தங்கம், வெள்ளி இறக்குமதி அதிரடி சரிவு! விலை உயர போகிறதா? சரியப் போகிறதா? ஷாக்கிங் ரிப்போர்ட்!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, December 17, 2025, 9:41 [IST] Share This Article
மஞ்சள் உலோகம்.. நம்மவர்களின் அசைக்க முடியாத ஒரு உணர்வுபூர்வமான முதலீடு. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 17%-க்கு மேல் சரிந்திருக்கிறது. வெள்ளியின் இறக்குமதியும் அதை விட அதிகமாக 33% குறைந்துள்ளது. இது வெறும் சாதாரணமான தரவு அல்ல. ஏனெனில் பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், தங்கம், வெள்ளி மீதான தேவை குறைந்திருப்பது கவலையளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை நிர்ணயிக்கும் இந்த அதிரடியான ரிப்போர்ட்டின் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன. இது அடுத்ததாக விலையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விரிவாக பார்ப்போம்.

இறக்குமதிகள் சரிவா?
அரசு தரவுகளின் படி, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் தங்க இறக்குமதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 – 2015ம் ஆண்டு முதல், 2024 – 2025ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் எந்த அளவுக்கு மாற்றம் இருக்கிறது என்பதை கீழ் வரும் தரவுகளை பார்த்தாலே புரிய வரும்.
அதாவது 2014 – 2015ம் ஆண்டில் 9.15 லட்சம் கிலோவாக இருந்த தங்கம் இறக்குமதி, 2024 – 2025ம் ஆண்டில் 7.57 லட்சம் கிலோவாக குறைந்துள்ளது. இது சுமார் 17.3% சரிவாகும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில், தங்கத்தின் இறக்குமதி அளவு குறைந்திருந்தாலும், விலையேற்றம் காரணமாக அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது 2024- 2025ம் ஆண்டில் இறக்குமதி மதிப்பானது 69% அதிகரித்து 58 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இறக்குமதியானது குறைந்திருந்தாலும், அதன் மதிப்பு உயர்ந்திருப்பதையே காட்டுகிறது. ஆக தங்கத்தின் இறக்குமதி குறைந்திருந்தாலும், இந்தியா அதற்கான செலவை தொகையில் பார்க்கும்போது 69% அதிகரித்தே செய்திருக்கிறது.
இந்தியாவில் விலை எப்படி?
இந்தியாவில் தங்கத்தின் விலையானது தீர்மானிப்பதில் உள்ளூர் மற்றும் சர்வதேச காரணிகள் என பலவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக சர்வதேச சந்தையின் விலை நிலவரம், ரூபாய் – டாலர் எக்ஸ்சேஞ்ச் விகிதம், அரசின் வரி விதிகள் என பலவும் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக இந்தியா தங்கத்தை டாலரின் மதிப்பில் இறக்குமதி செய்வதால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையும் போது, இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க செய்கிறது. அதோடு வரி விகிதம், ஜிஎஸ்டி வரி, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் என அனைத்தும் சேரும்போது விலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
விலை கட்டுப்பாடு குறித்து அரசு?
தொடர்ந்து விலை அதிகரித்து வரும் இந்த சூழலில், இறக்குமதியும் குறைந்துள்ளது. மேலும் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிப்பு மேற்கொண்டு விலையை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற கவலையும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதற்கிடையில் மக்களை உறுப்பினர்களின் தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, அரசின் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட பதிலில், தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களால் மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அரசு நேரடியாக விலை நிர்ணயம் செய்வதில் தலையிடுவதில்லை.
விலை நிர்ணயத்தில் தலையிட முடியாது என்று தெளிவாகத் தெரிவித்தாலும், இறக்குமதி வரியைக் குறைத்தல் மற்றும் சவரன் தங்கப் பத்திரங்கள், கோல்டி இடிஎஃப் போன்ற நிதி சார்ந்த முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைத்து, சாதாரண குடும்பங்களுக்குச் சேமிப்பை எளிதாக்க அரசு முயன்று வருகிறது என தெரிவித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Will gold and silver prices rise or fall due to the decline in their imports?
Despite the decrease in the volume of gold imports, India’s expenditure for it, when viewed in terms of value (or cost), has increased by 69%. Story first published: Wednesday, December 17, 2025, 9:41 [IST] Other articles published on Dec 17, 2025
