PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! – Allmaa

pf7-1765879267

  செய்திகள்

PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, December 16, 2025, 15:32 [IST] Share This Article

இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிகச்சிறந்த ஒரு நிதி பாதுகாப்பை தருகிறது. ஓய்வு காலத்தில் பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய தொகை நிதி பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய அனைவருக்குமே பிஎஃப் கணக்கு இருக்கும் . மாதம்தோறும் இவர்களின் சம்பளத்தில் ஒரு தொகையும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையும் இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். பணி ஓய்வு பெறும் போது இந்த பணத்தை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது.

PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!!

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் நம்முடைய அவசர தேவைகளுக்கும் எடுத்து பயன்படுத்திக் கொள்வதற்கான வசதி இருக்கிறது . தற்போது நாம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பிஎஃப் அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து ஒப்புதல் தர வேண்டும். அதிகாரிகள் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணம் நம் கைக்கு வரும் . இதற்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் வரை தேவைப்படும்.

சில சமயங்கள் அதிகாரிகள் உங்களின் கோரிக்கையை நிராகரிக்கவும் செய்யலாம். தற்போது பிஎஃப் கணக்கில் இருக்குக்ம் பணத்தை எடுப்பது பல சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாகவே பெற்றுக் கொள்ளலாம். இது தவிர பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கும் வசதியையும் மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது.

Also Readவரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் epfo சந்தாதாரர்கள் கூடிய விரைவில் தங்களுடைய பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ வாயிலாக எடுக்கும் வசதி நடைமுறைக்கு வரும் என தெரிவித்திருக்கிறார். உங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய 75 சதவீத தொகையை எடுக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் வரும் மார்ச் மாதத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என தெரிவித்திருக்கிறார்.

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறியிருக்கும் அவர் பிஎஃப்-இல் இருக்கும் பணத்தை ஏடிஎம் மட்டும் இல்லாமல் யுபிஏஐ வாயிலாகவும் எடுக்க கூடிய வசதி கொண்டுவரப்படுவதாக கூறியிருக்கிறார். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை சந்தாரர்கள் எளிமையாக எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றங்களை அமலுக்கு கொண்டு வருகிறோம் என அவர் தெரிவித்திருக்கிறார் .

Recommended For You8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் தொகை கிடைக்கும்?8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அரியர் தொகை கிடைக்கும்?

அண்மை காலமாக பிஎஃப் கணக்குகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் உள்ளன. குறிப்பாக பிஎஃப் கணக்கு பாதுகாப்பானதாக அதிக வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது .இதற்கு முன் பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு 13 கேட்டகிரிகள் இருந்தன. அதனை வெகுவாக அரசு குறைத்துவிட்டது. மேலும் இதற்கு முன்பு தொடர்ந்து ஏழு ஆண்டு காலம் பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருந்தால் தான் அந்த பணத்தை எடுக்க முடியும் என்ற சூழல் இருந்தது அதனை தற்போது 12 மாதங்களாக மாற்றி இருக்கிறார்கள். எனவே தொடர்ந்து ஓராண்டு காலம் வேலை செய்து பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருந்தாலே ஒரு அவசர தேவைக்கு பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.

Share This Article English summary

PF ATM, UPI Withdrawal before March 2026, Says Labour Minister

Union Labour Minister Mansukh Mandaviya announced that EPFO will enable 75% EPF withdrawals via ATM and UPI before March 2026, simplifying access to funds previously requiring multiple forms. Story first published: Tuesday, December 16, 2025, 15:32 [IST] Other articles published on Dec 16, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *