2026ல் பெரும் வீழ்ச்சியா? நிபுணர்களின் ஆச்சரியக் கணிப்பு?அடுத்த ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 15, 2025, 12:49 [IST] Share This Article
தங்கம், இது வெறும் உலோகம் மட்டுமல்ல, இந்தியர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ள ஒரு முதலீடு. ஒரு பாதுகாப்பு. பல தலைமுறைகளின் நம்பிக்கை. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட தங்கம் விலையானது 2025ம் ஆண்டில் இதுவரையில் வரலாறு காணாத அளவு உச்சத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் 2026ல் எப்படி இருக்கும்? இதேபோன்று லாபத்தை வாரிக் கொடுக்குமா அல்லது சரிவைக் காணுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
ஒருபுறம் சர்வதேச பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், வட்டி விகித குறைப்புகள், புவிசார் அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தீவிர கொள்முதல் என பலரும் தங்கம் விலை உயர காரணமாக இருக்கின்றன. இது தொடர்ந்து அடுத்த ஆண்டிலும் விலை ஏற காரணமாக அமையலாமோ என்ற கேள்வியே பலரிடத்திலும் காணப்படுகிறது. பல நிபுணர்களும் தொடர்ந்து விலை அதிகரிக்கும் என்றே கணித்து வருகின்றனர். சிலர் நிபுணர்கள் அவுன்ஸூக்கு 5,000 டாலர்கள் வரையில் கூட உச்சம் தொடலாம் என கணித்துள்ளனர். ஆனால் இந்த கணிப்புகளுக்கு மத்தியில், தங்கத்தின் சரிவு குறித்த எச்சரிக்கை மணியையும் அடிக்கத் தவறவில்லை. சில நிபுணர்கள் தங்கத்தின் விலையில் பெரும் வீழ்ச்சி வரலாம் என கணித்துள்ளனர். இது ஒரு புறம் கேட்க மிக மகிழ்ச்சியாக இருந்தாலும், நம்ப முடியாத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஆபரணத் தங்கத்தின் தேவை மிக அதிகம். ஆக இங்கு தேவையை ஊக்குவிக்கும் பொருட்டு உள்நாட்டு வரிக் கொள்கைகளில் அரசுகள் சீர்திருத்தம் செய்யலாம். இது அவற்றின் விலையில் சரிவைப் ஏற்படுத்தலாம் என நம்புகின்றனர். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் 2026ல் தங்கத்தை வாங்கலாமா அல்லது வேண்டமா, அடுத்து என்ன செய்யலாம். 2026ல் எதில் முதலீடு செய்யலாம் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
எதிர்பார்ப்பு?
ஆங்கில செய்தித்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள கணிப்பின் படி, நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என ஆர்பிசி கேப்பிட்டல் கணித்துள்ளது. அது நீண்ட கால இலக்கு விலையை 2026ல் அவுன்ஸூக்கு சராசரியாக 4,600 டாலர்களாகவும், 2027ல் 5,100 டாலர்களாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது தொடர்ந்து இன்னும் பல உச்சங்களைக் எட்ட வாய்ப்பிருப்பதையே காட்டுகிறது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள், வர்த்தக மோதல்கள், தொழில் நுட்ப பனிப்போர், உலகளாவிய அரசியல் பிரச்சனைகள், மத்திய வங்கிகளின் கொள்முதல் என பலவும் காரணமாக இருக்கலாம் என நம்புகிறது.
சர்வதேச அளவில் பல நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில், பல நாடுகளும் அமெரிக்க டாலரை பெரிதும் சார்ந்திருப்பதை குறைக்க திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாக டாலர் இருப்புகளை விற்பனை செய்து, தங்கள் கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை அதிகரிக்கவும் செய்கின்றன. இதுவும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
என்ன செய்யலாம்?
அதேசமயம் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து சீனா அரசு தங்க நகைகளுக்காக வரி சலுகைகளை நீக்கிவிட்டது. இதனால் மக்கள் கூடுதல் வரி செலுத்தி வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலையும் உச்சத்தில் இருப்பதால், விற்பனை சரிவைக் கண்டுள்ளது. மேற்கொண்டு இனி வரும் ஆண்டிலும் தேவையை குறைக்க வழிவகுக்கலாம். இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாமோ என்ற பெருத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமெரிக்க டாலர் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க பத்திர சந்தை உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் முதலீடுகள் அதிகரிக்கலாம். இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நீண்ட கால காரணிகள் பலவும் தங்கத்திற்கு ஆதரவாக இருப்பதால், விலை குறையும்போது அதை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். எது எப்படி இருப்பினும் சரியான ஆலோசனையுடன் முடிவெடுப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article Story first published: Monday, December 15, 2025, 12:49 [IST] Other articles published on Dec 15, 2025
