பாலிவுட்டில் மாஸ் காட்டும் ‘துரந்தர்‘.. 10 நாள் வசூல் மட்டும் பல கோடி!
News oi-Jaya Devi By Jaya Devi Published: Tuesday, December 16, 2025, 18:04 [IST] Share This Article
சென்னை: இந்த ஆண்டில் பாலிவுட் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக ‘துரந்தர்’ படம் உள்ளது. எந்தவிதமான பண்டிகையோ, விடுமுறையோ இல்லாத நேரத்தில் வெளியான இந்த படம் தினம், தினம் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளி வருகிறது.
ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி உள்ள துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் லீட் ரோலில் நடிக்க அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தெய்வதிருமகள் படத்தில் குட்டிப்பெண்ணாக வலம் வந்த சாரா இந்தி படத்தில், சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் என பலர் நடித்துள்ளனர்.
Photo Credit: B62 Studios
படத்தின் கதை: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு பயங்கரவாத நெட்வொர்க்கிற்குள் ஊடுருவி அதை அழிக்க ஆர். மாதவன் திட்டமிடுகிறார். இதை கனகச்சிதமாக செய்வதற்கு, எந்த அடையாளமும் இல்லாத, ஒரு புத்திசாலியான நபரைத் தேடி அலைகிறார். அந்த நேரத்தில் மாதவனின் கண்ணில் படுகிறார் ரன்வீர் சிங், பஞ்சாப் சிறையில் இருக்கும் அவரை வெளியில் அழைத்து வந்து, பயிற்சிகள் கொடுத்து, பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார். இந்த பயணத்தின் போது ரன்வீர் சிங்கிற்கு என்ன நடந்தது, பயங்கரவாத நெட்வொர்க்கை அழித்தாரா? இல்லையா? என்பது தான் ‘துரந்தர்’ திரைப்படத்தின் மீதி கதை.
10 நாள் வசூல்: டிசம்பர் 6ந் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இப்படம் தியேட்டரில் வெளியாகி நேற்றோடு பத்து நாட்களாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் வசூல் ரூ. 353.18 கோடியாக உள்ளது. இந்த தகவலை சாக்னில்க் வர்த்தக இணையதளம் தெரிவித்துள்ளது. ‘சையாரா’ திரைப்படம் 17 நாளில் ரூ. 302.1 கோடியை வசூலித்தது. அதேபோல, ‘சாவா’ திரைப்படம் 10 நாட்களில் ரூ. 326 கோடியை வசூலித்தது, ஆனால் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ படம் இந்த இரண்டு படங்களையும் விட மிக விரைவாக ரூ.353.18 கோடியாக வசூலித்து சாதனை படைத்து வருகிறார்.
வசூல் அதிகரிக்கும்: 2025 ஆம் ஆண்டில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக சையாரா மற்றும் சாவா ஆகிய படங்ககள் இருந்த நிலையில் வருடத்தின் கடைசியில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் இந்த இரண்டு படங்களுடன் போட்டி போட்டி அதிக வசூலை அள்ளிய பாலிவிட் திரைப்படங்களில் வரிசையில் மூன்றாவது படமாக உள்ளது. படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Ranveer Singh’s Dhurandhar 10 days box office collection
Ranveer Singh’s Dhurandhar 10 days box office collection, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி இருக்கும் துரந்தர் படத்தின் 10 நாள் வசூல் Story first published: Tuesday, December 16, 2025, 18:04 [IST] Other articles published on Dec 16, 2025
