்தை விட, நம் தாத்தாவோ அல்லது அப்பாவோ பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சிறு முதலீடு கூட, இன்று நம் வாழ்க்கையையே மாற்றியிருக்கக்கூடும். குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற சொத்துக்கள் கடந்த 25 ஆண்டுகளில் கொடுத்திருக்கும் லாபம் அசாத்தியமானது. சொல்லப்போனால் தங்கம், வெள்ளியை விட சிறந்த லாபம் கொடுத்த முதலீடில்லை எனலாம்.

உதாரணமாக, 2000-ம் ஆண்டில் உங்கள் தாத்தா ஒரு குறிப்பிட்ட தொகையைத் தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ முதலீடு செய்து, அதை அப்படியே விட்டுருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 26 மடங்கு வரை உயர்ந்திருக்க வாய்ப்புண்டு. அப்போதே இதைச் செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் நம்மிடம் இருக்கலாம், ஆனால் அதன் பின்னால் உள்ள கூட்டு வட்டி மற்றும் நீண்ட கால வளர்ச்சி எனும் ரகசியத்தை நாம் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் முன்னோர்கள் செய்திருக்க வேண்டிய அல்லது செய்யத் தவறிய அந்த மேஜிக் என்ன? இன்று நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இதே போன்ற ஒரு பெரும் செல்வத்தைச் சேர்க்க என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

உங்க தாத்தா, அப்பா இதை செய்திருந்தா.. உங்கள கையில் 26 மடங்கு அதிக பணம் இருந்திருக்கும்.. எப்படி..?!

தங்கம் Vs வெள்ளி

கடந்த 2000ம் ஆண்டில் வெள்ளியில் 1,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு சுமார் 26,455 ரூபாயாகும். ஒருவர் 25 ஆண்டு காலம் முதலீடு செய்திருந்து காத்திருந்தால் இன்று 26 மடங்கிற்கும் மேலாக அதிகரித்திருக்கும். இது வெள்ளியானது மிகப்பெரிய நிதிச் சொத்தாக வளர்ந்திருப்பதை காட்டுகிறது. 2000ம் ஆண்டில் வெள்ளி விலையானது கிலோ வெறும் ,7000 ரூபாயாக இருந்தது. இன்று கிலோ 2.16 லட்சம் ரூபாயாக காணப்படுகிறது. இது சுமார் 2,600% வளர்ச்சியை காட்டுகிறது. வெள்ளியை பொறுத்த வரையில் ஆபரணம் என்பதைத் தாண்டி, தொழில்துறை முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. ஆக நீண்ட கால அடிப்படையில் சிறந்த முதலீட்டு ஆப்ஷனாகவும் பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் வெள்ளியும் தங்கத்தைப் போலவே சந்தை ஏற்ற இறக்கத்தின் மத்தியில், சிறந்த ஹெட்ஜிங்காக பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் ஈக்விட்டி சந்தையை காட்டிலும் சிறந்த பெர்ஃபார்மன்ஸ்-ஐயும் காட்டியுள்ளது.

வெள்ளியை போல தங்கமும் கடந்த சில தசாப்தங்களாக சிறந்த செயல்திறனை காட்டியுள்ள விலையுயர்ந்த உலோகமாகவும் பார்க்கப்படுகிறது. இதனிடையே ஈக்விட்டி முதலீடானது மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றை பார்க்கும்போது தங்கம் சராசரியாக 14.3% ஆகவும், வெள்ளி 14,1% ஆகவும், என்.எஸ். இ நிஃப்டி குறியீடானது 11.7% ஆகவும், சென்செக்ஸ் சராசரியாக 11.5% ஆகவும் வருமானம் கொடுத்துள்ளது.

கடந்த 1999ம் ஆண்டில் இருந்து ஏற்றம் காணத் தொடங்கிய தங்கம் விலையானது 10 கிராமுக்கு 4,400 ரூபாயாக இருந்தது. இன்று 1.4 லட்சம் ரூபாய்க்கு மேல் காணப்படுகிறது. இதே வெள்ளி கிலோவுக்கு 1999ம் ஆண்டில் கிலோவுக்கு 8,100 ரூபாயாக இருந்த விலை, இன்று 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. இதே டாலரில் அவுன்ஸூக்கு 270 டாலராக இருந்த நிலையில், தற்போது 4,552 டாலராக உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலையானது 5.13 டாலராக இருந்த நிலையில், தற்போது 79.7 டாலராகவும் உச்சத்தை எட்டியுள்ளது.

தேவை அதிகரிப்பு?

தங்கத்தைப் பொறுத்த வரையில், அதன் முக்கியத் தேவை ஆபரணத் துறையில் இருந்து வருகிறது. பாரம்பரியமாகவே தங்கம் என்பது பாதுகாப்பான சேமிப்பாக இருக்கிறது. மதிப்பீடுகளின்படி, இந்தியக் குடும்பங்கள் வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு, இந்தியாவின் ஜிடிபி-க்கு இணையாக அல்லது அதைவிட சற்று அதிகமாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா முதல் இரு இடங்களில் உள்ளது. வெள்ளியானது பல ஆண்டுகளாக நாணயங்கள், கட்டிகள், பாத்திரங்கள் செய்ய தேவை அதிகம் இருந்தது. ஆபரண தேவை குறைவாகவே இருந்தது. ஆனால் சமீபத்திய விலை உச்சம் மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டின் தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மக்கள் இரு உலோகங்களையும் கலந்து வாங்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து இவ்விரு உலோகங்களின் தேவையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முதலீட்டு ரீதியாகவும் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Have gold and silver given the best returns over the last 25 years?

Over the past 25 years, gold and silver have outperformed many traditional assets, yielding over 14% CAGR. They acted as a powerful hedge against inflation and currency devaluation. Story first published: Monday, December 29, 2025, 17:55 [IST] Other articles published on Dec 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *