இண்டிகோவால் கைவிடப்பட்ட பயணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்திய ரயில்வே: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 10:38 [IST] Share This Article
நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது . இதன் காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் தங்களுடைய பயணத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் இண்டிகோ விமான சேவை ரத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு என இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கிறது .
இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக முக்கிய வழித்தடங்களில் 84 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்திருக்கிறது. சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன . தென்னக ரயில்வேயும் தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

விமானிகள், விமான பணியாளர்களுக்கான பணி நேர கட்டுப்பாடு தொடர்பாக டிஜிஏஐ கொண்டு வந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் இண்டிகோ நிறுவனம் பெரிய சிக்கலை சந்தித்து இருக்கிறது . இதன் காரணமாக விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது .எனவே நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன .
இதன் காரணமாக கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை முன்னிட்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் திட்டங்கள் அனைத்துமே தற்போது நாசமாகிவிட்டன. தொழில் ரீதியாகவும் , வேலை ரீதியாகவும் , தனிப்பட்ட தேவைகளுக்காகவும் பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களுடைய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் மாற்று போக்குவரத்து முறைகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகள் தடையின்றி தங்களுடைய பயணங்களை தொடரக்கூடிய வகையில் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை ரயில்வே துறை இயக்கி வருகிறது. நாடு முழுவதும் கூடுதலாக 84 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
Also Read
இண்டிகோ விமானம் ரத்து: விமானநிலையத்தில் சிக்கி கொண்ட மணமக்கள்!! அப்புறம் நடந்தது தான் டிவிஸ்டு!!
மும்பை புதுடெல்லி, மும்பை கோவா ,லக்னோ மும்பை , நாக்பூர் , கோரக்பூர் மும்பை ஆகிய வழி தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன என தெரிவித்து இருக்கிறது. அதேபோல 37 ரயில்களில் கூடுதலாக 116 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சதாப்தி மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் கூடுதலாக ஏசி பெட்டிகளும் , சேர் கார்களும் சேர்க்கப்பட்டுள்ளன .
புதிய ரயில்கள் மற்றும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டதை அடுத்து ஒரு நாளைக்கு கூடுதலாக 35 ஆயிரம் பேர் பயணிக்க முடியும் என ரயில்வே தெரிவித்து இருக்கிறது. நிலைமை சீராகும் வரையில் இந்த கூடுதல் ரயில்களும் ரயில் பெட்டிகளும் பயன்பாட்டில் இருக்கும் என தெரிவித்து இருக்கிறது.
Recommended For You
லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!!
தெற்கு ரயில்வே பிரிவிலும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து தெலுங்கானாவுக்கு நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல திருச்சி ஜோத்பூர் , சென்னை சென்ட்ரல் திருவனந்தபுரம், மும்பை -சென்னை கடற்கரை ஆகிய ரயில்களில் கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Share This Article English summary
Indigo flight issue: Indian Railways announces special trains
IndiGo’s mass cancellations and sky-high fares have grounded lakhs of people. Indian Railways has come to the rescue by adding coaches to ferry additional passengers. Story first published: Sunday, December 7, 2025, 10:38 [IST] Other articles published on Dec 7, 2025
