FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ! – Allmaa

befunky-collage88-1766467955

  Market update

FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ!

Market Update oi-Pugazharasi S By Published: Tuesday, December 23, 2025, 11:03 [IST] Share This Article

பங்குச் சந்தையின் ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) எங்கே பணம் போடுகிறார்களோ, அங்கே லாபம் அதிகம் இருக்கும் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. கடந்த மூன்று காலாண்டுகளாக எஃப்.ஐ.ஐ-கள் சைலண்டாக சேர்த்த 12 பங்குகளில், இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 7 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியுள்ளன. சந்தையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும், இந்த நிறுவனங்களின் வலுவான பிசினஸ் மாடல் மற்றும் FII-களின் அசைக்க முடியாத நம்பிக்கை இன்று பெரும் லாபத்தை கொடுத்துள்ளது. அந்த 7 லக்கி பங்குகள் எவை? அந்த லிஸ்ட்டில் உங்கள் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்கும் இருக்கிறதா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

FII-களின் ஜாக்பாட் லிஸ்ட்! 12ல் 7 பங்குகள் மல்டிபேக்கர்! 2025ன் டாப் பங்குகள் இதோ!

நிகர விற்பனையாளர்கள்!?

நடப்பு ஆண்டில் இந்திய சந்தையில் தற்போது வரையில் பார்க்கும்போது, ஒட்டுமொத்தமாக 1.61 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சில பங்குகளில் மட்டும் மீண்டும் மீண்டும் முதலீடு செய்துள்ளனர். இது அந்த பங்குகள் மீதான வலுவான நம்பிக்கையை காட்டுகிறது.

கடந்த மூன்று காலாண்டுகளாக சுமார் 125 பி எஸ் இ பங்குகளில் தொடர்ந்து அன்னிய முதலீடுகள் அதிகரித்துள்ளனர். அவற்றில் 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்புள்ள நிறுவனங்களை ஆய்வு செய்ததில், 20 பங்குகள் 50% முதல் 3,650% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. அதில் 7 பங்குகளாக மல்டிபேக்கர் பங்களாகவும் வளர்ச்சி கண்டுள்ளன. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் 70% மேலாக ஏற்றம் கண்டுள்ள 12- பங்குகளைப் பற்றி பார்க்கலாம்.

1.மிட்வெஸ்ட் கோல்ட்

நடப்பு ஆண்டில் இதுவரையில் 3,658% ஏற்றம் கண்டுள்ள இப்பங்கு, 112 ரூபாயில் இருந்து, 4,193 ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை வலுவாக அதிகரித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2024 நிலவரப்படி இப்பங்கில் முதலீடு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், மார்ச் 2025ல் 6.62%மும், ஜூன் 2025ல் 6.72%மும், செப்டம்பர் 2025ல் 6.78% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.A1

பட்டியலில் இரண்டாவதாக உள்ள A1 பங்கானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 338% ஏற்றம் கண்டுள்ளது. இது 402 ரூபாய் என்ற நிலையில் இருந்து, 1,762 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் எஃப்.ஐ,ஐ-க்கள் படிப்படியாக பங்குகளை அதிகரித்துள்ளனர். டிசம்பர் 2024ல் 2.90% ஆகவும், மார்ச் 2025ல் 2.94% ஆகவும், மார்ச் 2025ல் 2.94% ஆகவும், ஜூன் 2025 5.80% ஆகவும், செப்டம்பர் 2025ல் 6.03% ஆகவும் முதலீடுகளை கணிசமாக உயர்த்தியுள்ளனர்.

3.ஃபோர்ஸ் மோட்டார்ஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்கு விலையானது நடப்பு ஆண்டில் 173% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கானது 6,502 ரூபாயில் இருந்து 17,768 ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இதனிடையே இப்பங்கில் டிசம்பர் 2024 நிலவரப்படி 8.15% பங்கும், மார்ச் 2025ல் 8.36% பங்கும், ஜூன் 2025ல் 9.77% பங்கும், செப்டம்பர் 2025ல் 10.27% ஆகவும் பங்கு விகிதமானது அதிகரித்துள்ளது.

4.ஜி.ஆர்.எம் ஓவர்சீஸ்

ஜி.ஆர்.எம் ஓவர்சீஸ் பங்கானது 132% ஏற்றம் கண்டுள்ளது. இது 202 ரூபாயில் இருந்து 470 ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது. இதில் எஃப்.ஐ,ஐ-க்கள் டிசம்பர் 2024 நிலவரப்படி 0.17% ஆகவும், மார்ச் 2025 நிலவரப்படி 0.72% ஆகவும், ஜூன் 2025ல் 1.89% ஆகவும், செப்டம்பர் 2025ல் 3.36% ஆகவும் பங்கு விகிதமானது இருந்தது.

5.எல்&டி பைனான்ஸ்

எல்&டி பைனான்ஸ் பங்கானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 122% அதிகரித்துள்ளது. இது 136 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது. இதில் எஃப்.ஐ,ஐ-க்கள் டிசம்பர் 2024 நிலவரப்படி 5.30% ஆகவும், மார்ச் 2025 நிலவரப்படி 5.48% ஆகவும், ஜூன் 2025ல் 6.19% ஆகவும், செப்டம்பர் 2025ல் 6.40% ஆகவும் பங்கு விகிதமானது அதிகரித்துள்ளது.

6. ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ்

ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ் பங்கு விலையானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 109% ஆக ஏற்றம் கண்டுள்ளது. இது 626 ரூபாயில் இருந்து, 1,309 ரூபாயாக உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் எஃப்.ஐ,ஐ-க்கள் டிசம்பர் 2024 நிலவரப்படி 0.51% ஆகவும், மார்ச் 2025 நிலவரப்படி 0.69% ஆகவும், ஜூன் 2025ல் 1.62% ஆகவும், செப்டம்பர் 2025 நிலவரப்படி 2.17% ஆகவும் பங்கு விகிதமானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

7.அப்பல்லோ மைக்ரோசிஸ்டம்ஸ்

அப்பல்லோ மைக்ரோசிஸ்டம்ஸ் பங்கானது நடப்பு ஆண்டில் 115 ரூபாயில் இருந்து, 238 ரூபாயாக 106% அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கில் எஃப்.ஐ,ஐ-க்கள் டிசம்பர் 2024 நிலவரப்படி 0.74% ஆகவும், மார்ச் 2025 நிலவரப்படி 0.93% ஆகவும், ஜூன் 2025ல் 7.16% ஆகவும், செப்டம்பர் 2025 நிலவரப்படி 8.94% ஆகவும் பங்கு விகிதமானது காணப்படுகிறது.

8.கார் டிரேட் டெக்

கார் டிரேட் டெக் பங்கானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 85% அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. இதனிடையே பங்குகள் விகிதமானது எஃப்.ஐ.ஐ-க்களின் வசம் டிசம்பர் 2024 நிலவரப்படி 55.12% ஆகவும், மார்ச் 2025 நிலவரப்படி 60.96% ஆகவும், ஜூன் 2025ல் 67.30% ஆகவும், செப்டம்பர் 2025 நிலவரப்படி 68.51% ஆகவும் பங்கு விகிதமானது இருந்தது.

9.டைமெக்ஸ் குரூப்

டைமெக்ஸ் குரூப் இந்தியா பங்கானது நடப்பு ஆண்டில் 80% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கில் எஃப்.ஐ.ஐ-க்கள் வசம் டிசம்பர் 2024 காலாண்டில் 0.10% பங்கும், மார்ச் 2025 காலாண்டில் 0.11% பங்கும், ஜூன் 2025 காலாண்டில் 1.10% பங்கும், செப்டம்பர் 2025 காலாண்டில் 1.61% பங்கும் வைத்திருந்தனர்.

10.நவீன் ப்ளூரைன்

நவீன் ப்ளூரைன் இண்டர்னேஷனல் பங்கானது நடப்பாண்டில் 80% ஏற்றம் கண்டுள்ளது. இதில் எஃப்.ஐ.ஐ-க்கள் வசம் டிசம்பர் 2024 காலாண்டில் 18.55% பங்கும், மார்ச் 2025 காலாண்டில் 20.16% பங்கும், ஜூன் 2025 காலாண்டில் 21.55% பங்கும், செப்டம்பர் 2025 காலாண்டில்22.15% பங்கும் கைவசம் கொண்டிருந்தனர்.

11. தங்கமயில் ஜுவல்லரி

ஜூவல்லரி நிறுவனமான தங்கமயில் ஜுவல்லரி பங்கின் விலையானது நடப்பு ஆண்டில் 75% ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எஃப்.ஐ.ஐ-க்கள் வசம் டிசம்பர் 2024 காலாண்டில் 4.05% மும், மார்ச் 2025 காலாண்டில் 4.41%மும், ஜூன் 2025 காலாண்டில் 4.49% மும், செப்டம்பர் 2025 காலாண்டில் 4.61%மும் இருந்தது.

12.ஆத்தம் இன்வெஸ்ட்மென்ட்

ஆத்தம் இன்வெஸ்ட்மென்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 70% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கில் எஃப்.ஐ.ஐ-க்கள் டிசம்பர் 2024 காலாண்டில் 7.31% பங்கும், மார்ச் 2025 காலாண்டில் 7.41%- பங்கும், ஜூன் 2025 காலாண்டில் 7.94% பங்கும், செப்டம்பர் 2025 காலாண்டில் 14.11% பங்கும் கைவசம் வைத்துள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

FIIs Silent Strategy: Which 7 stocks from their secret list turned multibaggers in 2025?

Despite a volatile market, FIIs increased stakes in twelve selected stocks for three quarters. Seven of these high-conviction picks turned multibaggers in CY25, delivering returns up to 3,650% Story first published: Tuesday, December 23, 2025, 11:03 [IST] Other articles published on Dec 23, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *