கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!! – Allmaa

befunky-collage83-1766405536

  செய்திகள்

கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!!

News oi-Pugazharasi S By Published: Monday, December 22, 2025, 17:42 [IST] Share This Article

தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது உங்கள் எதிர்காலத்தின் ஜாக்பாட் ஆக இருக்கலாம். சர்வதேச சந்தையில் நிலவி வரும் அசாதாரண சூழல் மத்தியில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10,000 டாலர்கள் என்ற வியக்கத்தக்க இலக்கை எட்டும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சாதனையானது நிகழ்ந்தால் உங்களிடம் இருக்கும் சில சவரன் தங்கம் கூட, ஒரு நாள் மிகப்பெரிய சொத்தாக உருவெடுக்கலாம்.

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கி குவித்து வரும் சூழலில், பணவீக்கத்தின் வேகமும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். நடுத்தர வர்க்க மக்களுக்கு இது ஒரு சவாலான ஒன்றாக இருந்தாலும், புத்திசாலியான முதலீட்டாளர்களுக்கு இது கோடீஸ்வரர்களாக ஒரு நல்ல வாய்ப்பு எனலாம். ஆக உங்கள் லாக்கரில் இருக்கும் தங்கத்தின் தலையெழுத்தானது மாறப்போகிறதா, உண்மையில் 10,000 டாலர் இலக்கை எட்ட வாய்ப்பிருக்கிறதா? முழுமையான அலசல் இதோ..

கையில் இருக்கும் தங்கத்தை 1 கிராம் கூட விற்காதீங்க.. தங்கம் விலை 10000 டாலராக உயர வாய்ப்பு..!!

உச்சம் தொடும்!

பிரபல சந்தை வல்லுநர் எட் யார்டெனி (Ed Yardeni) வெளியிட்டுள்ள இந்த அதிரடி கணிப்பானது, உலக முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2029ம் ஆண்டில் பங்குச் சந்தை மற்றும் தங்கம் ஆகிய இரண்டுமே புதிய உச்சங்களைத் தொடும் என்று கணித்துள்ளார். அமெரிக்காவின் எஸ்&பி குறியீடு மற்றும் தங்கம் ஆகிய இரண்டுமே 10,000 என்ற இலக்கை எட்டலாம் என கணித்துள்ளார். இது தற்போதைய சந்தை சூழலில் இருந்து இருமடங்காக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டிலேயே 67% அதிகரித்துள்ள தங்கம், தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை, புவிசார் அரசியல் பதற்றங்கள், வர்த்தக பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்முதல், டாலர் பலவீனம் மற்றும் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் மத்தியில் தொடர்ந்து அதிகரிக்கலாம்.

குறுகிய காலத்தில் எப்படி?

அமெரிக்கப் பங்குச் சந்தையின் குறியீடான எஸ்&பி 500, 2026ம் ஆண்டின் இறுதிக்குள் 7,700 புள்ளிகளைத் தொடும் என்று கணித்துள்ளார். இது நடப்பு ஆண்டில் 16.2% அதிகரித்து, 6,834.50 புள்ளிகளில் உள்ளது. இதன்படி பார்த்தால் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 13% கூடுதல் லாபத்தை இது முதலீட்டாளர்களுக்கு தரக்கூடும். இந்த இலக்கு எட்டப்பட்டால், எஸ்&பி 500 தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்த வரலாற்றுச் சாதனையாக இது அமையும்.

குறுகிய கால அளவில் இவ்விரண்டையும் பார்த்தால், டெக்னிக்கலாக பங்குச்சந்தை வீழும்போது தங்கம் உயருவதையும், தங்கம் வீழும்போது பங்குச்சந்தை உயருவதையும் காணலாம். இதனால் ஒருவர் முதலீட்டுத் தொகுப்பில் தங்கம் இருப்பது ரிஸ்க்கை குறைக்க உதவும்.

இதுவே நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் மற்றும் பங்குச் சந்தை ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான வளர்ச்சி பாதையை கொண்டுள்ளன. இதனால் தான், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் (2029-ல்) இவை இரண்டுமே 10,000 என்ற புள்ளியை எட்டும்.

AI துறையில் ஏற்படப்போகும் மோதல்கள்

2026-ஆம் ஆண்டில் AI சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என கூறும் நிபுணர், இதுவரையில் தனித் தனி பாதையில் பயணித்த ஐடி ஜாம்பவான்கள், தற்போது ஏஐ காரணமாக ஒரே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் போட்டி அதிகரிக்கும். சந்தையில் தங்களை சிறந்த நிறுவனமாக நிறுத்திக் கொள்ள ஏஐ உள்கட்டமைப்பிற்காக அதிக செலவு செய்வார்கள். இதனால், அவர்களுக்குத் தேவையான சேவைகளையும் தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்கும் மற்ற நிறுவனங்கள் பெரும் லாபம் அடையும். இதனால் எஸ் & பி குறியீடும் உச்சம் தொடலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Can Gold and the S&P 500 Both Hit 10,000? Ed Yardeni’s Bold Prediction Explained

Strategist Ed Yardeni predicts both Gold and the S&P 500 will hit 10,000 by 2029. He believes corporate profit growth and massive central bank buying will drive this rare, simultaneous surge. Story first published: Monday, December 22, 2025, 17:42 [IST] Other articles published on Dec 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *