மீண்டும் வேலையை காட்டிய மத்திய வங்கிகள்!! ரூ.1 லட்சத்தை தாண்டுகிறதா ஒரு சவரன் தங்கம்? – Allmaa

gold76-1764825169

  செய்திகள்

மீண்டும் வேலையை காட்டிய மத்திய வங்கிகள்!! ரூ.1 லட்சத்தை தாண்டுகிறதா ஒரு சவரன் தங்கம்?

News oi-Devika Manivannan By Published: Thursday, December 4, 2025, 10:46 [IST] Share This Article

இந்த ஆண்டு தங்கம், வெள்ளிக்கான ஆண்டு என கூறும் அளவுக்கு பங்குச்சந்தை, பத்திரங்கள் உள்ளிட்ட முதலீடுகளை எல்லாம் கடந்து இந்த இரண்டு உலோகங்களும் அதிக லாபம் தந்துள்ளன.

ஜனவரி மாதம் முதலே தங்கம் விலை உயர்ந்தாலும் செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் வரலாற்று உச்சத்தை எட்டின. சென்னையில் அக்டோபர் மாதம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 98,000 ரூபாயை நெருங்கியது. இதன் பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நவம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை மாத இறுதியில் ஏற்றத்தை சந்தித்தது.

மீண்டும் வேலையை காட்டிய மத்திய வங்கிகள்!! ரூ.1 லட்சத்தை தாண்டுகிறதா ஒரு சவரன் தங்கம்?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் 12,020 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை 2 லட்சம் ரூபாயாக உள்ளது. நவம்பரில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 89 ஆயிரம் ரூபாய் வரை சரிந்த நிலையில் தற்போது 96000 ரூபாய்க்கு வந்து நிற்கிறது . இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் உயர்ந்தால் தன்னுடைய வரலாற்று உச்சத்தை தங்கம் விலை எட்டி விடும்.

Also Readதங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!தங்கம் வாங்கும் போதே லாபம் பார்க்கணுமா? இந்த இரண்டு ஆப்ஷன் தான் பெஸ்ட்!!

தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அக்டோபர் மாதத்தில் அதிக அளவில் தங்கத்தை வாங்கி இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக மத்திய வங்கிகள் வங்கியில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 53 டன்கள் தங்கத்தை வாங்கி இருப்பதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது .

மீண்டும் வேலையை காட்டிய மத்திய வங்கிகள்!! ரூ.1 லட்சத்தை தாண்டுகிறதா ஒரு சவரன் தங்கம்?

போலந்து நாட்டு மத்திய வாங்கி அதிக தங்கத்தை வாங்கி இருக்கிறது . செப்டம்பர் , அக்டோபர் என இரண்டு மாதங்களிலுமே மத்திய வங்கிகள் 50 டன்களுக்கு மேல் தங்கம் வாங்கி இருக்கின்றன. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் அக்டோபர் மாத இறுதிவரை 254 டன்கள் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கி இருக்கின்றன .இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட தகவல். மறைமுக தங்க வர்த்தகமும் நடைபெறுவதால் உண்மையான அளவு இதனை விட அதிகமாகவே இருக்கும்.

மதுரை, திருச்சி, கோவையில் இன்று தங்கம் விலை என்ன?

சீனா , டாலரின் மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் தங்க இருப்பை அதிகரிக்கிறது. பல்வேறு நாடுகளும் இதே பாணியை பின்பற்ற தொடங்கியுள்ளன. உலக பொருளாதார சூழல், வட்டி குறைப்பு , வர்த்தக மோதல் ஆகியவை தங்க விலை உயர்வுக்கு 50% காரணம் என்றால் மத்திய வங்கிகளால் ஏற்படும் டிமாண்ட் தங்கம் விலை உயர்வுக்கு 50% காரணம் ஆகும். இப்படி மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் போக்கும் குறையவே இல்லை என்றால் தொடர்ந்து தங்கம் டிமாண்ட் அதிகரித்து அதன் விலையும் உயரும். இப்போதே விலை 97,000 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதால் ஆபரண தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை கடக்க வாய்ப்புள்ளது.

Share This Article English summary

Central bank demand for gold remained robust in October – world gold council

Central bank demand for gold remained robust in October, totalling 53t and continuing the strong trend seen throughout the year, Says WGC’s latest report. Story first published: Thursday, December 4, 2025, 10:46 [IST] Other articles published on Dec 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *