SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!!
Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:45 [IST] Share This Article
நம்முடைய வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனை தகவல்கள் , தொலை தொடர்பு சேவை நிறுவனம் அனுப்பும் சலுகைகள், பல்வேறு கட்டணங்கள், அரசின் எச்சரிக்கைகள் , ஓடிபி உள்ளிட்டவை எஸ்எம்எஸ் வாயிலாக தான் நம்மை வந்தடைகின்றன . நமக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான முக்கியமான ஒரு ஊடகமாக எஸ் எம் எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் தான் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வங்கிகள் ஆகட்டும் அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் ஆகட்டும் , நமக்கு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களாகட்டும் எஸ் எம் எஸ் மூலமாக தான் தகவல்களை முதலில் நமக்கு தெரிவிக்கின்றன. அந்த வகையில் நம்முடைய போன்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எஸ்எம்எஸ் வருகின்றன .பெரும்பாலானவர்கள் அவற்றை படித்துப் பார்ப்பது கிடையாது இதன் காரணமாக சில சமயங்களில் முக்கியமான மெசேஜ்களை கூட நாம் தவற விட்டு விடுகிறோம் .

முக்கியமான ஓடிபி , வங்கி பரிவர்த்தனை சார்ந்த தகவல்கள் தாண்டி விளம்பரங்கள் ஸ்பேம் மெசேஜ்கள் உள்ளிட்டவை அதிகமாக வருகின்றன. இந்த நிலையில் தான் ஒரு எஸ்எம்எஸ் வரும்போது அதை திறந்து பார்க்காமலேயே அந்த எஸ்எம்எஸ் யாரிடமிருந்து வந்திருக்கிறது அதன் நோக்கம் என்ன என்பதை எளிதாக கண்டறிய வேண்டும் என்பதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்எம்எஸ் டேக்கிங் என்ற ஒரு புதிய சிஸ்டத்தை கொண்டு வந்திருக்கிறது.
Also Read
தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!!
இதன்படி நம்முடைய போனுக்கு வரக்கூடிய ஒவ்வொரு எஸ்எம்எஸ் இன் ஹெட்டரிலும் ஒரு குறிப்பிட்ட எழுத்து இருக்கும் . AD – Axisbank- S, VM – SBIBank-T, Ji- Rainalert- G என நமக்கு ஹெட்டர் காட்டும். இதில் இறுதியாக இருக்கும் ஒரு எழுத்தை வைத்து இந்த எஸ்எம்எஸ் யாரிடம் இருந்து வந்ததை தெரிந்து கொள்ளலாம். கடைசியாக இடம்பெற்றுள்ள இந்த ஒரு எழுத்து தான் அந்த எஸ்எம்எஸ் என்ன என்பதை நமக்கு விவரிக்கிறது.

S, T, P, G ஆகிய நான்கு எழுத்துக்களை டிராய் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. உங்களுக்கு வந்த எஸ் எம் எஸில் கடைசி எழுத்து P என இருந்தால் அது பிரமோஷனல் எனப்படும் விளம்பரம் தொடர்பான ஒரு மெசேஜ். அதுவே S என இருந்தால் சர்வீஸ் அதாவது சேவை தொடர்பான எஸ்எம்எஸ் ஆக இருக்கும். அது அடுத்ததாக T என்ற எழுத்து இருந்தால் அது பண பரிவர்த்தனை சார்ந்த otp போன்ற மெசேஜ்களாக இருக்கும். ஓடிபி ஆகியவை இதில் வரும்.G என்றால் அரசு அனுப்பக்கூடிய மெசேஜ்கள் மற்றும் எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அதில் இடம்பெற்றிருக்கும்.
Recommended For You
PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!!
இந்தியாவில் தேவையற்ற எஸ்எம்எஸ் – களை பெற்று ஏராளமான மக்கள் பணம் சார்ந்த மோசடிகளில் சிக்கிக் கொள்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் டிராய் இப்படி எஸ்எம்எஸ் டேக்கிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. எனவே இந்த ஒரு எழுத்தை கொண்டே அந்த எஸ் எம் எஸ் என்ன என்று பார்க்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுத்துக் கொள்ளலாம் . தேவைப்படவில்லை என்றால் அதை நாம் படிக்காமலேயே டெலிட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது .
Share This Article English summary
What is an SMS tagging system? Why should every mobile phone user know this?
Telecom Regulatory Authority of India (TRAI) new SMS tagging system has gone live; every message you receive will now include a single-letter identifier that clearly states its purpose. Story first published: Tuesday, December 16, 2025, 16:45 [IST] Other articles published on Dec 16, 2025
