தங்கத்த விடுங்க வெள்ளி விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!! ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்த விலை!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 17, 2025, 10:06 [IST] Share This Article
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது. சென்னையில் திங்கட்கிழமை அன்று ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக கிராமுக்கு 145 ரூபாய் உயர்வு கண்டு ஒரு கிராம் 12,515 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,00,120 ரூபாய் என ஒரு லட்சம் ரூபாய் மைல்கல்லை கடந்தது.
தங்கத்தின் இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த சூழலில் நேற்றைய தினம் ஆறுதல் தரக்கூடிய வகையில் தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராமுக்கு 165 ரூபாய் விலை குறைந்து 12,350 க்கும் ஒரு சவரன் 98 , 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் இந்த விலை குறைவு அப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில். இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது .

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து 12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் உயர்ந்து 99,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது . 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை 500 ரூபாய் விலை உயர்ந்து 1,24,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் விலை உயர்ந்து 13,528 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் 440 ரூபாய் விலை உயர்ந்து 1,08,224 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து 10,350 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து 82, 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read
தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!!
தங்கத்தின் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை தருகிறது என்றால் வெள்ளியின் விலை உயர்வு அட்டாக் வரவழைத்து விடும் அளவிற்கு இருக்கிறது . ஒரே நாளில் தடாலடியாக வெள்ளியின் விலை கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 222 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ 11,000 ரூபாய் உயர்வு கண்டு 2,22,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended For You
வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்
திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி 215 ரூபாய் என உயர்ந்தது, நேற்று 211 ரூபாய் என விலை குறைந்து இன்று 222 ரூபாய் என உயர்வு கண்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி 196 ரூபாயாக இருந்த வெள்ளி இன்று 26 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் வெள்ளி விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. காலை 9.20 மணி அளவில் ஒரு கிலோ வெள்ளி சுமார் 4% விலை உயர்ந்து 2,04,445 ரூபாய் என வர்த்தகமானது. இதுவரை இல்லாத வரலாற்று உச்சம் இதுவாகும். அதேவேளையில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 65.63 டாலர்கள் என 65 டாலர்களை கடந்துவிட்டது.
Share This Article English summary
gold and silver rate see sudden spike in Chennai: Here is how much one gram cost?
Gold and silver rate see sudden spike in Chennai. Gold has seen a nominal rate hike whereas silver has jumped to an all time high. Story first published: Wednesday, December 17, 2025, 10:06 [IST] Other articles published on Dec 17, 2025
