Breaking: மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!

urimai2-1764902805

  செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!

News oi-Devika Manivannan By Published: Friday, December 5, 2025, 8:23 [IST] Share This Article

தமிழ்நாடு அரசு குடும்ப வருமானத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகளை தேர்வு செய்து மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக பெற்று வருகிறது.

திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலேயே 1000 ரூபாய் பணம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக பல பெண்கள் புகார் கூறினர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரினர்.

மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தியது. தகுதி வாய்ந்த பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்தது. லட்சக்கணக்கான மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 10000 முகாம்கள் நடத்தப்பட்டன.

Also Readகாலேஜ் டிகிரி எல்லாம் இந்த காலத்துக்கு தேவையே இல்லை, அமெரிக்காவ பாருங்க - ஸ்ரீதர் வேம்பு!!காலேஜ் டிகிரி எல்லாம் இந்த காலத்துக்கு தேவையே இல்லை, அமெரிக்காவ பாருங்க – ஸ்ரீதர் வேம்பு!!

இந்நிலையில் புதிதாக விண்ணப்பம் செய்த மகளிருக்கு அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா என தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். நிறைய பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வண்ணம் அரசு விதிகளிலும் தளர்வுகளை கொண்டு வந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுபட்ட மகளிருக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்த லட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது ஒரு புறம் இருக்க அதிகாரிகள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை கள ஆய்வு செய்தனர். வருவாய் துறை அதிகாரிகள் விண்ணப்பம் செய்த மகளிரின் வீடுகளுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தான் யாருக்கு எல்லாம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது என்ற பட்டியல் தயாராகி விட்டதாக தெரிகிறது.

Recommended For You20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!

இந்நிலையில் மீண்டும் ஒரு நற்செய்தியை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 27 மாதங்களாக 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம் 12-ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் மேலும் பலர் இந்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை பெற உள்ளனர் என அறிவித்துள்ளார்.

Share This Article English summary

Magalir urimaithokai: Tamilnadu Deputy CM Udhayanidhi gives major update  

Tamilnadu deputy Chief Minister Udhayanidhi Stalin announces that those who have applied for Magalir Urimai thokai via Ungaludan Stalin camp will receive 1000rs from December12. Story first published: Friday, December 5, 2025, 8:23 [IST] Other articles published on Dec 5, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *