தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்! – Allmaa

befunky-collage62-1766135518

  செய்திகள்

தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்!

News oi-Pugazharasi S By Published: Friday, December 19, 2025, 14:42 [IST] Share This Article

பொதுவாக ஒரு நிறுவனத்தின் லாபம் குறைந்தாலோ அல்லது நஷ்டம் ஏற்பட்டாலோ, முதலில் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தான் வேலையை விட்டு தூக்குவார்கள். ஆனால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யம் சரிவைச் சந்தித்த போது, இந்த வீழ்ச்சிக்கு நானே பொறுப்பு எனக் கூறி தன்னைத் தானே வேலையை விட்டு நீக்கிக் கொண்ட ஒரு கோடீஸ்வரரை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அவர்தான் முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் எம்.வி.சுப்பையா. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது, தனது ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு, அவர் எடுத்த அந்த ஒரு மாஸ் முடிவு. இன்று முருகப்பா குழுமத்தைச் இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு மாஸ் முடிவு எனலாம். இன்று முருகப்பா குழுமத்தைச் இந்தியாவின் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது. ஒரு தலைவன் என்பவன் பதவியை விட, நிறுவனத்தின் நலனையே பெரிதாகக் கருத வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் அவரது வியக்கத்தக்க வரலாற்றுப் பாடத்தைப் பார்ப்போம்.

தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்!

தன்னையே பணியில் இருந்து நீக்கியவர்?

இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதானது கடந்த 2012ம் ஆண்டு சுப்பையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அவர் செய்த ஒரு மிகப்பெரிய காரியம் இந்திய தொழில் உலகையே அவரின் பக்கம் திரும்ப வைத்தது. அதாவது கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவின் பெரும்பாலான தொழில் குடும்பங்கள் வாரிசு உரிமையையே அதிகாரமாகக் கொண்டிருந்த நிலையில், எம் வி சுப்பையா துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். அது நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த முருகப்பட்ட குழுமத்தின் தலைவராக புகழின் உச்சத்தில் இருந்தபோதே பதவியில் இருந்து விலகியது தான். இரத்த உறவுகளின் அடிப்படையில் நிறுவனத்தை நடத்துவதை விட, தகுதியான மேலாண்மை கட்டமைப்பு முக்கியம் என நம்பிய அவர், தனது பதவியை இன்ஃபோசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு வெளி நபரிடம் ஒப்படைத்தார்.

வாரிசை விட அனுபவமே முக்கியம்?

1939ம் ஆண்டு தமிழ்நாட்டின் பல்லத்தூரில் பிறந்த சுப்பையா, புகழ்பெற்ற நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். பாரம்பரியமாகத் தொழில் புரியும் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நேரடியாகத் தலைவராக அமர அவர் விரும்பவில்லை. இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பொறியியலும், ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மையும் பயின்றார். அதன் பின்னர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பயின்றார். இது 1960-களில் ஒரு இந்திய வாரிசுக்கு அரிய விஷயமாக இருந்தது.

முருகப்பா குழுமத்தில் அவர் நுழைந்தபோது, நேரடியாகத் தலைமைப் பதவிக்கு வரவில்லை. மாறாக டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் அடிப்படை பணியில் இருந்து தனது பணியைத் தொடங்கினார்.

EID பாரி நிறுவனத்தை மீட்டெடுத்த வித்தை

கடந்த 1984 ல் முருகப்பா குழுமத்தை கைப்பற்றியபோது, அது நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில் தான் நிறுவனம் சுப்பையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரு வாரிசாக செயல்படாமல், ஒரு சரியான ஆலோசகராகவும், நிபுணராகவும் செயல்பட்டார். நஷ்டத்தை தரக்கூடிய பிரிவுகளை குறைத்தார். செயல்பாடுகளை மேம்படுத்த தொழில்முறை மேலாளர்களை நியமித்தார். குறிப்பாக பாரிவேர் பிரிவை நவீனப்படுத்தி ஒரு பிராண்டாக உருவாக்கினார். அந்த ஒரு தசாப்தத்தில் தான் நிறுவனம் லாப பாதைக்குக்கும் திரும்பியது.

பதவியில் இருந்து விலகல் ஏன்?

1996ல் முருகப்பா குழுமத்தின் தலைவரானர். தலைமை பதவியில் ஒருவர் நீண்ட கால இருப்பது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது. ஆக எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ப முருகப்பா கார்ப்பரேட் போர்டு என்ற அமைப்பையும் உருவாக்கினார். அதில் பல உறுப்பினர்களையும் சேர்த்து அதிகாரத்தை பரவலாக்கினார். இதனிடையே கடந்த 2001ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான என்.எஸ். ராகவனை தலைவராக நியமித்து விட்டு, சுப்பையா விலகினார்.

அதன் பிறகு 2004ல் அனைத்து பதவிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்றார். இருப்பினும் அப்போதும் கூட வீட்டிலேயே காலத்தை போக்காமல், 2008 – 2013 வரை மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) தலைவராக பணியாற்றினார். அதன் மூலம் மில்லியன் கணக்கான இந்திய இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் முறையான கட்டமைப்பை உருவாக்கினார். தனது குடும்ப அறக்கட்டளையான ஏ.எம்.எம் (A.M.M.) மூலம் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளையும் தொடர்ந்தார். இன்று முருகப்பா குழுமத்தின் மதிப்பு சுமார் 85,000 கோடி ரூபாயாகும். அதற்கு சுப்பையாவின் கொள்கைகள், வழிகாட்டுதல்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையாகாது.

Share This Article English summary

How do you save an 85,000-crore empire by quitting? MV Subbiah’s master plan revealed

Let’s look at the remarkable life of MV Subbiah, a true legend who proved that a leader must value the welfare of the institution more than his own position. Story first published: Friday, December 19, 2025, 14:42 [IST] Other articles published on Dec 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *