மகளிர் உரிமைத் தொகை 2.0 : நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்!! யாருக்கெல்லாம் ரூ.1,000 கிடைக்கும்?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 11, 2025, 14:57 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது .
தமிழ்நாட்டில் திமுக அரசின் பிரதான திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இந்த திட்டம் திமுகவுக்கு மகளிர் வாக்குகளை அள்ளி தந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்து திட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன் பெற்று வருகின்றனர் . திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.

புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் , தகுதி இருந்தும் தங்களுடைய பெயர் நிராகரிக்கப்பட்டதாக கூறுபவர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்திருந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தியது .
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் லட்சக்கணக்கான பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வேண்டும் என உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்தனர் . இவ்வாறு புதிதாக விண்ணப்பம் செய்தவர்களில் தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்க அரசு அதிகாரிகளை நேரடியாக களத்திற்கே சென்று ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டுமே இந்த உரிமை தொகை என்பது கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது . பலருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் வகையில் தகுதிகளிலும் சில தளர்வுகளை அரசு கொண்டு வந்தது. அந்த வகையில் புதிதாக இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி நாளை நடக்க இருக்கிறது.
Also Read
மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கிவைக்கிறார் . இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிவப்படுத்திய துளசிமதி முருகேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் ,விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர் ,தோழி விடுதிகள் போன்ற திட்டங்களால் பயன்பெற்ற மற்றும் சாதனைப் பெண்களின் வெற்றி கதையை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக வெல்லும் தமிழ் பெண்கள் என்ற ஒரு நிகழ்ச்சியும் இதனுடன் நடத்தப்பட இருக்கிறது.
Recommended For You
பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3, 000 வழங்க தமிழக அரசு முடிவு?
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பெண்களுக்கு அது தொடர்பான குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டு விடும். திட்டத்தில் தேர்வு செய்யப்படாத நபர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணம் என்ன என்பது குறுஞ்செய்தியில் அனுப்பி வைக்கப்படும். எனவே பெண்கள் போனில் வரும் குறுஞ்செய்திகளை கவனமாக பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Share This Article English summary
CM Stalin to inaugurate the Magalir urimai thokai Scheme 2.0 from Friday
Tamilnadu CM Stalin to inaugurate the Magalir urimai thokai Scheme 2.0 from Friday. New applicants in this scheme will receive their 1000rs urimai thokai in their bank accounts directly. Story first published: Thursday, December 11, 2025, 14:57 [IST] Other articles published on Dec 11, 2025
