வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா?

goldf81-1766378638

  செய்திகள்

வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா?

News oi-Devika Manivannan By Published: Monday, December 22, 2025, 10:15 [IST] Share This Article

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை தருகின்றன. தங்கத்தை விட மிக வேகமாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது . வெள்ளியின் விலை ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது .

தங்கம், வெள்ளி விலை டிசம்பர் மாதத்தில் பெருமளவில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. வரலாற்றிலேயே இல்லாத அளவாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது .டிசம்பர் 15ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 12, 515 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்து விற்பனையானது.

வார தொடக்கத்திலேயே ஷாக்!! புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!! இனியும் ஏறுமுகம் தானா?

டிசம்பர் 15ஆம் தேதிக்கு பின் தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. நேற்று 12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று 12,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 640 ரூபாய் விலை உயர்ந்து 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also Readதங்க நகை கடன்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!! வங்கிகளுக்கு பறந்த உத்தரவு..!! மக்களே கவனம்..!!தங்க நகை கடன்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ..!! வங்கிகளுக்கு பறந்த உத்தரவு..!! மக்களே கவனம்..!!

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 87 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 13,615 ரூபாய்க்கும் , 10 கிராம் 1,36,150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 10,420 ரூபாய்க்கும் ஒரு சவரன் 83,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ 5000 ரூபாய் விலை உயர்ந்து 2,31,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை டிசம்பர் 1ஆம் தேதி 196 ரூபாயாக இருந்து இன்று வரை கிராமுக்கு 35 ரூபாய் உயர்வு கண்டுள்ளது. வெள்ளி விலை போகிற போக்கில் இந்த ஆண்டு இறுதிக்குள் கிராம் 250 ரூபாயை எட்டிவிடும் போல இருக்கிறது.

Recommended For Youநடப்பாண்டில் 100% லாபம் தந்த Silver ETF: எப்படி முதலீடு செய்வது? விரிவான வழிகாட்டிநடப்பாண்டில் 100% லாபம் தந்த Silver ETF: எப்படி முதலீடு செய்வது? விரிவான வழிகாட்டி

எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் 10 கிராமின் விலை 0.92 சதவீதம் விலை உயர்ந்து 1,35,245 ரூபாய் என வர்த்தகமாகிறது. வெள்ளி ஒரு கிலோ வரலாற்று உச்சமாக ஒரே நாளில் 2.66 சதவீதம் உயர்ந்து 2,13,978 ரூபாய் என வர்த்தகம் செய்யப்படுகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் இப்படி விலை உயர்ந்து இருப்பது தொடர்ந்து தங்கம் , வெள்ளி விலை ஏறுமுகமாகவே இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு, வெள்ளி ஏற்றுமதிக்கு சீனா விதித்த தடை உள்ளிட்டவை காரணமாக தொடர்ந்து தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வருகின்றன.

Share This Article English summary

Gold and Silver rates in Chennai once again reaches all time high

Silver rate reaches all time high as one gram is selling for rs 231 and gold rate is once again inching towards 1 lakh mark. Story first published: Monday, December 22, 2025, 10:15 [IST] Other articles published on Dec 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *