வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறி வைத்து நடக்கும் நூதன மோசடி!! மக்களே உஷார்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 3, 2025, 8:40 [IST] Share This Article
வாடகைக்கு வீடு வேண்டும் என்றால் நாம் தெரு தெருவாக சென்று எங்கெல்லாம் டூலெட் போர்டு போட்டு இருக்கிறது என பார்த்து விசாரிப்போம். ஆனால் இப்போதெல்லாம் அந்த அவசியம் கிடையாது. பல்வேறு செயலிகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாகவே நாம் வாடகைக்கு வீடு தேடிக் கொள்ள முடியும்.
நம் வீட்டில் அமர்ந்தபடியே எந்த பகுதியில் எவ்வளவு வாடகையில் நமக்கு வீடு வேண்டும் என்பதை உள்ளீடு செய்தாலே குறிப்பிட்ட அந்த ஏரியாவில் அந்த குறிப்பிட்ட தொகைக்கு எத்தனை வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம், வீட்டின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இணையதளங்களே நமக்கு காட்டிவிடும். அந்த வகையில் வாடகைக்கு வீடு தேடுவது எளிமையானதாக மாறியிருக்கிறது. அதே வேளையில் இதனை வைத்து தற்போது மோசடி செய்வதும் அதிகரித்து இருக்கிறதாம்.

பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் ஒரு பிரபலமான ஆன்லைன் தளம் வழியாக வாடகைக்கு வீடு தேட முயற்சித்த போது தன்னை எப்படி மோசடியாளர்கள் ஏமாற்ற முற்பட்டனர். அதிலிருந்து தான் எப்படி தப்பித்தேன் என்பது குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறார். பெங்களூருவின் வாடகை மோசடி என்ற பெயரில் பதிவு செய்திருக்கும் அவர் புகழ்பெற்ற இணையதளங்கள் மற்றும் செயலிகள் வாயிலாக தற்போது மோசடியாளர்கள் புதுயுக்தியை கையாள தொடங்கி இருக்கின்றனர் எனக் கூறியிருக்கிறார் .
ஜே.பி நகர் பகுதியில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடினை தான் தேடி வந்ததாகவும் அப்போது உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் கொண்டு இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு குறித்த ஒரு பதிவினை பார்த்ததாகவும் அதனை கிளிக் செய்த போது வாடகை 15000 ரூபாய் என போட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். ஜேபிநகர் பகுதியில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வெறும் 15000 ரூபாய் தானா என அதை பார்த்த உடனே அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சரி என்னதான் என பார்ப்போம் என அந்த பதிவை கிளிக் செய்து சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு இருக்கிறார் . அப்போது குறிப்பிட்ட அந்த நபர் 15 ஆயிரம் ரூபாய் வாடகை , உங்களுக்கு வீட்டிலேயே டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும் என கூறினாராம். இதைக் கேட்ட உடனே இந்த நபருக்கு இன்னும் சந்தேகம் வலுத்து இருக்கிறது.
Also Read
இனி இஷ்டத்துக்கு வீட்டு வாடகை உயர்த்த முடியாது, 2 மாத வாடகை மட்டுமே டெபாசிட்டாக கேட்க வேண்டும்..!!
வீட்டு உரிமையாளர் என பேசிய நபர் எங்களுடையது ஒரு கேட்டட் சொசைட்டி இங்கே நீங்கள் நேரடியாக வந்து வீட்டை பார்வையிட்டு விட முடியாது , அதற்கென ஒரு ஐடி கார்டு உருவாக்கி உங்களுக்கு நான் தர வேண்டும் அப்பொழுதுதான் உங்களை உள்ளே விடுவார்கள் என கூறினாராம். இந்த ஐடி கார்டை பெறுவதற்கு உங்களுடைய புகைப்படம் மற்றும் ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை தேவை என கூறினாராம். இதனை அடுத்து வேறு என்ன வேண்டும் என கேட்டதற்கு நீங்கள் எனக்கு 2500 ரூபாய் பணம் அனுப்ப வேண்டும் நீங்கள் வீட்டை வந்து பார்த்து சென்றவுடன் நாங்கள் அதனை உங்களுக்கு திரும்ப அனுப்பி விடுவேன் இது அந்த ஐடி கார்டை உருவாக்குவதற்கான பணம் எனக் கூறினாராம்.
Recommended For You
புது கார் வாங்குனா அரசே உங்களுக்கு பணம் தருமா? இத்தன நாளா இது தெரியாம போச்சே!!
அப்பொழுதுதான் இவருக்கு அவர்கள் குறித்து அனைத்து விவரங்களும் தெரிய வந்திருக்கிறது. நம்மிடம் 2500 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு அவர்கள் தப்பி சென்று விடுவார்கள் நீங்கள் வீட்டை பார்க்கலாம் என அந்த இடத்திற்கு போனால் உங்களை உள்ளே விட மாட்டார்கள் , உங்களுக்கென எந்த ஒரு ஐடி கார்டையும் கொடுக்க மாட்டார்கள் . அது தவிர உங்களுடைய அடையாள அட்டையை பகிர்ந்து இருக்கிறீர்கள் என்பதால் அதை வைத்து அவர்கள் எந்த மோசடியில் வேண்டுமானாலும் ஈடுபடலாம் என கூறி இருக்கிறார்.
எனவே ஆன்லைன் தளங்களில் நீங்கள் வீடு பார்க்கும் போது ஒரு பிரதானமான பகுதியில் குறைந்த வாடகையில் வீடு வழங்குகிறார்கள் அல்லது இதுபோல உங்களை வீடு பார்க்க வருவதற்கே அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கேட்கிறார்கள் முன்கூட்டியே ஒரு பணத்தை கொடுங்கள் என கூறுகிறார்கள் என்றால் உஷாராகிவிடுங்கள். இவை அனைத்தும் மோசடி இதனை நம்பாதீர்கள் தற்போது மோசடியாளர்கள் இதுபோன்ற செயலிகள் வாயிலாக தான் மக்களை ஏமாற்றுகிறார்கள் என கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பதிவாக அமைந்திருக்கிறது.
Share This Article English summary
Are you looking for Rental home? Here is the new scam that is targeting you
A Bengaluru resident posting on Reddit about the new kind of rental scam targeting people hunting for reasonably priced apartments is gaining attention. Story first published: Wednesday, December 3, 2025, 8:40 [IST] Other articles published on Dec 3, 2025
