தமிழ்நாட்டில் மெகா திட்டத்துடன் களமிறங்கும் ரிலையன்ஸ்!! அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 13:24 [IST] Share This Article
தமிழ்நாடு அரசு பெரிய அளவிலான நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. வாகன உற்பத்தி, வாகன உதிரி பாக உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மின்சார வாகனங்கள் , தோல் பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி என தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாடு அரசு மற்ற துறைகளிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழ்நாட்டை தொழில் மையமாகவும் உற்பத்தி மையமாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் உள்நாட்டு மற்றும், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை பெறுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த முயற்சிகளின் பலனாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய அளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது.

மதுரையில் இன்று நடைபெற்ற TN Raising முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 11,760 கோடி ரூபாய் முதலீட்டில் பயோ எனர்ஜி ஆலைகளை அமைக்க உள்ளது. இந்த ஆலைகள் மூலம் தமிழ்நாட்டில் 7000 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

ரிலையன்ஸ் குழுமம் கடந்த 2023ஆம் ஆண்டு தான் ரிலையன்ஸ் பயோ எனர்ஜி என்ற நிறுவனத்தை தொடங்கியது. இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பயோ எனர்ஜி உற்பத்தி நிறுவனமாக இது இருக்கிறது. முதல் கட்டமாக கம்பிரஸுடு பயோ கேஸ் ஆலையை குஜராத்தில் நிறுவியுள்ளது. அண்மையில் ஆந்திராவிலும் ஒரு பயோ கேஸ் ஆலையை அமைத்தது.
Also Read
2026இல் தான் தங்கத்தோட உண்மையான ஆட்டமே இருக்கு!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!
தற்போது தமிழ்நாட்டிலும் பயோ எனர்ஜி ஆலைகளை அமைப்பதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் குழுமம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகப்படுத்தி கார்ப்ன வெளியீட்டை பூஜ்ஜியமாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக தொடங்கப்பட்டது தான் பயோ கேஸ் எனர்ஜி நிறுவனம். இதன் ஆலைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து வருகிறது.
Recommended For You
இண்டிகோ விமான சேவை ரத்து: ஏர்போர்ட்டில் சிக்கி தவிக்கும் மணமகன்.. வைரலாகும் வீடியோ!!
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கூட ரிலையன்ஸ் நிறுவனம் 1156 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் உணவு பொருள் தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. தூத்துக்குடியில் உள்ள அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் மசாலா, சிற்றுண்டி பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளதாக தெரிவித்தது. இதன் மூலம் உள்ளூரை சேர்ந்த 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
Share This Article English summary
Reliance Industries Ltd going to setup Bio Energy plants across TamilNadu
Reliance Industries Ltd going to setup Bio Energy plants across TamilNadu with investment of Rs 11,760 Cr. Story first published: Sunday, December 7, 2025, 13:24 [IST] Other articles published on Dec 7, 2025
