ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை!! மக்களே இது தான் நல்ல சான்ஸ்.. உடனே கடைக்கு போங்க!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 10:10 [IST] Share This Article
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று தடாலடியாக உயர்ந்து ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்தது. இனி அவ்வளவு தான் மக்கள் சோகமடைந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை , மாலை என இரு வேளைகளிலும் உயர்ந்தது. இதன் படி கிராமுக்கு 145 ரூபாய் என அதிகரித்து வரலாற்று உச்சமாக ஒரு கிராம் தங்கம் விலை 12,515 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் என பார்த்தால் ஒரே நாளில் 1160 ரூபாய் உயர்ந்தது. 1,00,120 ரூபாய் வரலாற்று உச்சத்தை எட்டியது.

தங்கம் விலை சவரனுக்கு 1 லட்சம் ரூபாயை கடந்தது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இனி தங்கத்தை கனவில் தான் நினைக்க முடியும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இந்த சூழலில் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தங்கம்விலை இன்று குறைந்துள்ளது. குறிப்பாக ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கும் கீழ் வந்துவிட்டது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 165 ரூபாய் விலை குறைந்து 12,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் ஒரு சவரன் 1,320 ரூபாய் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் 98,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 1650 ரூபாய் குறைந்து 1,23,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Also Read
வரலாற்று உச்சத்தில் தங்கம், வெள்ளி..! விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா அரசு? நிதி அமைச்சகம் பதில்
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் 13, 653 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 180 ரூபாய் விலை குறைந்து 13, 473 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் இன்று 1440 ரூபாய் விலை குறைந்து 1,07,224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 140 ரூபாய் விலை குறைந்து 10,300 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1120 ரூபாய் விலை குறைந்து 82,400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Recommended For You
கைமீறி போகும் தங்கம் விலை!! 2 சவரன் நகை வாங்குனா கூட இந்த ஒரு ஆவணம் கட்டாயம் என அறிவிப்பு!!
வெள்ளி விலையும் தடாலடியாக குறைந்துள்ளது. நேற்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்வு கண்டு 215 ரூபாய்க்கும் ஒரு கிலோ 5000 ரூபாய் உயர்ந்து 2,15,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இன்று விலை சரிந்துள்ளது. ஒரு கிராம் 4 ரூபாய் குறைந்து 211 ரூபாய்க்கும் ஒரு கிலோ 4000 ரூபாய் குறைந்து 2,11,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம், வெள்ளி விலை குறைந்தன. தங்கம், வெள்ளி விலை நேற்று வரலாற்று உச்சத்தை எட்டியதால் பலரும் அவற்றை விற்பனை செய்து லாபம் பார்க்க தொடங்கினர். இதனால் இவற்றின் விலை குறைந்தது. எம்சிஎக்ஸ்-இல் தங்கம் 10 கிராம் 1,33,492 ரூபாய் என 0.48% குறைந்தது., வெள்ளி விலை ஒரு கிலோ 1,94,657 ரூபாய் என 1.64% சரிவை கண்டது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
After Historic high gold and silver prices see sudden decline in Chennai
After Historic high gold and silver prices see sudden decline in Chennai. Here is how much one sovereign gold cost today in Chennai. Story first published: Tuesday, December 16, 2025, 10:10 [IST] Other articles published on Dec 16, 2025
