Breaking: ஐடி துறையில் வசந்தம் திரும்புதா?அக்ஸென்சர் கொடுத்த அதிரடி ரிசல்ட்!டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்வு!

befunky-collage61-1766132557

  Market update

ஐடி துறையில் வசந்தம் திரும்புதா?அக்ஸென்சர் கொடுத்த அதிரடி ரிசல்ட்!டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்வு!

Market Update oi-Pugazharasi S By Published: Friday, December 19, 2025, 13:52 [IST] Share This Article

பங்குச் சந்தையில் ஐடி பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான நாள் எனலாம்.. உலகளாவிய ஐடி ஜாம்பவான் ஆன அக்ஸென்சர், தனது முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது வெறும் எண்கள் மட்டுமல்ல, மந்தமாக இருந்த இந்திய ஐடி துறைக்கு கிடைத்த ஒரு பூஸ்டர் டோஸ். இந்த வளர்ச்சியின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகள் ஏன் மின்னுகின்றன? இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியும் இனி மிளிருமா, விரிவாகப் பார்ப்போம்..

இந்திய ஐடி பங்குகள் ஏற்றம்?

இந்திய ஐடி பங்குகளான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்.சி.எல் டெக் மற்றும் பிற ஐடி பங்குகள் இன்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்த ஏற்றமானது அக்ஸென்சர் நிறுவனத்தின் சாதகமான காலாண்டு முடிவுகளுக்கு மத்தியில் கண்டுள்ளது. இந்த ஏற்றம் இப்படியே தொடருமா, இந்திய ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் அக்ஸென்சர்-ன் முடிவைத் தொடர்ந்து சிறப்பாக இருக்குமா என்ற எதிர்பார்பை முதலீட்டாளார்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

ஐடி துறையில் வசந்தம் திரும்புதா?அக்ஸென்சர் கொடுத்த அதிரடி ரிசல்ட்!டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்வு!

குறிப்பாக எல்& டி டெக்னாலஜி பங்கானது இன்று 1.5% மேலாக ஏற்றம் கண்டு, 4,625 ரூபாயாகவும், இன்ஃபோசிஸ் பங்கானது 1% மேல் ஏற்றம் கண்டு, 1643.90 ரூபாயாகவும் காணப்படுகிறது. பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், டிசிஎஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட பங்குகள் 1% வரையில் ஏற்றம் கண்டுள்ளன. இதனிடையே நிஃப்டி ஐடி குறியீடானது 1.08% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

அக்ஸென்சர்-ன் முடிவு எப்படி?

அக்ஸென்சர் நிறுவனமானது எதிர்பார்த்த காலாண்டு முடிவுகளை காட்டிலும் சிறந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது அதிகரித்து வரும் ஐடி தேவையை காட்டுகிறது. குறிப்பாக அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு மற்றும் அது சார்ந்த சேவைகள் என அனைத்தும் ஐடி நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளன. இந்த சூழலில் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியும் மெதுவாக முன்னேற்றம் காணலாம் என்ற நம்பிக்கையானது துளிர் விடத் தொடங்கியுள்ளது. இதுவே இந்திய ஐடி பங்குகள் ஏற்றம் காண காரணமாக அமைந்துள்ளது.

அக்ஸென்சர் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது கடந்த வருடத்தை காட்டிலும் 6% அதிகரித்து, 18.7 பில்லியன் டாலர்களாக வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து மட்டும் வருவாய் வளர்ச்சியானது 4% அதிகரித்து, 9.08 பில்லியன் டாலராகவும், ஐரோப்பிய யூனியன்களில் 8% அதிகரித்து, 6.94 பில்லியன் டாலராகவும், ஆசிய நாடுகளில் 7% வளர்ச்சி கண்டு, 2.73 பில்லியன் டாலராகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இது தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் தேவையை காட்டுகிறது. இது பல நிச்சயமற்ற சூழல்கள், சவால்கள் இருந்து வரும் சூழலிலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது. இதன் மொத்த மார்ஜின் வளர்ச்சியானது 33.1% ஆக அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்பு என்ன?

அக்ஸென்சர் நிறுவனம் தனது முழு ஆண்டு வருவாய் வளர்ச்சி இலக்கை 2% -5% ஆக தக்கவைத்துள்ளது. இதில் அமெரிக்க அரசாங்க தொழிலால் ஏற்படக்கூடிய 1% பாதிப்பு சேர்க்கப்படவில்லை. இருப்பினும் 2026 நிதியாண்டிற்கான நிறுவனத்தின் இயல்பான வருவாய் வளர்ச்சி மாற்றமின்றி 0.5% – 3.5% ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சி சீராக இருக்கும் என்ற நம்பிக்கையை காட்டுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள் எப்படி?

வாடிக்கையாளர்களின் முன்னுரிமைகள் மாறாமல் இருப்பதை அக்ஸென்சரின் கருத்துக்கள் காட்டுகின்றன. இதுகுறித்து ஜே.எம் ஃபைனான்ஷியல் நிறுவனம் பெரிய அளவிலான டிஜிட்டல் டிரான்ஸ்பார்மேஷன் திட்டங்கள், எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடர்கின்றன. ஆனால் விருப்பத்தின் அடிப்படையில் செலவிடப்படும் டிஸ்கிரிக்ஷனரி ஸ்பெண்டிங் (Discretionary spending) கடந்த ஆண்டைப் போலவே பெரிய மாற்றமின்றி உள்ளது. இருப்பினும் டிஜிட்டல் கோர் மாடர்னைசேஷன் துறையில் உள்ள மிகப்பெரிய வாய்ப்புகள், அதைத் தொடர்ந்து தொழில்துறை சார்ந்த பிரத்யேக தீர்வுகள் மற்றும் மேனேஜ்டு சர்வீசஸ் மூலம் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் உத்திகள் ஆகியவை இந்திய ஐடி துறைக்கு நீண்ட காலத்திற்கு வாய்ப்புகளை வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்திய நிறுவனங்களின் தனிப்பட்ட நிதி நிலவரம், ஒப்பந்த விகிதம், விரிவாக்க செயல்பாடுகள் என அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, சரியான ஆலோசனையுடன் திட்டமிடுதல் நல்லது..

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Is the IT Boom Back? How Accenture’s results are fueling a rally in TCS, Infosys, and HCL Tech?

Accenture’s strong Q1 results and strong new bookings have sparked a rally in Indian IT stocks like TCS and Infosys etc.. This surge signals a resilient demand for AI and digital transformation. Story first published: Friday, December 19, 2025, 13:52 [IST] Other articles published on Dec 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *