Breaking: ரூ.4.37 லட்சம் காலி! ஒரு சின்ன தவறால் மொத்த சேமிப்பும் அவுட்!ஆன்லைன் லோன் ஆப் மோசடியை தவிர்ப்பது?

befunky-collage58-1766120985

  செய்திகள்

ரூ.4.37 லட்சம் காலி! ஒரு சின்ன தவறால் மொத்த சேமிப்பும் அவுட்!ஆன்லைன் லோன் ஆப் மோசடியை தவிர்ப்பது?

News oi-Pugazharasi S By Published: Friday, December 19, 2025, 10:39 [IST] Share This Article

கையில் ஸ்மார்ட்போன் இருந்தா போதும், அவசர தேவைக்கு உடனே கடன் பெறலாம்.. இன்றைய டிஜிட்டல் உலகில் கடன் வாங்குவது மிக மிக எளிதாகி விட்டது என பலரும் வியக்கலாம். ஆனால் இந்த நல்லவிஷயம் கர்நாடகவை சேர்ந்த இன்ஜினியரின் 4.37 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளது.

உடனடி கடன் வசதி என வரும் ஒரு சிறு செய்தி கூட, உங்கள் மொத்த பணத்தையும் வாரிச் செல்லலாம். உங்களை தீராத கடன் வலைக்குள்ளும் தள்ளிவிடலாம். ஆன்லைனிலேயே புழங்கும் மக்கள் கூட, எளிதாக இந்த மோசடி வலையில் சிக்கி தவிக்கும் நிலை தான் இருந்து வருகிறது. ஆசை காட்டி மோசம் செய்யும் லோன் ஆப் மாய வலையில் சிக்காமல், உங்கள் உழைப்பின் ஊதியத்தை பாதுகாப்பது எப்படி? இன்ஜினியரின் ஏமாற்றத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய 5 பாடங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ரூ.4.37 லட்சம் காலி! ஒரு சின்ன தவறால் மொத்த சேமிப்பும் அவுட்!ஆன்லைன் லோன் ஆப் மோசடியை தவிர்ப்பது?

பாதிப்பு யாருக்கு?

சமீபத்தியில் DHல் வெளியான அறிக்கையின் படி, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோமொபைல் இன்ஜினியர், சமீபத்தில் ஒரு போலியான லோன் ஆப் மூலம் மோசடியில் சிக்கி 4.37 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். உடனடி கடன் என்ற பெயரில் நடக்கும் இந்த நவீன கால நிதி மோசடிகள் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

என்னதான் நடந்தது?

பாதிக்கப்பட்ட இன்ஜினியர் ஒரு மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, வெறும் 12,000 ரூபாய் மட்டுமே குறுகிய கடனாகப் பெற்றுள்ளார். அந்த பணத்தைத் திருப்பிச் செலுத்திய பின், மீண்டும் கடன் வாங்க தூண்டப்பட்டுள்ளார். அதன் பிறகு தான் அவர்களின் சுயரூபமே தெரிய வந்துள்ளது. அதாவது அதிகப்படியான மறைமுக கட்டணங்கள், அபராதங்கள் மற்றும் அதிகளவிலான வட்டி என தொடர்ந்து பணத்தை கறக்க ஆரம்பித்துள்ளனர்.

கேட்ட பணத்தை கொடுக்கவில்லை எனில், தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர். அதற்கு பயந்து போன இன்ஜினியர், பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 4.37 லட்சம் செலுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத சூழலில் சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளார். இது குறித்து புகாரும் அளித்துள்ளார். தற்போது இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இதில் இருந்து எதிர்காலத்தில் கடன் வாங்க நினைக்க ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

ஆப்- பின் நம்பகத்தன்மை எப்படி?

பணத் தேவை அவசரமாக இருக்கும் போது, பணம் கிடைத்தால் போதும் என வாங்காமல், அந்த ஆப் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் பலரும் அதை செய்யத் தவறுகிறார்கள். எந்த ஒரு லோன் ஆப்-யும் எடுக்கும் முன்பாகவே, அது ஒரு வங்கியா அல்லது நிதி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும். அதை எதுவுமே பார்க்காமல் உடனடியாக அப்ரூவல் தருகிறார்கள் என, கண்ணை கட்டிக் கொண்டு, தண்ணீரில் குதிக்காதீர்கள். இதுபோன்ற ஆப்கள் மிகவும் ஆபத்தானவை.

விதிமுறைகள் என்ன?

மோசடிகள் நடப்பது பெரும்பாலும் இதுபோன்ற அம்சங்களில் தான். மோசடி செயலிகளில் மறைமுக கட்டணங்கள் மற்றும் மிகக் குறுகிய கால அவகாசமே இருக்கும். ஆனால் இதெல்லாம் தெரியாமல் வாங்கியவர்கள், பின்னர் அவஸ்தை பட வேண்டியிருக்கும். ஆக கடன் வாங்கும் முன்பே வட்டி விகிதம் என்ன, செயலாக்க கட்டணங்கள் எவ்வளவு, அபராத விதிமுறைகள் என்ன என அனைத்தையும் விதிமுறைகளைப் படித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் சொல்லும் வாய்மொழி வாக்குறுதிகள் பிரச்சனை என வரும்போது எதுவும் செல்லாது. அது ஒப்பந்தங்களில் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். இது வரக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்க உதவும்.

மொபைல் அனுமதிகளைக் கட்டுப்படுத்துங்கள்

ஒரு ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்யும் போது, அதற்கு உங்கள் அனுமதி தேவைப்படும். கூடவே உங்கள் காண்டாக்ட் லிஸ்ட், போட்டோக்கள் மற்றும் மெசேஜ்களை அணுக அனுமதி கேட்கும். லோன் எடுப்பதற்கும் உங்கள் கேலரிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் அந்த சமயத்தில் யோசிப்பதில்லை. தேவையற்ற அனுமதிகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள். இது எதிர்காலத்தில் உங்களுக்கே எதிராக பிரச்சனையாக மாறலாம். ஒரு ஆப்பை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால், சரியான நிபுணர்களுடன் ஆலோசனை பெறுங்கள். உதாரணத்திற்கு அனுமதி பெற்ற ஒரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ, கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கேட்கின்றது. அப்படி இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் உங்கள் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்.

மிரட்டல்களுக்கு பயப்படாதீர்கள்?

மோசடி செய்பவர்களுக்கு மிகப்பெரிய ஆயுதமே உங்கள் பயம் தான். உங்களுடைய பதற்றம் தான். ஆக உங்களை மிரட்டினாலோ அல்லது ஆபாசமாக பேசினாலோ மேற்கொண்டு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, உடனடியாக போலீசில் புகார் அளிக்கலாம். அதோடு ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்யும் முன்பே, அதற்கான ரிவ்வியூகளை பாருங்கள். அதுவும் உங்களுக்கு ஒரு தெளிவை கொடுக்கும்.

தயங்காமல் புகாரளியுங்கள்?

பலரும் மோசடி நடந்திருந்தாலும், பயந்து புகார் அளிக்காமல் விட்டு விடுகிறார்கள். ஆக பயத்தை விடுத்து மோசடி உறுதியானால் சைபர் கிரைம் போர்ட்டல் அல்லது உள்ளூர் காவல் நிலைத்திலோ உடனே புகார் அளிக்கவும். இது உங்கள் இழப்பை தடுக்க உதவுவதுடன், மற்றவர்கள் இந்த வலையில் சிக்காமல் இருக்கவும் உதவும்.

டிஜிட்டல் கடன் சேவைகள் வளர்ந்து வரும் நிலையில், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு மட்டுமே உதவும். குறிப்பாக தனிநபர் கடன்களில் அதிக வட்டி, மன அழுத்தம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் போன்ற அபாயங்கள் உள்ளன. ஆக முழுமையான பின்னணி ஆய்வுக்குப் பிறகே எந்தவொரு கடன் விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தாலே பாதுகாப்பான கடனும் பெறலாம். எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராது..

Share This Article English summary

A simple Rs 12,000 loan cost to karnataka engineer Rs 4.37 Lakhs. How can you stay safe in the digital lending world

A small Rs. 12,000 loan turned into a Rs. 4.37 lakh sacm for a Karnataka engineer. Don’t let instant apps trap you. Learn the 5 essential rules to spot scams Story first published: Friday, December 19, 2025, 10:39 [IST] Other articles published on Dec 19, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *