Breaking: மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

goldf78-1766401703

  செய்திகள்

மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

News oi-Devika Manivannan By Published: Monday, December 22, 2025, 16:38 [IST] Share This Article

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு கண்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. காலை , மாலை என இரண்டு வேலையும் இன்று தங்கம் விலை உயர்வு கண்டிருக்கிறது . தற்போது சென்னையில் ஒரு கிராம் தங்கம் வரலாற்று உச்சத்தை எட்டி 12,570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை ஒரே நாளில் 1360 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. இதன் மூலம் மீண்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயை கடந்து 1,00, 560 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டு இருக்கிறது. 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை 1700 ரூபாய் உயர்வு கண்டு 1, 25,700 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்தது தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

நடப்பு ஆண்டில் அதிகபட்ச தங்கத்தின் விலை இது தான். தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 7,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது ஒரு சவரன் 57,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . அப்படி பார்க்கும்போது இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 43,120 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது .

Also Readதங்க நகை கடன்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!! வங்கிகளுக்கு பறந்த உத்தரவு..!! மக்களே கவனம்..!!தங்க நகை கடன்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!! வங்கிகளுக்கு பறந்த உத்தரவு..!! மக்களே கவனம்..!!

24 கேரட் தங்கத்தின் விலையும் உயர்ந்திருக்கிறது ஒரு கிராமுக்கு 185 ரூபாய் விலை உயர்ந்து சென்னையில் 13,713 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1480 ரூபாய் விலை உயர்ந்த 1,09,704 ரூபாய்க்கும் 10 கிராம் 1, 37,130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .18 கேரட் தங்கம் வரலாற்று உச்சத்தை தொட்டுவிட்டது. ஒரு கிராம் 10,490 ரூபாய்க்கும், ஒரு சவரன் 83 ,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For Youமறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!மறைமுகமாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா , சீனா..!! ஸ்தம்பித்து நிற்கும் உலக சந்தை!!

வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. காலை ஒரு கிராம் 5 ரூபாய் விலை உயர்வு கண்டு 231 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 ,31,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே இந்த ஆண்டின் உச்சபட்ச விலையையும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தையும் தொட்டுள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பும், சீனா உள்ளிட்ட நாடுகளின் வங்கிகள் அதிக தங்கம் வாங்குவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம். வெள்ளிக்கு தொழில்துறை டிமாண்ட் உள்ளது, ஆனால் அதற்கேற்ப சப்ளை இல்லை என்பதால் விலை உயர்கிறது.

Share This Article English summary

Gold rate in Chennai once again crossed 1 lakhs mark today

Gold rate in Chennai once again crossed 1 lakhs mark , the rate of gold has increased twice in a day and silver price also reached all-time high. Story first published: Monday, December 22, 2025, 16:38 [IST] Other articles published on Dec 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *