Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!!
News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, December 5, 2025, 17:48 [IST] Share This Article
உலகின் மிகப்பெரிய புட்பால் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமுக வலைத்தளத்தில் எந்த அளவுக்கு பிரபலம் என்பது சொல்லி தெரிய தேவையில்லை. ஒவ்வொரு போஸ்ட்-க்கும் பல மில்லியன் டாலர் சம்பாதிக்கும் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் அல்லாமல் பல பிராண்டாகளுக்கும் அம்பாசிட்டராகவும் உள்ளார்.
இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஒரு டெக் நிறுவனம், அதுவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

2022ல் துவங்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி நிறுவனத்தில்கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு, அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். பெர்ப்ளெக்சிட்டி தற்போது ஏஐ துறையில் முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது, குறிப்பாக இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இது சென்னை பையன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உருவாக்கியுள்ளார்.
பெர்ப்ளெக்சிட்டி செப்டம்பரில் திரட்டிய 200 மில்லியன் டாலர் முதலீடு மூலம் 20 பில்லியன் டாலர் மதிப்பை அடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இளம் தலைமுறையினரை அடையும் வகையில் பெர்ப்ளெக்சிட்டி ரொனால்டோ போன்ற பிரபலங்கள் உடன் கைகோர்த்து வருகிறது. இந்த ஒப்ந்தம் மூலம் ரொனால்டோ இந்நிறுவனத்தின் பயனர் அந்தஸ்திலிருந்து இப்போது முதலீட்டாளராக உயர்ந்துள்ளார்.
இந்தக் கூட்டணியின் முக்கிய அம்சமாக, ரொனால்டோவுக்கான தனிப்பயன் ஏஐ உதவியாளர் “ரொனால்டோ ஹப்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது perplexity.ai/ronaldo என்ற இணையதளத்தில் கிடைக்கும். ரசிகர்கள் இதன் மூலம் ரொனால்டோவின் தனிப்பட்ட புகைப்படங்களை பார்க்கலாம். இந்த ஹப், “பெர்ப்ளெக்சிட்டி x CR7” என்று பிராண்ட் செய்யப்பட்டு,
பெர்ப்ளெக்சிட்டியின் தலைவர் மற்றும் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் ரொனால்டோ ஆகியோ இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இப்புதிய கூட்டணி குறித்து பதிவிட்டு உள்ளனர்.
இந்தக் கூட்டணியை கொண்டாடடும் வகையில், பெர்ப்ளெக்சிட்டி யூடியூபில் ஒரு சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. தற்போது இதுவும் டிரெண்டாகி வருகிறது.
Share This Article English summary
Cristiano Ronaldo Invests in Perplexity AI & Becomes Brand Ambassador
Football legend Cristiano Ronaldo has invested an undisclosed amount in $20 billion-valued AI search startup Perplexity and joined as global brand ambassador. Story first published: Friday, December 5, 2025, 17:48 [IST] Other articles published on Dec 5, 2025
