புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!!

putinf1-1764841573

  செய்திகள்

புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!!

News oi-Devika Manivannan By Published: Thursday, December 4, 2025, 15:17 [IST] Share This Article

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய பயணம் உலகமே உற்றுநோக்கக் கூடிய ஒரு பயணமாக மாறி இருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தக மோதலுக்கு மத்தியில் புதினின் இந்திய பயணம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கிய கூட்டாளிகளாக தான் இருக்கின்றன. டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை மேலும் இந்தியாவை ரஷ்யாவுடன் நெருங்கச் செய்திருக்கிறது.

புதினின் இந்த பயணத்தில் இரு நாடுகளின் உறவு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக அதிகரித்து இருக்கிறது . பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற நோக்கத்தில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பங்குகள் எல்லாம் இன்றைய தினம் பங்குச்சந்தையில் உயர்ந்தன.

புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!!

இன்று மாலை 6.35 மணிக்கு இந்தியா வந்தடையும் ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் விருந்து வழங்குகிறார் . நாளைய தினம் இந்திய ரஷ்யா உச்சி மாநாடு நடைபெறுகிறது . இதனை அடுத்து குடியரசு தலைவர் சார்பில் புதினுக்கு சிறப்பு விருந்தும் வரவேற்பும் வழங்கப்பட இருக்கிறது. பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ளன .

Also Read20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!

புதின் இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் இந்திய சந்தையில் ஒன்று நடக்கும். அதாவது புதினின் பயணத்திற்கு பின் இந்திய பங்குச்சந்தைகள் சரியும். இதற்கு முன் நிகழ்ந்த தரவுகளே அதனை நமக்கு உணர்த்துகின்றன. கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார் புதின். அவர் வருகை தந்த அந்த அக்டோபர் இரண்டு முதல் ஐந்தாம் தேதி வரையிலான மூன்று நாட்களில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15 சதவீதம் சரிவை கண்டது.

புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!!

அடுத்ததாக 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 3 , 4, 5 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார் புதின் அப்போது தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃபடி 4 சதவீதம் சரிவை கண்டது . 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஒரு நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது நிஃப்டி 1.5% சரிவை கண்டது. 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டார் அப்போதும், 2018 ஆம் ஆண்டு அக்டோபரிலும் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது நிஃப்டி தலா 5% சரிவை சந்தித்தது.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி புதின் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார் . அந்த சமயத்தில் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 3.5 சதவீதம் சரிவை கண்டது . இந்த முறை ஏற்கனவே சந்தை சரிவில் இருக்கிறது. புதினின் பயணம் என்ன மாற்றத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Recommended For Youஇனி இந்த காரணங்களுக்கு கூட H1B விசா விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்: டிரம்ப் நிர்வாகம்இனி இந்த காரணங்களுக்கு கூட H1B விசா விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்: டிரம்ப் நிர்வாகம்

நிஃப்டி கடந்த மாத இறுதியில் அதாவது நவம்பர் 27ஆம் தேதி தான் 26,310 என வரலாற்று உச்சத்தை தொட்டது . அதன் பிறகு தொடர்ந்து சரிந்தது. டிசம்பர் தொடங்கியது முதலே பங்குச்சந்தை சரிவில் தான் இருக்கிறது. இந்த சமயத்தில் புதினின் பயணமும் அமைந்துள்ளது. இவருடைய வருகை என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நாளை மற்றும் திங்கள் கிழமை பங்குச்சந்தையில் தெரிய வரும்.

Share This Article English summary

Indian share markets and Vladimir Putin: the never ending bond

As Indian share markets are already in declining mode, Putin’s visit sparks discussion among investors, data shows that, during all his previous visits Nifty always came down. Story first published: Thursday, December 4, 2025, 15:17 [IST] Other articles published on Dec 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *